Saturday, October 9, 2010

இளவரசர்


1. "என்னப்பா சர்வர்... வெளியில மெனு போர்டுல "தயிர்வடை"ன்னு எழுதறதுக்குப் பதிலா "தயிர்வாடை"ன்னு தப்பா
எழுதியிருக்கு..?"
"சரியாதான் எழுதியிருக்கு.... தயிர்வடை போட்டு ஒரு வாரம் ஆகுதே!"

2. "இளவரசர் தோற்றத்தில் மன்னர் போலவே உள்ளார்..."
"தோற்றத்திலா... அல்லது தோற்றதிலா"

3. "அவர் சீலிங் ஃபேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?"
"எப்போ கேட்டாலும், "தலைக்கு மேல வேலை இருக்கு"ன்னு சொல்றாரே!"

4. "டாக்டர்... ஆபரேஷனுக்கு அப்புறம் ஒரு கஷ்டமும் இருக்காதே..."
"இருக்காதுய்யா ... நான் வாங்கின கடனையெல்லாம் அடைச்சிடுவேன்!"


No comments:

Post a Comment