மகளிருக்கான குறிப்புகள்
*பட்டுப் புடவையில் துர்நாற்றம் வருகிறதா?
லேசான வெள்ளைத் துணியில் மிளகை வைத்து சிறு சிறு பொட்டலமாகக் கட்டி பட்டுப் புடவைகளுக்கு இடையே வையுங்கள். வாடை அறவே வராது.
*வாங்கிய தக்காளி அழுகிப் போகிறதே என்ற கவலையா?
வாங்கியதும் உப்பு நீரில் போட்டு வைத்தால் கெடாமலும் நிறம் மாறாமலும் இருக்கும்.
*சலவைக்குப் பின் துணி வெண்மையாக இருக்க வேண்டுமா?
இளம் சூடான நீரில் சோடா உப்பு பொடியைப் போட்டுத் துணிகளை ஊறவைத்து துவைக்கவும். துணிகள் "பளிச்" என்று இருக்கும்.
*பாத்திரங்கள் பளபளக்க வேண்டுமா?
தவிடு, அரப்பு, உபயோகித்த காபி பொடி ஆகியவற்றைக் கலந்து பாத்திரங்களை தேயுங்கள். முகம் பார்க்கும் அளவுக்கு அவை பளிச்சிடும்.
*பாட்டில் மூடி இறுகி திறக்கவில்லையா?
வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு திறந்து பாருங்கள் உடனே திறந்துவிடும்.
*சாம்பார் வெங்காயத்தை உரிக்கச் சிரமமாக உள்ளதா?
உரிப்பதற்கு முன் 10 நிமிடத்துக்குத் தண்ணீரில் ஊற வையுங்கள். தோல் சுலபமாக வரும்.
*அரிசி மாவு, ரவை போன்றவை சீக்கிரம் கெட்டுப் போகிறதா?
அவற்றைச் சலித்து வறுத்து வையுங்கள். நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
*சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டதா?
வெந்நீரைச் சேர்க்காதீர்கள். உருளைக்கிழங்கு மெலிதாக நறுக்கிப் போட்டால் உவர்ப்புத் தன்மை குறைந்து விடும்.
*சட்டைக் காலரில் உள்ள அழுக்குப் போகவில்லையா?
சிறிது ஷாம்பு எடுத்து காலர் அழுக்கில் தேய்த்து ஊறவைத்து துவைத்துப் பாருங்கள். அழுக்கு அம்பேல்.
*தயிர் புளிக்க வேண்டுமா?
அதில் தேங்காய் பத்தைகளைப் போட்டுப் பாருங்கள். சீக்கிரம் புளித்துவிடும்.
*சலவை சோப்புகளினால் ரவிக்கை நிறம் மங்குகிறதா?
குளிக்கும் சோப்பினால் துவைத்து நிழலில் உலர்த்துங்கள் நிறம் மாறாது.
*மழைச் சேறு பட்டு உடை கறையாகி விட்டதா?
உருளைக் கிழங்கை அரிந்து எடுத்து அதன் மீது தேய்த்தால் கறை காணாமல் போகும்.
No comments:
Post a Comment