குடிநீர் சந்தை
தமிழகத்தில் எங்கு நோக்கினாலும் "தண்ணீர் பஞ்சம்". வெயில் கொடுமையைக் காட்டிலும் அது ஏழை, எளிய நடுத்தர மக்களைப் பெரிதும் வாட்டுகிறது. விளைவு செயற்கையான முறையில் "குடிநீர் பஞ்சத்தையும்" உருவாக்கி நம்மை அவதிக்குள்ளாக்கி விட்டார்கள்.
"தண்ணீர் பஞ்சம்" என்பது பருவமழை பொய்த்துவிடுவதால், நில நீர், நதி நீர், காடுகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பால் வருவதாகும். ஆனால் "குடி நீர் பஞ்சம்" என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. "நீர்" என்பது விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும், மனிதர்கள், மற்றும் பிற உயிரினங்களுக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுவதாகும். அது ஒரு இயற்கையின் நன்கொடை. யாராலும் உற்பத்தி செய்யப்படும் பொருளல்ல.
காற்றுக்கு அடுத்தப்படியாக உயிர்வாழ்தலுக்கு குடிநீர் பிரதான பங்கை வகிக்கிறது. உணவின்றி ஒருவர் மாதம் வாழலாம். ஆனால் குடிநீரின்றி மூன்று நாட்களுக்கு மேல் ஒருவர் வாழ முடியாது. குடிநீரானது மனிதர்களுக்கு இரண்டுவகையில் பயன்படுகிறது. ஒன்று - குடிப்பதற்கும் சமைப்பதற்கும், மற்றொன்று - குளித்தல், துவைத்தல், கழிவிடங்கள் மற்றும் இதர பயன்பாட்டுக்கு.
குடிநீர் பயன்பாட்டு அளவு:-
நல்ல பாதுகாப்பான குடிநீர் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 8 லிட்டர் தேவைப்படுகிறது. அதாவது குடிப்பதற்கு 3 லிட்டரும் சமைப்பதற்கு 5 லிட்டரும் அத்யாவசியமாகத் தேவைப்படுகிறது. இதர பயன்பாட்டிற்கு வாழும் பகுதியைப் பொறுத்து அட்டவணை 1ல் கண்டவாறு வேறுபடுகிறது. இது அரசு நிர்ணயம் செய்த அளவீடாகும்.
அட்டவணை - 1:
குடிப்பதற்கும் சமைப்பதற்கும்
இதர பயன்பாட்டுக்கு
மொத்தம்
(ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு)
நகர பேரூராட்சி நகராட்சி
மாநகராட்சி
3+5=8 
3+5=8
3+5=8
3+5=8
3+5=8
3+5=8
3+5=8
47 லிட் 
62 லிட்
82 லிட்
132 லிட்
62 லிட்
82 லிட்
132 லிட்
55 லிட்
70 லிட்
90 லிட்
140 லிட்
70 லிட்
90 லிட்
140 லிட்
மேற்கண்ட அளவீடுகளை அடிப்படையாக வைத்துத்தான் குடிநீர்த் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. மத்திய அரசு நிதி உதவி பெறும் திட்டங்களுக்கு கிராமங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 8+32 = 40 லிட்டர் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியின் போதுதான் கிராமங்களுக்கு 40 லிட்டர் குடிநீர் என்பதை 55 லிட்டராக உயர்த்தினார்கள். அதாவது மத்திய அரசு நிதி உதவி என்றால் 40 லிட்டர், மாநில அரசு நிதி உதவி என்றால் 55 லிட்டர்.
குடிநீர்த் திட்டங்களின் காலம்:-
குடிநீர்த்திட்டங்கள் தயாரிக்கப்படும் நாளில் இருந்து, சரியாக முப்பதாவது ஆண்டில் எவ்வளவு மக்கள் தொகை பெருகும் என்பதை கணக்கில் எடுத்து, முப்பதாவது வருடத்தில் பிறக்கும் குழந்தைக்கும் சேர்த்துதான் எல்லா ஊர்களுக்கும் குடிநீர்த் திட்டங்களை தயாரித்து அனுமதி வழங்குகிறார்கள்.
