இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே!
காதுகளை மறைத்துப் பின்னல் போட்டுக் கொண்டால் பெண்களின் நீளமான முகம் உருண்டையான முகம் போலத் தோன்றும்.
அணியும் புடவை பகட்டான டிசைன்கள் உள்ளதாக இருந்தால், அணியும் சோளி பூ வேலையோடு கோடுகளே இல்லாத லேசான வண்ணத்தினால் உள்ளதாக இருக்க வேண்டும். அப்போதுதான் எடுப்பாக இருக்கும்.
ஒற்றைச் சடை போட்டுக் கொள்ளும் பெண்கள், கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலியும், காதுகளில் கல் பதித்த அகலமில்லாத கம்மல்களையும் அணிந்து கொண்டால் அழகாக இருக்கும்.
நீள முகமுடைய பெண்கள், நெற்றியில் வட்டமாகப் பொட்டிடாமல், நெற்றியின் அகலவாக்கில் ஒன்றரை அங்குல நீளத்துக்கு விபூதிப் பூச்சுபோல் தடிப்பாகப் பொட்டிட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும்.
உயரமான தோற்றமுடைய பெண்கள் உயரத்தைக் குறைத்துக் காட்ட குதிகால் உயர்ந்த பாத அணிகளைத் தவிர்த்து, தரையோடு படிந்த அடிப்பாகம் கொண்ட பாத அணிகளையே பயன்படுத்த வேண்டும்.
ஒடுக்கமான கழுத்தைப் பெற்ற பெண்கள், காதுகளில் ஜிமிக்கி போன்ற தொங்கலான காதணியை அணிந்தால் தான் நன்றாக இருக்கும்.
குள்ளமான உருவமுடைய பெண்கள் பட்டையான தங்க வளையல்களை அணிந்தால் நல்லது. மெல்லிய வளையல்களாக இருந்தால் குறைந்தபட்சம் ஒவ்வொரு கையிலும் இரண்டு வளையல்கள் அணியவேண்டும்.
உயரமான கொண்டை போட்டுக் கொண்டால் எடுப்பான பெரிய பெரிய பூக்களைச் சற்றுப் பட்டையாகத் தொடுத்துச் சரமாக்கி கொண்டையைச் சுற்றி அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும்
No comments:
Post a Comment