Saturday, October 9, 2010

மணப்பெண்

1. "இந்த ஹோட்டல்ல ரேஷன் அரிசியைக் கடத்திக்கிட்டு வந்து சமையல் பண்றாங்களோ...?"
"ஏன் கேக்கறீங்க?"
"போர்டுல அளவு சாப்பாடு" ன்னு எழுதாம, "களவு சாப்பாடு" ன்னு எழுதியிருக்காங்களே!"

2. "என்ன.... மணப்பெண், கையில குழந்தையோட உட்கார்ந்திருக்கா...?"
"நான் சொன்னேன்ல... போன வருடம் நிச்சயித்த கல்யாணமுன்னு!"

3. "தலைவருக்கு வந்திருக்கறது பன்றிக் காய்ச்சல் தான்னு எதை வச்சு சொல்றே..?"
"அரசியல் ஒரு சாக்கடைன்னு அவர்தான் அடிக்கடி சொல்வாரு!"

4. "மன்னர் சுயசரிதை எழுதி வெளியிட்டு இருக்காராமே.... படித்தீர்களா?"
"முழுக்க ஒரே புண்ணும் ரன்னும்தான்!"

5. "பத்துக்குள்ள ஒரு நம்பரைச் சொல்லச் சொன்னா, அவர் ஏன் "ஏழு டி"ங்கறார்...?"
"அவர் பஸ் கண்டக்டராச்சே!"


No comments:

Post a Comment