ஒரு வேடிக்கை என்னவெனில், தற்போது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையை விருப்பம் போல் கூடுதலாகப் போட்டு முப்பதாவது ஆண்டுக்கான மக்கள் தொகை பெருக்கத்தை கணக்குப் போடுவார்கள். மேற்கண்ட அடிப்படையில்தான் ஒரு ஊருக்கு ஒட்டு மொத்த நீரின் தேவை, ஆதாரக் கிணறு, பிரதானக் குழாய்கள், சுத்திகரிப்பு நிலையம், நீரேற்று நிலையம், மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டிகள், மற்றும் பகிர்மான குழாய் ஆகியவற்றை வடிவமைப்பு செய்வார்கள். வடிவமைப்பின் கணக்குப்படிப் பார்த்தால் 30 ஆண்டுகளுக்கு அந்த ஊரில் குடிநீர் பஞ்சமோ, தண்ணீர் பஞ்சமோ வரக்கூடாது.
ஆனால் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பத்தாண்டுகளிலேயே தண்ணீர் பஞ்சம் தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை. பல ஆயிரம் கோடி ரூபாய்கள் குடிநீருக்கான மக்கள் வரிப்பணத்தை கொட்டியும் ஏன் இந்த அவல நிலை?
இந்த அவலநிலைக்குக் காரணம் திட்டமிடுதலில் உள்ள கோளாறும், மக்களுக்கு குடிநீர் பற்றிய தெளிவான விழிப்புணர்வு இல்லாததுமே தான் என்றால் மிகையாகாது.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழக அரசு குடிநீருக்கென மொத்த செலவில் 5% வரை நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது 2 1/2 முதல் 3% வரை குறைக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீரகற்றுதல் வாரியமானது சென்னை பெருநகர், மற்றும் இதர மாநகராட்சி, குடிநீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செயல்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மற்ற ஊராட்சி, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக செயல்படுகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழகம் முழுவதும் சுமார் 550 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களைப் பராமரித்து வருகிறது. இதற்கு ஆகும் செலவு ஆண்டுக்கு ரூ.101 கோடியாகும். 2004 - 2005 நிதியாண்டிற்கு இது ரூ.115 கோடியாக மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது நிதி நிலை அறிக்கையில் பல கோடிக்கணக்கான மூலதனத்தில் உருவாக்கப்பட்டுள்ள மேற்கண்ட 550 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களை பராமரிக்க ஒரு காசுகூட மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. உள்ளாட்சி, ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீருக்கு தமிழ்நாடு அரசு குடிநீர் பராமரிப்புக் கட்டணத்தை 2002 முதல் உயர்த்திவிட்டது.
அதாவது ஊராட்சிகளுக்கு ஒரு காசுக்கு மூன்று லிட்டரும், நகர பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரு காசுக்கு இரண்டு லிட்டரும்.
குடிநீர்த் திட்டங்களின் பராமரிப்புநிலை:-
தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் சென்னையைத் தவிர 30 மாவட்டங்களில் உள்ள 476 கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள் குடிநீர் வடிகால் வாரியத்தால் 1.11.1995 முதல் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 10.000 கிராமங்கள், குக்கிராமங்கள், நகர மற்றம் ஊரக பேரூராட்சிகள், நகராட்சிகள், சேலம் மற்றும் கோவை மாநகராட்சிகள் ஆகியவை அடங்கும். பராமரிப்பு செலவை ஈடுகட்ட கிராமமாக இருந்தால் ஆயிரம் லிட்டருக்கு ரூ. 2.50-ம் மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 3.50-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. 1.10.2002 முதல் குடிநீர் கட்டணம் ஆயிரம் லிட்டருக்கு பின்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ரூ. 3.00 மற்ற உள்ளாட்சி அமைப்புகள் ரூ. 4.50, தொழிற்சாலைகளுக்கு ரூ. 15/- ஆனால் நடைமுறையில் ஒரு ஆயிரம் லிட்டருக்கு நிர்வாகச் செலவு, மின்கட்டணம், மற்றும் பழுது பார்க்கும் செலவு உள்பட ரூ. 8.00 ஆகிறது. இருப்பினும் ஊராட்சிக்கு 1 காசுக்கு 3 லிட்டரும், நகராட்சிக்கு 1 காசுக்கு 2 லிட்டரும் தொழிற்சாலைக்கு 11/2 காசுக்கு 1 லிட்டரும் குடிநீர் வாரியம் குடிநீரை விநியோகம் செய்கிறது.
