Saturday, October 9, 2010

குத்துப்பாட்டு


1. "குத்துப்பாட்டு தெரியும்... இது என்ன "கொத்து" பாட்டு?"
"புலவர் இதற்கு முன் புரோட்டா கடையில் மாஸ்டராக இருந்தவர் மன்னா..!"

2. "நமது மன்னர் தேர்ச்சி பெற்றுவிட்டார்..."
"எதிரிகளை சமாளிப்பதிலா?"
"இல்லை... புறாக்களை சமைப்பதில்!"

3. "பையன் ராஜா மாதிரி இருப்பான்னு தரகர் சொன்னது சரிதான்...."
"ஏன்... என்னாச்சு?"
"பொண்ணைப் பார்த்ததும் புறமுதுகிட்டு ஓடிட்டான்!"

4. "என்னங்க... உங்க பையன் பாடப் புத்தகங்களை எப்படிக் குதறி வச்சிருக்கான் பாருங்க!"
"நான் தான் சொன்னேனே... அவன் படிப்புல புலின்னு!"

5. "உங்க காதலி ஜாதகம் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொல்றீங்க.... சரி! உங்க அம்மா ஜாதகத்தையும் எதுக்கு பார்க்கச் சொல்றீங்க?"
"அது பத்து பொருத்தம் பார்க்க; இது குத்து பொருத்தம் பார்க்க!"


No comments:

Post a Comment