Saturday, October 23, 2010

கோழி பால் கறி

Chicken Stew - Cooking Recipe in Tamil
தேவையான பொருட்கள்:
கோழி இறைச்சி - 250 கிராம்
மைதா - 1 மேஜைக்கரண்டி
பால் - 100 மில்லி
மஷ்ரூம் - 10
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயத் தாள் - 1 மேஜைக்கரண்டி
சோளமாவு - 1 தேக்கரண்டி
கேரட் - 1 மேஜைக்கரண்டி
தக்காளி விழுது - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மஷ்ரூம், கேரட், வெங்காயத்தாள் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக வெட்டி கோழி இறைச்சியுடன் சேர்க்க வேண்டும். தக்காளி விழுதை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் உப்பு சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து பாதியளவு பாலை அதில் ஊற்றி வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் இளகி கரைந்ததும் பால், மைதா மாவு, சோளமாவு சேர்த்து கிளற வேண்டும். வெண்ணெய் மாவு கலவை கூழ்போல் பக்குவம் வந்தபின், இறைச்சிக் கலவையை அதில் கொட்டி நன்கு கிளறி குறைந்த தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, பின்பு இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment