Friday, October 1, 2010

கமல் வெளியிட்ட மைனா பாடல்கள்

மைனா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இராம.நாராயணன், கமல்ஹாசன், கார்த்திக், இயக்குநர் பாலா உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்க, வெகு கோலாகலமாக நடந்தேறியது, கொக்கி, லீ, லாடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்து விட்டு பேசிய நடிகர் கமல், மைனாவில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரங்களில் தொடங்கி, நாயகன் - நாயகி வரை ஒவ்வொருவரின் இயற்பெயரையும் பாராட்டி பேசியதுடன், களத்தூர் கண்ணம்மாவில் தான் சிறுவனாக நடித்தபோது இப்படித்தான் பலரும் தன்னை அடையாளம் கண்டு பாராட்டியதாக அகம் மகிழ்ந்தார். அதுமாதிரி பாராட்டு மைனாவில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞனுக்கும், பணிபுரிந்திருக்கும் ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞனுக்கும் நிச்சயம் கிடைக்க வேண்டும். அவ்வளவு சிறந்த படமாக வந்திருக்கிறது என்றார். மேலும் பேசிய கமல், இயக்குநர் பாலா, கவிஞர் யுகபாரதி ஆகியோர் பேசும்போது கடவுள் குறித்து விவாதித்துக் கொண்டனர். பாலா, கடவுளே கிடையாது என்றார். யுகபாரதி பேசும்போது கர்த்தர்தான் பிரபுசாலமனைக் காப்பார் என்றார். இதெல்லாம் ஒவ்வொருவருடைய நம்பிக்கையை பொருத்தது. கடவுள் பெயரால் சண்டைகள் தேவை இல்லை. என்னை பொருத்தவரை கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லே தெரியாது என்பதுதான். நாளைக்கு அயோத்தி தீர்ப்பு வருது. இந்த நேரத்துல பாலா கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் என்றார். காலம் போகிற வேகத்தில் தமிழ் சினிமா திசை மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் மைனா போன்ற படங்களால் நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த படத்தை பார்த்து இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். எனக்கு சினிமா மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் நன்றாக தூங்கினேன். பெரிய படம் சிறிய படம் என்றெல்லாம் எதுவும் இல்லை. ரசிகர்கள் ரசிக்கும் படங்களெல்லாம் பெரிய படங்கள்தான். எது நல்ல படம், எது கெட்ட படம், என்பதை பகுத்தறிந்து அறிவது அவசியம். நல்ல படங்களை காப்பாற்ற வேண்டும். மோசமான படங்களை புறக்கணிப்பதும் நம் கடமை என்றார். முன்னதாக பேசிய இராம.நாராயணன், பராசக்தி படம் போல் மைனா ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். சண்ட போடறதே கடவுள் பேர வச்சுதானே.... பாவம் அவரும் என்னதான் செய்வாரு?

No comments:

Post a Comment