எது பெண் உரிமை....
வலிமை வாய்ந்தவர்களையே துணையாகக் கொள்வோம். பெண் வலிமையானவள் தான்.
என்னுடைய வெற்றிக்குப் பின் என் தந்தை, கணவர், சகோதரன் இருக்கிறான் என்று எந்த பெண்ணாவது கூறியதுண்டா? சொல்ல மாட்டார்கள். ஏன்? அவர்களுக்கு வாழ்வில் சுதந்திரம் வேண்டும் என்பார்கள்? ஏ பெண்ணே! உன்னைக் காட்டிலும் உன் தந்தையிடம் அதிகம் திட்டுகள் வாங்குவது உன் கூடப்பிறந்த ஆண்பிள்ளை தான் என்பதை மறந்து விட்டாயா? நீங்கள் கேட்கும் சுதந்திரம் எது?
நாகரீக உடை அணிவதும், நகங்களுக்கும், உதடுகளுக்கும், தலை முடிக்கும் சாயப்பூச்சு பூசுவதும், மாலையில் மாதர் சங்கங்களுக்கும் செல்வது தான் சுதந்திரமா....
பெண்களே! ஒரு ஆணினுடைய மாறுபட்ட நடவடிக்கை பெண்களை மட்டும் பாதிக்கின்றது.
பெண்களுடைய மாறுபட்ட நடவடிக்கைகள் எதிர்கால சந்ததியையே பாதிக்கிறது.
பெண் உரிமை என்றால் என்ன என்பதனை தெரிந்து கொள்ளுங்கள். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" மாதர்கள் தங்களைத் தாங்கள் இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வேண்டும்.
முதலில் பெண்ணுக்கு பெண்ணிடமிருந்து விடுதலை வேண்டும்.
வரதட்சணை என்ற பெயரால் வாட்டும் மாமியார்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.
ஆண்கள் ஒரு கருவி தான்...
அவர்களை ஆட்டுவிக்கும் விசைகளை முதலில் சாடுங்கள்.
"பெண்களை அழுகிறார்கள்
ஆண்கள் அழ வைக்கிறார்கள்
இறுதியில் பெண்கள் காரியத்தில் வெற்றி பெறுகிறார்கள்!
என்று டாக்டர் மு.வ. கூறியுள்ளார்.
எனவே பெண்களே உங்கள் கண்ணீரைக்
காட்டி ஆண்களை பலவீனமாக்காதீர்...
பிறரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்!
மரியாதை தானாக மலரும்
No comments:
Post a Comment