அட்டவனை - 2 :
ஏற்கனவே இருந்தது
3.10.2002 முதல் உயர்த்தியது
1. ஊராட்சிகள் 
2. நகர (பேரூராட்சிகள்) மாநகராட்சிகள்
3. தொழிற்சாலைகள்
2. நகர (பேரூராட்சிகள்) மாநகராட்சிகள்
3. தொழிற்சாலைகள்
ரூ.2.25/1000 லிட் ரூ.3.50/1000லிட் ரூ.10.00/1000லிட்
ரூ.3.00/1000 லிட்
ரூ.4.50/1000லிட் ரூ.15.00/1000 லிட்
ரூ.4.50/1000லிட் ரூ.15.00/1000 லிட்
ஒரு ஆண்டுக்கு ரூ. 85/- கோடிக்கு கோரிக்கை பட்டியல் குடிநீர் வாரியத்தால் உள்ளாட்சி, ஊராட்சி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. வசூலாகும் தொகையோ ரூ. 55/- கோடிதான். பராமரிப்பு செலவோ ரூ. 101/- கோடி ஆகிறது. ஆண்டு தோறும் கூடுதலாக ரூ. 16/- கோடி செலவாகிறது. கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் ஏற்படும் பழுதுகளை சரிபார்ப்பதற்கோ, ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகளை ஆழப்படுத்தவோ, தூர் எடுப்பதற்கோ, புதிய குடியிருப்புகளுக்கு திட்டத்தை நீட்டிப்பதற்கோ எவ்வித பணமும் தமிழக அரசு வழங்குவதில்லை. மேலும் ஒரு ஆண்டில் ஆகும் மொத்த செலவு ரூ.101/- கோடியில் ரூ. 66/- கோடியை குடிநீர் வாரியம் மின் கட்டணமாக செலுத்துகிறது. மின்கட்டணமானது வர்த்தக அடிப்படையில் (commercial Tariff) செலுத்த வேண்டியுள்ளது. 2.10.2002 அன்று அரசு குடிநீர்க் கட்டணத்தை மாற்றியமைக்கும்போது குடிநீர் வாரியத்திற்கு ஆன செலவு ஆயிரம் லிட்டருக்கு ரூ. 6.50 ஆகும். அரசு ரூ. 3.00 மற்றும் ரூ. 4.50 என்று மாற்றியமைக்கும்போது வித்தியாச கட்டணமான ரூ. 3.50 மற்றும் ரூ. 2.00-ஐ மானியமாக குடிநீர் வாரியத்திற்கு வழங்கி இருக்க வேண்டும். இன்று மின் கட்டண உயர்வால் ஆயிரம் லிட்டருக்கு ரூ.8% செலவாகிறது. அதாவது ரூ. 1.50 மேலும் கூடியுள்ளது.
இவ்வாறு கூடுதலாக செலவாகும் பணத்தை விதிமுறைகளுக்கு முரணாக புதிய திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் செலவு செய்யப்படுகிறது. ஊரக மற்றும் உள்ளாட்சிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய குடிநீர் பராமரிப்பு கட்டண நிலுவைத் தொகை அட்டவனை 3ல் தரப்பட்டுள்ளது.
2. 
3.
4.
5. கோவை மாநகராட்சி
சேலம் தொழில்நிறுவனங்கள் ஊராட்சி பேரூராட்சிகள் ரூ. 77 கோடி
ரூ. 27 கோடி
ரூ. 17 கோடி ரூ. 30 கோடி ரூ. 69 கோடி ரூ. 220 கோடி
3.
4.
5. கோவை மாநகராட்சி
சேலம் தொழில்நிறுவனங்கள் ஊராட்சி பேரூராட்சிகள் ரூ. 77 கோடி
ரூ. 27 கோடி
ரூ. 17 கோடி ரூ. 30 கோடி ரூ. 69 கோடி ரூ. 220 கோடி
இவை போக ஆண்டுதோறும் இதுவரை ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ. 70/- கோடி. ஆக மொத்தம் கிட்டத்தட்ட ரூ. 240/- கோடியை வேறு குடிநீர்த்திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியில் இருந்து செலவழிக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்த ஊரின் குடிநீர்த்திட்டத்தை செயல்படுத்தாமல் விட்டார்கள் அல்லது அரை குறையாத நிறுத்தி வைத்துள்ளார்கள் என்ற விபரம் அறிய முடியாமல் போகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், சேலம் மற்றும் கோவை மாநகராட்சியும் பொதுமக்களிடம் வீட்டு மற்றும் தொழில் நிறுவனங்கள் இதர அமைப்புகளிடம் பல கோடி ரூபாய் கூடுதலாக தண்ணீர் வரி வசூல் செய்கிறார்கள். அதாவது தண்ணீர் வரியை ஒரு லாபநோக்கோடு வருமானமாக கருதி வசூல் செய்கிறார்கள். அதனை வேறு திட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி விட்டு குடிநீர் வாரியத்திற்கு கட்ட வேண்டிய தண்ணீர் கட்டணத்தை சுமார் ரூ. 104 கோடி நிலுவை வைத்துள்ளார்கள். இதனை அரசும் கண்டு கொள்வதில்லை.
