பெண்களும் மனித உரிமைகளும்
மிகவும் கீழே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் கீழே அந்த சாதிப் பெண்கள் இருக்கிறார்கள். இப்படி மனித உரிமைகள் பலவந்தமாக மீறப்பட்டு வரும் ஒரு தேசத்தில் பெண்கள் இரட்டைப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெண்கள் தற்போது இவற்றை அறிந்து இவை பற்றி விவாதித்து விஷயங்களை வெளிக் கொணர்வது உற்சாகமூட்டுகிறது. பெண்கள் பிரச்சினை சற்று குழப்பமானதாகவும் பன்முகங் கொண்டதாயும் உள்ளது. இவை பற்றித் தெளிவில்லாமல் பெண்ணுரிமை பற்றிப் பேசுவது அர்த்தமற்றது.
மிகவும் கீழே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் மீது அந்த சாதிப் பெண்கள் இருக்கிறார்கள். இப்படி மனித உரிமைகள் பலவந்தமாக மீறப்பட்டு வரும் ஒரு தேசத்தில் பெண்கள் இரட்டைப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெண்கள் தற்போது இவற்றை அறிந்து இவை பற்றி விவாதித்து விஷயங்களை வெளிக் கொணர்வது உற்சாகமூட்டுகிறது. பெண்கள் பிரச்சினை சற்று குழப்பமானதாகவும் பன்முகங் கொண்டதாயும் உள்ளது. இவை பற்றித் தெளிவில்லாமல் பெண்ணுரிமை பற்றிப் பேசுவது அர்த்தமற்றது. இந்தியாவின் பிற கலாச்சாரங்களைப் பாதிக்கக்கூடிய அளவிலான பெரிய கலாச்சாரமான இந்துக் கலாச்சாரத்தைப் பற்றியே நான் பேச விழைகிறேன்.
ஆண் வழிச் சமுதாயம்
இந்து சமூகம் அடிப்படையில் ஆண் வழி சமூகம். இது இந்தியாவில் பெண்களை உலகின் பிற பாகங்களைப் போலவே ஆண்-பெண் உறவு முறையினைப் பொறுத்த அளவில் இரண்டாவது நிலைக்குத் தள்ளி வைத்து உள்ளது. இந்திய ஜனத் தொகையில் 48.2 சதவீதம் பெண்கள் இருந்தும் இந்நிலை நீடிக்கிறது. இதற்கு பெண்களின் "பெண்மை " காரணம் அல்ல. ஆனால் அவ்வாறே சொல்லப்படுகிறது. உண்மையில் கடுமையான சமூகப்பணி இதற்கு உண்டு.
பொதுவாகப் பரவலாக மற்றும் ஆழமாகப் பெண்களைப் பாதிக்கிறவை உளவியல் ரீதியானவையே. பெண் உடல் மானப்பங்கப்படுத்தப்படும் முன்னரே தாக்கப்பட்டு விடுகிறது. பெண் குழந்தை தவழ ஆரம்பிக்கும் போதே மூளைச்சலவை ஆரம்பித்து விடுகின்றது. ஊக்கமுடைய விசயங்கள் எதையும் செய்ய விடாமல் கை வளையல்களும், கால் கொலுசும் மென்மையைப் புலப்படுத்தும் வகையில் அணிவிக்கப்படுகின்றன. மிகவும் வசதியான குடும்பங்களுக்குக் கூட பெண் குழந்தை பிறப்பு வருத்தத்தையே தருகிறது. ஒரு 80 வயது பெண்மணியிடம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தபோது ஏற்பட்ட உணர்வினைக் கேட்டதற்கு அவர் சொல்கிறார். "அது ஒரு இறுதி சடங்கு மாதிரியானது ஆனால் என் மகன் பிறக்கும் போது அது சந்தோஷமாகவும் இனிப்பு வழங்க ஏற்றதாயும் அமைகிறது".
