நாட்டு நடப்பை தெரிஞ்சுக்கங்க!
நமது நாட்டில் பெண்கள் கல்வி கற்பது அதிகரித்துள்ளது சந்தோஷப்பட வேண்டிய ஒன்று. ஆனால் நமது நாட்டு பெண்மணிகள் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டாதது கவலையளிப்பதாக உள்ளது. டிவியில் காலை முதல் இரவு வரை ஒரு தொடர் கூட விடாமல் பார்க்கும் பெண்மணிகள் தப்பித் தவறி கூட செய்திகளை பார்ப்பதேயில்லை. பத்து சதவீத பெண்கள் செய்திகளைப் பார்த்தாலே பெரிய விஷயம். தொடர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும் பெண்கள் தொடர் முடிந்து செய்திகள் வந்தால் படாரென எழுந்து வீட்டு வேலைகளை கவனிக்க சென்றுவிடுகின்றனர். வீட்டில் வாங்கப்படும் தினசரிகளை எத்தனைப் பெண்கள் ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்றால் இல்லை என்றே தெரியவரும். அப்படியே ஓரிருவர் படித்தால் மங்கையர் சம்பந்தப்பட்ட நாவல்களாகத்தான் இருக்கும். நாட்டு நடப்புகளை பெண்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் சமுதாய மாற்றத்திற்கு ஏற்ப தங்கள் வாரிசுகளை தயார்படுத்துவதற்கும், தேர்தல் சமயங்களில் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே பெண்மணிகள் தொடர்களை பார்ப்பது போலவே முடிந்தால் தொடர்கள் பார்ப்பதை குறைத்துக் கொண்டு செய்திகளைப் பாருங்கள், தினசரிகளை படியுங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது!
No comments:
Post a Comment