வாரிய இயக்குநர் குழுவில் ஊரக (ஊராட்சி) வளர்ச்சி இயக்குநர், ஊரக மற்றும் நகர பேரூராட்சிகளின் இயக்குநர், நகராட்சி நிர்வாக ஆணையாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வாரிய சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினரை இயக்குநர் குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் அதேபோல் மக்கள் பிரதிநிதிகளாக நகராட்சித் தலைவர்களின் தலைவர் மற்றும் ஊராட்சித் தலைவர்களின் தலைவர் ஆகிய இருவரையும் இயக்குநர் குழு ஊறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அவ்வாறு 3 மக்கள் பிரதிநிதிகளும் வாரிய இயக்குநர் குழுவில் இடம் பெறவில்லை.
வாரிய இயக்குநர் குழுவில் உறுப்பினர்களாக உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்தான் தற்போது தலைவராக உள்ளார். தங்களது கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சிகள், நகர மற்றும் ஊரக பேரூராட்சிகள், நகராட்சிகள், மற்றும் மாநகராட்சிகள் குடிநீர் கட்டண நிலுவைத்தொகை கட்ட வேண்டிய ரூ. 220/- கோடியை குடிநீர் வாரியத்திற்கு கட்ட எவ்வித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை" ஏன் நிலுவைத் தொகையை வசூலிக்கவில்லை என்று குடிநீர் வாரிய அதிகாரிகளை மட்டும் மிரட்டிவிட்டுச் செல்வார்கள். அவர்களின் இரட்டை வேடத்தால் குடிநீர் பராமரிப்பு நிர்வாகம் நாளுக்கு நாள் சிர்கெட்டு வருகிறது.
குடிநீர் வாரியம் நிலுவையின்றி மின் கட்டணத்தை செலுத்தி வந்தாலும், தூத்துக்குடி அனல்மின் நிறுவனம் தண்ணீர் கட்டணம் ரூ. 4 கோடியை நிலுவையாக வைத்துள்ளது. அந்த நிறுவனமானது ஊராட்சிகளுக்கு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் ஆயிரம் லிட்டருக்கு ரூ. 3/- ஐத்தான் கட்டமுடியுமே தவிர தொழில் நிறுவனங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரூ. 15/- (ஆயிரம் லிட்டர்)ஐ கட்ட முடியாது என்று அடம் பிடிக்கிறது. அதிக வருமானமுள்ள தூத்துக்குடி துறை முகமோ ரூ. 2 1/2 கோடி நிலுவை வைத்துள்ளது. இது போக சிப்காட், சிட்கோ, தூத்துக்குடி கப்பல் படைத்தளம் போன்ற அரசு நிறுவனங்கள் எதுவுமே தண்ணீர் கட்டணம் கட்ட மறுக்கின்றன.
கோவை மாநகராட்சியானது ஆயிரம் லிட்டர் ரூ. 4.50க்கு குடிநீர் வாரியத்திடம் பெற்று தனியார் நிறுவனங்களுக்கு ஆயிரம் லிட்டர் ரூ. 7.50 முதல் ரூ. 20/- வரை விற்பனை செய்கிறார்கள். சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவு நீரேற்று வாரியம் தென்னக ரயில்வேக்கு ஆயிரம் லிட்டர் ரூ. 40/- என்று விநியோகம் செய்கிறது.
ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அமைப்பும் வெவ்வேறு வகையான குடிநீர் கட்டணத்தை / வரியை வசூல் செய்கின்றது. ஒரே சிரான குடிநீர்க் கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை. மேலும் குடிநீர் மீட்டர் அடிப்படையிலும், பயன்பாடு அடிப்படையிலும், கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை.
குடிநீர் வணிக கொள்கை:-
உலகம் முழுவதும் 2001-ஆம் ஆண்டில் மட்டும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை ரூ.1,10,000/- கோடிக்கு விற்பனை செய்துள்ளார்கள். 2004-ஆம் ஆண்டு பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் குடிநீரை ரூ. 1.50.000/- கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து தீவிரமாக வியாபாரம் செய்து வருகிறார்கள். 20-நூற்றாண்டு வரை உலகில் எண்ணெய் வளங்களுக்கான யுத்தங்கள் நடந்தன. 21 நூற்றாண்டில் குடிநீருக்கான யுத்தம் தொடங்கப்பட்டு விட்டது என சமுதாய அறிஞர்கள் கூறுகிறார்கள்.
2001-ஆம் ஆண்டில் இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை ரூ. 800/- கோடிக்கு விற்பனை செய்தார்கள். 2003-ஆம் ஆண்டில் ரூ.5,200/- கோடிக்கு இந்தியாவில் குடிநீரை விற்பனை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் மொத்த குடிநீர் சந்தையில் 60% வரை தென்னிந்தியாவில் நடைபெறுகிறது. கேரளாவில் 20%-க்கு மேலாக குடிநீர் சந்தையை பெருக்க முடியவில்லை. அங்கு தென்னை மரவளர்ப்போர் சங்கமும், மரமேறுவோர் சங்கமும் ஒன்றிணைந்து பன்னாடு கம்பெனிகளின் முயற்சியை முறியடித்தனர். தண்ணீரை விற்றால் இளநீர் வியாபாரம் பாதிக்கப்பட்டு ரத்தக் கண்ணீர் சிந்த வேண்டிய அபாயநிலை வருமென்பதை முன் கூட்டியே உணர்ந்த மக்கள் போராடி குடிநீர் வியாபாரத்தை முடக்கிவிட்டார்கள்.
தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் "குடிநீர் சந்தை" அதிகமாக பெருகியுள்ளது. தமிழகத்தில் ரூ. 750/- கோடிக்கு குடிநீர் விற்பனையை இலக்குவைத்து வியாபாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். அதிலும் சென்னை பெரு நகரில் 2002-இல் ரூ. 200/- கோடிக்கு இருந்த "குடிநீர் சந்தையை" 2003-இல் ரூ 300/- கோடிக்கு உயர்த்தி உள்ளார்கள். 2004-இல் 500/- கோடிக்கு குடிநீர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். மேலும் 2005-இல் பல கோடிகளுக்கு இலக்கை நிர்ணயித்துள்ளார்கள்.
"மினரல்"வாட்டர் மாயையின் வரலாறு:-
பாட்டிலில் அடைக்கப்பட்டக் குடிநீர் வணிக சுரண்டல் இந்தியாவில் "மினரல் வாட்டர்" என்ற பெயரில் 1967-ஆம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாகிவிட்டது. 1967-ஆம் ஆண்டு ஃபெலீஸ் பிஸ்லரி (Felis Bisleri) என்ற இத்தாலிய பெரு முதலாளி முப்பையில் "மினரல் வாட்டர்" தொழிற்சாலையைத் துவக்கினார். வளர்ந்த வெளிநாடுகளில் இயற்கையாக கிடைக்கும் தாதுப்பொருட்களில் தண்ணீரை செலுத்தி சுத்திகரிப்பு செய்து "மினரல் வாட்டர்" என்ற பெயரில் விற்பனை செய்தார்கள். அது உடல் நலத்திற்கு நல்லது என்று விளம்பரம் செய்தார்கள்.
ஆனால் "மினரல் வாட்டர்" வணிகம் மும்பையில் எடுபடவில்லை. இரண்டே ஆண்டுகளில் "பிஸ்லரி" தனது பேக்டரியை 1969-இல் "பார்லே" நிறுவனத்தின் தலைவரான "ரமேஷ் சௌகான்" என்பவருக்கு விற்றுவிட்டார். பார்லே கம்பெனி அந்த தொழிற்சாலையில் முதலில் சோடா பானங்களைத் தயாரித்து விற்பனை செய்தது. பின்னர் "தம்ஸ் அப்", "கோல்ட் ஸ்பாட்" ஆகிய கலர் பானங்களை தயாரித்து விற்பனை செய்தது.
