Friday, October 1, 2010

முருகதாஸின் அடுத்த சாய்ஸ் அஹ்ய்

தமிழில் பல ஹிட்டடித்து, ஹிந்தியில் அமீர்கானை வைத்து கஜினி செய்து வெற்றி மேல் வெற்றி குவித்து வருபவர் .ஆர். முருகதாஸ். இவர் தற்போது ஹாலிவுட் நிறுவனம் 20 செஞ்சுரி பாக்சுடன் இணைந்து இந்திய படங்களையும் தயாரிக்கும் பொறுப்பில் இருக்கிறார். இவர் தற்போது சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் 7-ம் அறிவு படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே அவரிடம், அடுத்த படத்தை பற்றி கேட்ட போது, எனது அடுத்த படம் கண்டிப்பாக ஹிந்தி படம்தான். காரணம் கஜினியின் பெரிய வெற்றிக்கு பின்பு நான் ஹிந்தியில் படம் செய்யவேண்டும் என்பது எனது கனவு. நான் கஜினி செய்யும் போதே, அடுத்த படம் கண்டிப்பாக நாம் இணைந்து செய்யவேண்டும் என்றார் அமீர்கான். ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. எனது அடுத்த படம் வேறு கதாநாயகனுடன் என்பதில் உறுதியாக இருந்தேன். என் அடுத்த பட நாயகன் அக்ஷய் குமார்தான். என்னுடைய எதிர்பார்ப்புக்கு அவர்தான் சரியாக இருப்பார் என்கிறார் .ஆர். முருகதாஸ். அக்கி பாவம் மொட்ட போட வச்சுடாதீங்க... காண சகிக்காது!

No comments:

Post a Comment