Friday, November 12, 2010

சிறுநீரக தொந்தரவா?

சிறுநீரக தொந்தரவா?

டாக்டர் ராஜ்குமார் Kidney Failures... - Food Habits and Nutrition Guide in Tamil
நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் சிறு நீரகமும் ஒன்றாகும். நம் உடலில் இரண்டு சிறு நீரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சுமார் 150 கிராம் எடை கொண்டது. நம் உடலில் உற்பத்தியாகும் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. அதைத் தவிர நம் உடலில் உள்ள நீரின் அளவு, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளின் அளவு, அமிலத்தன்மையின் அளவு ஆகியவற்றை சமச்சீராக வைக்க உதவுகின்றது.

மேலும் சிவப்பணுக்கள் உற்பத்தியை தூண்டும் எரித்ரோபாய்டின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. எலும்புகளை வலிமையாக்கும் வைட்டமின் டியை செறிவூட்டுகிறது. ரெவின் என்னும் பொருளை உற்பத்தி செய்து ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.

சிறுநீரகங்களில் பலதரப்பட்ட நோய்கள் உண்டாகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது சிறுநீரக செயலிழப்பு ஆகும். சிறுநீரகப் பாதையில் நோய்கிருமிகள் தாக்குதல், கற்கள் ஏற்படுதல், சிறுநீரக பாதையில் கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி மற்றும் நீர்காமாலை ஆகியவையும் சிறுநீரகங்களைத் தாக்கும் பிற முக்கியமான நோய்களாகும்.

இவை இரண்டு வகைப்படும். அவை நேப்ரைடிஸ் மற்றும் நெப்ராடிக் சின்ட்ரோம் ஆகியவையாகும். இதில் சிறுநீரகத்தில் கீளாமெருஸ் என்ற பகுதி நம் உடலிலேயே உற்பத்தியாகும் நோய் எதிர்க்கும் பொருளால் பாதிக்கப்படுகிறது. இந்நோய் உண்டானால் சிறுநீரின் அளவு குறைதல், முகம், கால் வீக்கம், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரில் ரத்தம் மற்றும் புரதம் வெளியேறுதல் ஆகியவை ஏற்படும்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகுதல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், கடுமையான வயிற்றுவலி ஆகியவை சிறுநீரக கற்களின் அறிகுறிகள்.

தடுப்பது எப்படி?
சிறுநீரக கற்கள் ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் கற்கள் உற்பத்தியாகும் வாய்ப்புகள் அதிகம். தினமும் அதிக நீர் பருகி வந்தால் இக்கற்கள் சிறியதாக இருக்கும் போதே உடலை விட்டு வெளியேறி விடும். அப்போது அதிகம் தொந்தரவு இருக்காது.

மேலும் உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும் அதிக புரதச்சத்துக்கள் மாமிச உணவுகளை குறைப்பதன் மூலமும் கற்கள் உற்பத்தியாவதை தடுக்கலாம்.

அதிகநீர் பருகி அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் கிருமிகளின் தாக்குதலை தடுக்கலாம். சிலருக்கு அடிக்கடி கிருமி தாக்குதல் ஏற்படும் அவர்களுக்கு சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதையில் கற்கள் அடைவு, அல்லது சதைவளர்ச்சி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தகுந்த பரிசோதனைகளை செய்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகங்கள் இரண்டும் பழுது அடைந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றாமல் இருப்பதே சிறுநீரக செயலிழப்பு ஆகும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதை தற்காலிக செயலிழப்பு மற்றும் நிரந்தர செயலிழப்பு என இரு வகையாகப் பிரிக்கலாம்.

தற்காலிக செயலிழப்பிற்கு பலவகை காரணங்கள் உண்டு. குறிப்பாக அதிக அளவு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில் நீர்சத்து குறைவதால் ஏற்படுகிறது.

நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளில் மூன்றில் 2 பங்கினர் சர்க்கரை நோய் அல்லது உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிப்படைந்தவர்கள். இது தவிர சிலவகை பரம்பரை நோய்கள், வலிமருந்துகளை வருடக்கணக்கில் உட்கொள்தல், அதிக கற்கள் உண்டாகுதல், மீண்டும் மீண்டும் சிறுநீரகப் பாதையில் கிருமிகள் தாக்குதல் போன்றவற்றால் சிறு நீரக செயலிழப்பு ஏற்படுகிறது.

இவர்கள் எல்லாம் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். தகுந்த உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து சிறு நீரக பாதிப்பை ஆரம்பத்திலேயே அறிந்து தகுந்த சிகிச்சை செய்வதன் மூலம் நிரந்தர செயலிழப்பை தடுக்கலாம் என்கிறார் மருத்துவர் ராஜ்குமார்.

No comments:

Post a Comment