இந்த காலக்கட்டத்தில் (1967 - 1970) இந்தியாவில் "கோகோ கோலா" கம்பெனி நுழைந்து கலர் பானங்களை விற்பனை செய்து வந்தது. ஆனால் வியாபாரம் எடுபடவில்லை "கோகோ கோலா" வணிகத்தை நிறுத்திவிட்டனர்.
"மினரல் வாட்டரா......?(Mineral)பியூர் வாட்டரா.....? (Pure)
1993-ஆம் ஆண்டு "பார்லே" ரமேஷ் சௌகான் வசமிருந்த கலர்பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலகள், "கோகோ கோலா" நிறுவனம் பல கோடி பணம் கொடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்தம் (Lease Agreement) போட்டது. "தம்ஸ் அப்", "கோல்ட் ஸ்பாட்" மார்கெட் வீழ்ந்தது, ஐந்தே ஆண்டுகளில் "கோகோ கோலா" கலர்பான வியாபாரம் இந்தியா முழுமையும், தனது வியாபார விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி பரவியது. உள்நாட்டு கலர் பான கம்பெனிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது.
1998-ஆம் ஆண்டில் ஐந்தாண்டு ஒப்பந்தம் முடிந்து "பார்லே" ரமேஷ் சௌகான் மீண்டும் தனது பேக்டரியைக் கையகப்படுத்துகிறார். மீண்டும் "மினரல் வாட்டர்" தயாரிக்க திட்டமிடுகிறார். ஆனால உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநலன் வழக்கில் சாதாரண குடிநீர் பாட்டில்களில் "மினரல் வாட்டர்" என்று போடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடைவிதித்தது, எனவே இத்தாலிய பெரு முதலாளி, "பிஸ்லரி"-யின் பெயரைச்சூட்டி பாதுகாப்பான குடிநீர், சுத்தமான குடிநீர், என்ற குடிநீரைப் பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்தார்கள்.
ஒரு காலக்கட்டத்தில் "மினரல் வாட்டர்" என்றனர். இன்று "பாதுகாப்பான குடிநீர்", "சுத்தமான குடிநீர்" (Safe water / Purified water / Packed Drinking water) என்று கூறுகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு "மினரல் வாட்டர்" என்று கூறிக்கொண்டு ஒரு கையில் சூட்கேஸை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் மினரல் வாட்டர் பாட்டிலை ஏந்திக்கொண்ட செல்வோரை சமுதாயத்தில் அவர் ஒரு அந்தஸ்து பெற்றவர் என்று மிரட்சியுடன் பார்த்த காலம் இருந்தது. மினரல் வாட்டர் பாட்டிலை வெளிப்படையாக எடுத்துச்செல்வது ஒரு சமூக அந்தஸ்தாக கருதப்பட்டது. ஆனால் இன்று அதுவே ஒரு அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. கலர்பான கம்பெனிகளுக்கும் குடிநீர் விற்பனை கம்பெனிகளுக்கும் ஒரு கடுமையான வியாபாரப் போட்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
1994 - ஆம் ஆண்டில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை பரவலாக துவக்கப்பட்டது. 1998-99-இல் 80% 2000-இல் 150%, 2001-இல் 400%, 2003-இல் 600% என்ற வளர்ச்சி வேகத்தில் குடிநீர் வணிகம் நடந்து வருகிறது.
"பார்லே" ரமேஷ் சௌகான் பிஸ்லரி என்ற பெயரில் குடிநீர் விற்பனையைத் துவக்கிய மூன்றாண்டுகளில் அவரது தம்பி "பிரகாஷ் சௌகன்" பைலி என்ற பெயரில் குடிநீர் விற்பனையில் இறங்கினார். இன்று இந்தியாவில் ஏற்கனவே கலர்பானங்கள், பிஸ்கட், சோப்பு, பவுடர், பால்பவுடர், காபி, சாக்லெட் மற்றும் பிராந்தி விற்பனையில் கைதேர்ந்த பெரும் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்கனவே இருந்துவதும் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரைப் பயன்படுத்தி அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையில் இறங்கியுள்ளார்கள். இந்தியாவில் மிகப்பெரும் அளவில் 400 கம்பெனிகளும் மாநில அளவில் 2000 கம்பெனிகளும் ஆக மொத்தம் 2400 கம்பெனிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அவைகளில் முக்கியமான பெரும் கம்பெனிகள் சில பின் வருமாறு. பெப்சி, கோகோ கோலா, பிரிட்டானியா, கோத்தாரி, கோத்தேஜ் நெஸ்லே மெக்டவல் ஆகியவை ஆகும். இதுபோக முன்னாள் அமைச்சர்கள், சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அகியோரும் தண்ணீர் விற்பனையில் இறங்கி உள்ளார்கள். சமீபத்தில் குரியர் நிறுவனத்தினர் (சபோல்-Sabol) என்ற பெயரில் தண்ணீர் வணிகத்தில் இறங்கி உள்ளனர். இவர்கள் 300மி.லி, 500மி.லி ஒரு லிட்டர், ஒன்னரை லிட்டர், இரண்டு லிட்டர், 5லிட்டர், 12லிட்டர், 20லிட்டர் மற்றும் 25லிட்டர் என்ற அளவுகளில் குடிநீரை விற்பனை செய்கிறார்கள். மொத்த வியாபாரத்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்தான் 60% இடத்தை பிடித்து உள்ளது.
