1. "நம்ம தலைவர் தூக்கத்துல நடந்து, நடிகை நளினாஸ்ரீ வீட்டுக்குப் போயிட்டாராமே...?"
"அவர் போனது தூக்கத்துல இல்ல.... ஏக்கத்துல!"
2. "கோடை விடுமுறையைக் கொண்டாட கபாலிக்கிட்ட ஐடியா கேட்டது தப்பாப் போச்சா... ஏன்?"
"ஜெயிலை சுத்திப் பார்க்கலாம்... வாங்கன்னு கூப்பிடறான்!"
3. "இவர் மெகா சீரியல் தயாரிப்பாளரான்னு சந்தேகமா இருக்கு..."
"ஏன் சார்..?"
"கதையை ரெண்டு வரியில சொல்லச் சொல்றாரே!"
4. "உட்கார்ந்து பேசினா நமக்குள்ள சண்டையே வராது அத்தே..."
"அது வேண்டாம்னு தானே நின்னுக்கிட்டே கத்தறேன்...!"
5. "நாம எடுக்கற லவ் சப்ஜெக்ட் படத்தோட முடிவு சோகமா இருக்கும்..."
"ஹீரோவும் ஹீரோயினும் தற்கொலை பண்ணிக்கறாங்களா?"
"இல்ல ... ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறாங்க!"
No comments:
Post a Comment