குத்தாட்டம் போடும் நடிகைகளை ஐட்டம் கேர்ள் என்று முத்திரை குத்துவது அருவறுப்பாக உள்ளது என்று காட்டமாக கூறுகிறார் லட்சுமி ராய். லட்சுமி ராய் அவ்வப்போது ஏதாவது பேசுவார். பேசும்போது மனதில் இருப்பதை அப்படியே வெளியே கொட்டுவார். அது காதலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, வெளிப்படையாக இருப்பது அவரது வழக்கம். முன்பு தன்னைச் சுற்றி சுற்றி வந்த காதல் கிசுகிசுக்கள் குறித்து மாய்ந்து மாய்ந்து விளக்கம் அளித்தார். இப்போது வேறு டாப்பிக் குறித்து பேசியுள்ளார்-சற்று கோபமாகத்தான். தமிழில் மங்காத்தா, காஞ்சனா என இரண்டு படங்களில் நடித்து வரும் லட்சுமி ராய், மலையாளத்திலும் கிறிஸ்டியன் பிரதர்ஸ் மற்றும் காஸனோவா என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் அவரை சந்தித்த சில செய்தியாளர்களிடம் லட்சுமி ராய் பேசுகையில், அதென்னங்க, ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் நடிகைகளை ஐட்டம் கேர்ள் என்று கூப்பிடுகிறார்கள்? அது என்ன வார்த்தை? ஒரு பாடலுக்கு ஆடுவது தவறில்லையே. அப்படி ஆடும் எங்களை ஐட்டம் கேர்ள் என்று கூப்பிடுவது நன்றாகவே இல்லை. இதுதவறான கண்ணோட்டம். 'ஐட்டம்' நடிகை என்று சொன்னால் மக்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணம் தோன்றும் என்று யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. ஒரு பாடலுக்கு ஆடுகிறார்களோ அல்லது பல பாடல்களுக்கு ஆடுகிறார்களோ அதை மட்டும் பார்க்காதீர்கள். அவர்களது பெர்பார்மன்ஸை பாருங்கள், பாராட்டுங்கள், விமர்சியுங்கள். அதை விடுத்து ஐட்டம் என்று சொல்லி மனதைப் புண்படுத்தாதீர்கள் என்று பொருமித் தீர்த்து ஓய்ந்தார். இதுக்கெல்லாம் கோவப்படலாமா? செக்ஸி, ஹாட், ஸ்பைஸி....ன்னு சொல்லும் போது மட்டும் சும்மாயிருந்தீங்க......
No comments:
Post a Comment