"புத்ர" பாக்கியம் என்கிற வேதக்கருத்து பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துகிறது. இது பெற்றோர்களுக்கும், சகோதரிகளுக்கும் பொருளாதார ரீதியில் ஆதரவாகவும் முக்கியமாக தந்தைக்கு ஈமகிரியை நடத்தவுமே என்றாகிறது. இந்து மதத்தின் ஆண் வழிச் சமூக அமைப்பை ஆண் மக்கள் பரம்பரைத் தொடர்வது என்கிற கருத்து மேலும் வலுவுள்ளதாக்குகிறது. எத்தனைப் பெண்கள் பெற்றோர்களுக்கு வெறும் பாரமாய் மட்டுமே அமைகிறப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கக் காரணத்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். மனு நீதிப்படி, பெண்கள் குழந்தைப் பிராயத்தில் தகப்பனுக்கும், இளமையில் கணவனுக்கும், கணவன் இறந்த பின் மகன்களுக்கும் கட்டுப்பட்டே வாழ வேண்டும். ஒருக்காலும் அவர்கள் தனித்து வாழ்தல் கூடாது; அவள் வெறுமனே தாயாகவும், மனைவியாகவும், மட்டுமே கருதப்பட்டாள். இந்தக் கருத்து லட்சியமாக்கப்பட்டது. மாத விலக்கு மற்றும்குழந்தைப் பிறப்பு ஆகியவை பெண் ஆணுக்குத் தாழ்ந்தவள் என்கிற கருத்தை வலுவுள்ளதாக்குகிறது. ஆண்கள் பெண்களைத் தொடர்ந்து தாக்குவதும் நீடிக்கிறது. அதிகமான பெண்கள உற்பத்தியில் விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஆகவே, அவர்களின் கணவன்மார் அவர்கள் வருமானத்தை நம்பி வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் ஆண்கள் பெண்களைத் துன்புறுத்துவதால் நீடிக்கிறது. பெண்கள் ஆண்களின் சொத்து என்றாவதால் ஆண்கள் பெண்களை நினைத்தப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறார்கள். அடிக்கடி ஆண்கள் தங்களின் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியினைக் குடிப்பதிலும், பெண்களோடு உறவு வைப்பதிலும் செலவிடுகிறார்கள். பெண்களே தங்களையும் தங்கள் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள். இந்தச் சூழலில் பெண்கள் அடி வாங்குவது சாதாரணமாகிவிடுகிறது.
பெண்கள் சொத்து ஆதல்
இந்து வேதத்தின் மற்றொரு மோசமான விசயம் பெண்கள் ஆண்களின் சொத்து என்று கூறப்படுவது. "அரசியல் வேடதாரிகளும்" இந்து மத ஜால்ராக்காரர்களும் என்ன சொன்னாலும் பெண், ஆணின் சொத்து என்ற கருத்து நமது பாரம்பரிய நடைமுறையில் அமைந்துள்ளது. ஏனெனில் பெண் ஆணின் சொத்து வடிவம். கற்பழிப்பு, உடன்கட்டை ஏறுதல், திருமணமான மகளிர் எரிக்கப்படல் ஆகியவை நியாயப்படுத்தப்படுகின்றன. பெண்கள் அவர்களது கணவன்மார் விரும்புகிறபடி செய்யப்படலாம். ரிக் வேதத்தில் கூட பெண்ணின் உபயோகம் என்கிற கருத்து அவளின் பாலியல் தன்மை என்பதை மையமாகக் கொண்டே அமைகிறது.
பொருளாதார, அரசியல் ரீதியில்
பொருளாதார அமைப்பு பெண்ணுரிமைகளைப் பறிப்பதில் பிரதான பங்கு வகிக்கின்றது. நம்மைக் கட்டுப்படுத்தும் ஒடுக்கு முறை நிறுவனங்கள், பழக்க வழக்கங்கள், தடைச் சக்திகள் அனைத்துப் பொருளாதார சுரண்டலில் வேரூன்றியுள்ளன. பொருளாதாரத் தேக்க நிலையும், பாதுகாப்பற்ற தன்மையும் தொடரும் வரை தொன்றுதொட்டு வரும் பழக்க வழக்கங்கள் ஒருவனுக்கு பாதுகாப்பைத் தருகிறது. தங்களைப் பாதிக்கும் செயல்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள்.
பெண்கள் விடுதலை என்பது தனித்து வெற்றி பெற முடியாதது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் சுரண்டும் வர்க்கம் அல்லது ஜாதி அமைப்பிலிருந்து விடுபடவேண்டி, போராடும் ஒரு போராட்டத்தின் பகுதியாக பெண்கள் விடுதலைப் போராட்டம் அமைதல் வேண்டும். எப்படியும் இப்படி சொல்வது பெண்கள் பிரச்சினை பற்றி விவாதிப்பது என்கிற விசயத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கல்ல. ஏனென்றால் சுரண்டல் சமூகத்தில் பெண்களே மிகவும் பாதிக்கபடுவர்களாகவும் தனிப்பட்ட சுமைகளைச் சுமப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு
நம்முடைய முதலாளித்துவ பொருளியல் அமைப்புப் பெண்களின் பங்கினைக் குறைத்து மதிப்பிடுகிறது. தொழிற் பகுதிகளில் மந்தமான தன்மையும் விவசாயத்துறையில் முதலாளிகளின் ஊடுருவலும் பழங்குடியினர். ஏழை விவசாயிகள் மற்றும் சிறு தொழில் புரிபவர்கள் ஆகியோரின் நிலையைப் பெரிதும் நாசப்படுத்தியுள்ளது. முதலாளித்துவ சமூகத்தில் பெண்களே மிகவும் அதிக அளவில் வறுமையில் வாடுகிறார்கள். தாங்கள் வாழ்வதற்காக அவர்கள் ஒன்று கூட்டம் நிறைந்த நகரங்களுக்குச் சென்று வீட்டுவேலை, பிச்சை எடுத்தல், விபச்சாரம் போன்ற வேலைகளில் ஈடுபடவேண்டும் அல்லது கிராமங்களிலே தேவைக்கு மிகவும் குறைந்த சம்பளத்துக்கு விவசாயக் கூலிகளாக வேலை செய்ய வேண்டும்; பின்னர் அங்கே இங்கே அலைந்து வேலைப் பார்க்கும் போது காண்ட்ராக்டர்களாலும், போலீஸாராலும், நிலச் சுவான்தார்களாலும் கூட கற்பழிக்கப்படவும் சுரண்டபடவும் ஆளாகின்றனர்.