நவீன விளம்பர யுக்தியைப் பயன்படுத்த பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை பெருமளவில் செய்வதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். ஒரு விளம்பரத்தில் ஒரு சொகுசுகாரின் ரேடியேட்டரில் பாட்டில் குடிநீரை உற்றுவது போல விளம்பரம் செய்து "Drink and Drive" என்ற வாசகத்தைப் போட்டுள்ளார்கள். "மனிதர்கள் மட்டுமல்ல... இயந்திரங்களும் குடிநீரையே உட்கொள்ளும்" என்ற வகையில் அதி தீவிர நவீன விளம்பரத்தை செய்து மக்களை விளம்பரமாய வலைக்குள் சிக்க வைக்கிறார்கள்.
உலகில் மருந்து வணிகத்துக்கு அடுத்தபடியாக குடிநீர் வணிகம் நடப்பதாக கூறப்படுகிறது.
இத்தகைய பெரும் குடிநீர் வணிகச் சுரண்டலை நடத்தும் இந்த பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனத்தினர் கூறும் காரணம் என்ன தெரியுமா? நகராட்சி குழாய்களில் வரும் நீரானது சுத்தமானதாக இல்லை என்று தனியார குடிநீர் வடிகட்டி சாதனம் (Aqua Guard water Filter) சரியாக வேலை செய்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் பாட்டில் குடிநீர் உண்மையிலேயே தரமானதா? என்றால் அதுதான் இல்லை.
சமீபத்தில் விஞ்ஞான மற்றும் சுற்றுப்புறச் சூழல் மையம் என்ற அமைப்பு பாட்டில் குடிநீரை ஆய்வு செய்த உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது. அதில் கீழ்கண்ட பெரிய நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் விவசாயத்திற்குப் பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் 32 வகையான நஞ்சுகள் கலந்திருப்பதால் அக்கம்பெனிகளின் பாட்டில் குடிநீர் விற்பனையை தடை செய்யக் கோரியது. வழக்கை ஏற்று உச்ச நீதிமன்றமும் தடைவிதித்தது.
1. பிஸ்லரி 2. ஹிந்துஸ்தான் கோகோ கோலா 3. சர்டிமில்க் புட் 4. பெப்சி.கோ 5. கோத்தாரி 6. வைபவா 7. சர்துல் மினரல் 8. வைஷாலி மினரல்
"குடிநீர்" என்பது ஒரு சமூக, பொருளாதார, அடிப்படையிலான பொதுவான ஒரு சேவை பொருளாகும். அதனை வணிகப் பொருளாக மாற்றுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. மனித உரிமைகளில் மற்றும் அடிப்படை உரிமைகளில் எல்லாவற்றிற்கும் தலையாய உரிமை என்பது எதுவெனில் "குடிநீர்பெறும் உரிமையே" ஆகும்.
"மினரல்வாட்டர்" என்ற பொதுவாக ஒரு பெயர் மயக்கத்தை மக்கள் மத்தியில் விளம்பர மற்றும் வியாபார யுக்திகளின் மூலமாக ஏற்படுத்திவிட்டு பன்னாட்டு மற்றும் இந்திய நாட்டிலுள்ள பெரும் கம்பெனிகள் விற்பனை செய்வதெல்லாம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட சாதாரண குடிநீரே.
