பெண்களின் ரசனையே தனிதான்!
ஒரு அழகான வீடு. வீட்டைச் சுற்றியும் தோட்டம். பூத்துக்குலுங்கும் செடிகள். பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் வீட்டுச் சுவருக்கு அடித்த பெயிண்ட், அப்படியே வீட்டினுள் சென்றால், பழைய மாடல் ஷோபா, பீரோ, கட்டில், பர்னிச்சர்கள்... வீடென்றால் புறம்மட்டும் அழகாக இருந்தால் போதாது, அகமும் அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு வீடு முழுமையாகிறது.
இத்தாலி, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, சீனா, கொரியா, பாகிஸ்தான் போன்ற நாட்டு நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வீட்டு உபயோகப்பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், பர்னிச்சர் வகைகள், கம்பளங்கள், மீன் தொட்டிகள், அழகுசாதன விளக்குகள், கைவினைப் பொருள்கள், குளியல் அறை சாதனங்கள், செராமிக் டைல்ஸ், வீட்டுக் கதவுகள், மின்விசிறிகள், கிரானைட் மார்பிள்கள், தோட்ட அழகு சாதனங்கள், கொசு வலைகள், பைப்கள், ப்ளைவுட், லாக்கர்கள், சூரிய சக்தி அடுப்புகள், சுவர் ஓவியங்கள், ஜன்னல் பிரேம்கள் போன்ற ஏராளமான வீட்டை அழகூட்டும் சாதனங்கள் இங்கு கிடைக்கின்றன. அவற்றை வாங்கி நாம் பயன்படுத்தலாம்.
கார்டன் லைட் காண்போர் கண்களை பிரகாசிக்கச் செய்யும்படி உள்ளது. இது ஒன்பது பிரிவுகளைக் கொண்ட கார்டன் விளக்கு வீட்டுத் தோட்டத்தில் இருந்தால் தோட்டத்தில் பூக்களே தேவையில்லை அவ்வளவு பிரகாசமாக இருக்கும்.
டைனிங் டேபிள், விசிட்டர் டேபிள்கள் சிறப்பாக அமைக்க வேண்டும். படுத்தவுடனேயே தூக்கம் வரவேண்டும் மென்றால், டிசைனிங் ஸ்பர்னிச்சர் ஷோபா, மெத்தைகளை தேர்வு செய்யலாம். கட்டில்கள், மெத்தைகள், டிரெஸ்சிங் டேபிள்கள், டைனிங் டேபிள்கள் என வீட்டிற்குத் தேவையான பல பொருள்களைத் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி வீட்டை அழகு படுத்தலாம்.
ஒரு சமையல் அறைக்கு தேவையான அனைத்து பொருள்களும் மார்பிளால் உருவாக்கப்பட்டிருந்தால், அந்த சமையல் அறைகூட சாமி அறை ஆகிவிடும். இங்கு டெலிபோன்கூட மார்பிள்தான்.
அத்தோடு சுவர் ஓவியங்கள், உடற்பயிற்சி சாதனங்கள், கார்பெட்டுகள், சேப்ட்டி லாக்கர்கள்... இப்படி நம் வீட்டை இப்படியும் கூட அழகாக மாற்றமுடியும்.
செயற்கை செடி, பூ, மரம், தவளை மிதக்கும் தண்ணீர் தொட்டி என வீட்டிற்குள்ளேயே ஒரு தோட்டத்தை அமைக்கலாம். இந்த செயற்கைத் தாவரங்கள் ரூ.100 முதல் கிடைக்கின்றன.
அழகான அருவி, ஆவி பறக்கிறது, இப்படி ஒரு நீர்வீழ்ச்சி நம் வீட்டு ஹாலில் இருந்தால் எப்படி இருக்கும்..? இந்த நீர் வீழ்ச்சி அனைத்தும் மார்பிளால் செய்யப்பட்டிருந்தால் கற்பனையே இவ்வளவு அழகாக இருக்கும் போது நேரில் அமைத்தால் எவ்வளவு அழகாக இருக்கும். மேலும் அழகான சில சிலைகளை நம் ரசனைக்கு தகுந்தபடி வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இப்படி வீட்டுக்குத் தேவையான ஆணி முதல் அட்டாளி வரை உள்ள அனைத்துப் பொருள்களும் நவீனமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்போது நாம் ஏன் வீட்டின் அகத்தையும், புறத்தையும் அழகுபடுத்தக்கூடாது?
No comments:
Post a Comment