1. "தலைவர் ஓவரா மணல் அள்ள ஆரம்பிச்சிட்டாருன்னு எப்படிச் சொல்றே...?"
"முன்னெல்லாம் அவர் பேச்சுல கனல் தெறிக்கும்; இப்ப மணல் தெறிக்குதே...!"
2. "தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்..."
"அடேங்கப்பா ... அப்படி என்ன பேசினாரு?" "பேசலைய்யா... குறட்டை விட்டாரு!"
3. "என்னய்யா இது... படத்தோட கதையை சிலேட்டுல எழுதிட்டு வந்திருக்கே..."
"அடுத்த படத்துக்காவது வித்தியாசமா கதை எழுதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!"
4. போலீஸ்காரர்: "உம் மாமியார் தலையில ஏன் குழவிக்கல்லைத் தூக்கிப் போட்டீங்க?"
குற்றவாளி: "அம்மிக்கல்ல என்னால் தூக்க முடியலை சார், அதான்."
No comments:
Post a Comment