பாட்டிலில் உள்ள லேபிளை சற்று உற்று நோக்கினால் எங்குமே "மினரல் வாட்டர்" என்ற சொல்லை பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அப்படி போடுவது சட்டப்படி குற்றம் எனவே இவர்கள் Pure water / Purified Drinking water / Packed Drinking water / Protected water / Bottles water என்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு கம்பெனியும் வெவ்வேறு விலைகளில் "குடிநீரை" விற்பனை செய்கிறார்கள். எல்லா கம்பெனிகளும் IS:14543 என்ற தர முத்திரையுடன் குடிநீரை விற்பனை செய்கின்றன. தரமும் அளவும் ஒன்றாக நிச்சயமாக இருக்கும் போது விற்பனை விலைகளில் ஏற்றத்தாழ்வு இருக்கவே முடியாது, இருக்கவும் கூடாது.
ஆனால் பிளாஸ்டிக் கேனில் குடிநீரை அடைத்து விற்கும்போது கேன் விலை நீங்கலாக 1 லிட்டர் குடிநீரை ரூ. 1/- முதல் ரூ.4/- வரை விற்பனை செய்கிறார்கள். கேன் விலையானது கேன் வடிவமைப்பைப் பொறுத்து கம்பெனிக்கு கம்பெனி வேறுபடும். எனவே ஒரே தரம் ஒரே அளவுள்ள குடிநீரை பல விலைகளில் விற்பனை செய்ய அனுமதிப்பது "குடிநீர்" என்ற பெயரில் நடைபெறும் மிகப்பெரும் வர்த்தகச் சுரண்டல்.
அதே IS:14543 தர முத்திரையுள்ள குடிநீரை 50 பைசா பெறுமான பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கும்போது 1 லிட்டர் குடிநீர் ரூ. 10/- முதல் ரூ. 12/- வரை விற்பது மாபெரும் அநீதி.
இத்தகைய வியாபார பெருங்கொள்ளையால் "குடிநீர்" சந்தை சரக்காகி விட்டது. இந்த குடிநீர் சந்தை நிலத்தடி நீரை சரக்காக்குவதில் அதிநவீன தொழில்நுட்பததை பயன்படுத்துகிறது. ராட்சத ஆழ்துளை குழாய் கிணறுகள் நல்ல நீர் வளப்பகுதிகளில் முதலாளித்துவ உடமையாக்கப்படுகின்றன. இதனை நெறிப்படுத்துவதற்கு எந்த சட்டவரம்பும் கிடையாது. தமிழ்நாட்டில் சுமார் 60-80 கிலோ மீட்டருக்கு இடையே இரண்டு நகரங்கள் அமைந்துள்ளதால் அந்த நகரங்களின் நீர் நுகர்வு அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் வளத்தை பெரிதும் குறைத்துவிடுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் கிணற்றுப் பாசன விவசாயிகள் மீது மொத்தப் பழியையும் போட்டு நகர்ப்புற நீர் நுகர்வு பற்றி வாய் திறவாமல் மௌனம் சாதிக்கிறது. முறைப்படுத்தப்படாத குழாய் கிணறுகளின் பெருக்கமும் நீர் நெருக்கடிக்கு ஒரு காரணம் என்றாலும், அது மட்டுமே "ஒரே" காரணமல்ல.
குடிநீர் சந்தை நிலத்தடி நீரை மட்டும் சார்ந்து வளர்க்கப்படவில்லை. அமெரிக்க பகாசுர கம்பெனி ஒன்று காற்றில் உள்ள நீரை உறிஞ்சி குடிநீராக்கித் தரும் எந்திரம் ஒன்றை தமிழகச் சந்தையில் நுழையவிட்டுள்ளது. "ஆகாய கங்கை நீர்வடி எந்திரம்" என்ற அந்த எந்திரம் சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது அனைத்துக் துறைகளிலும் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. காற்றில் உள்ள நீரையும் உறிஞ்சி காசு பண்ணும் இந்த கொடுமை எங்கே இட்டுச் செல்லும்?
காற்றும் வறண்டு, நிலமும் வறண்டு கடைசியில் அராபியப் பாலைவனமாய் தமிழகத்தை ஆக்கிவிடவே இந்த "குடிநீர் சந்தை" வேகமாக வளர்க்கப்படுகிறது.
குடிநீர் சந்தையாகக் கூடாது. அது சமூகத்தின் பொதுச் செல்வம் என்ற அணுகுமுறை ஏற்பட்டால் ஒழிய தமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பது இயலாத ஒன்றாகவே ஆகிவிடும்
 
No comments:
Post a Comment