பெண்களும் வேலையும்
முதலாளித்துவத் தொழில் மயத்தினால் குடிசைத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பரம்பரையாக அத்தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வேலையிழக்க நேரிட்டுள்ளது. தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் வகையில் புதிய எந்திரங்களை புகுத்தும் போது மேலும் பெண்கள் வெளியேற்றப்படுகிறார்கள். காரணம் பெண்கள் திறமையற்றவர்களாயிருப்பது, உதாரணமாக விவசாயம், மீன் வளர்த்தல், நெசவு ஆகியவைகளைக் கூறலாம்.
அமைப்பு ரீதியில் ஒருங்கிணைந்த பகுதியினர்
முதலாளித்துவ உலகத்தின் அனுபவம் "சமமான வேலைக்கு சமமான கூலி" என்கிற சட்டம் நடைமுறைக் காட்டிலும் அலங்காரத்தில் தான் உள்ளது என்பதே. அதே போல் ஒரு பொருளாதார நெருக்கடியின் போது பெண் தொழிலாளர்களே வேலையிழந்து முதல் பலி ஆகிறார்கள். இது ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் வேலையற்று இருக்கிறார்கள் என்கிற உண்மை நிலையிலும் கூட நடக்கிறது. வேலைக் கொடுக்கப்படுவதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் தற்போது உள்ள சில பாதுகாப்புச் சட்டங்களால் பெண்களுக்கு முன்பு போல் குறைந்த கூலி கொடுக்க முடியாது. ஆனால் இந்த விசயம் பெண்கள் குழந்தைகளைக் கவனித்தும், வீட்டு வேலைகளைச் செய்வதும் ஆரோக்கியமான குடும்பம் மற்றும் சமூகம் அமையச் செய்வது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நல்லது என்று தத்துவார்த்த ரீதியாகத் திசை திருப்பப்படுகிறது.
பிரபலமான சில பிரச்சினைகள்
மனித உரிமைகளைப் பற்றியும் பெண்கள் பிரச்சினை பற்றியும் ஆன ஒரு ஆழ்ந்த புரிதல் ஏற்பட நான் இங்கே கூறும் பிரச்சினைகள் அவை மட்டும் தான் என்பதல்ல; அவையே பெரிய பிரச்சினைகளுமல்ல; பெண்கள் எந்த வழிகளில் நடத்தப்பட்டார்கள் என அறியவே இவற்றறைக் கூறுகிறேன்.
கற்பழிப்பு
அலிகார், பெல்ச்சி, பெய்லடில்லா, நாராயண்பூர், சிங்பும், அஸ்ஸாம், மிஜோராம் அல்லது சமீபத்தில் குவா சுரங்கத்தில் நடைபெற்றது மாதிரி வன்முறைக் கலவரம், ஜாதிச் சண்டைகள், வகுப்புக் கலவரங்கள் அல்லது போலீஸ் அடக்குமுறை ஆகியன பற்றி செய்தி வராத நாளே இல்லை. அப்படிப்பட்ட செய்திகளின் முதல் பக்கத்தில் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், பயிர்கள் நாசம் செய்யப்பட்டதாகவும் ஏராளமான பெண்கள் தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டதாகவும் செய்தி இருக்கும். பெண்கள் தங்களுக்கெதிராக அணி திரளாமல் தடுக்கும் பொருட்டே நிலப்பிரபுகளும், அவர்களின் குண்டர்படையும் கற்பழிப்பை மேற்கொள்ளுகின்றனர். கற்பழிப்பு, ஒரு பெண்ணை பலர் கற்பழிப்பது, பல பெண்ணை பல ஆண்கள் கூட்டமாகச் சென்று கற்பழிப்பது என்கிறவையெல்லாம் தங்களுக்கெதிராகத் திரளும், பெண்களுக்கெதிராகப் பயன்படுத்தப்படும் அரசியல் ஆயுதமாகியுள்ளது. இந்தக் கருவி போலீசாரால் மட்டும் அல்லாது சி.ஆர்.பி. ராணுவம், அரசியல்வாதிகள், நிலப்பிரபுக்கள், மற்றும் பெரிய தொழிலதிபர்களால் பழங்குடியினர், விவசாயிகள், தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதிவாசிகள் மற்றும் கிராமம் முழுவதிற்கும் எதிராகப் பயன்படுத்தப்படுகிறது
No comments:
Post a Comment