Friday, November 12, 2010

கழுத்து வலிக்கு குட்பை

கழுத்து வலிக்கு குட்பை!

டாக்டர் சாருமதி Good Bye to Neck Pains - Food Habits and Nutrition Guide in Tamil
இப்போது யாரை பார்த்தாலும், கழுத்து வலி, முதுகு வலி என்று சொல்வதை அறிந்திருப்பீர்கள். அவர்களில் பலரும் இளைய தலைமுறையினராக இருப்பர். சாப்ட்வேர் நிறுவனங்களில், பி.பி.ஓ., கால் சென்டர்களில் பணிபுரிவோராக இருப்பர்.
ஏன் அவர்களுக்கு இப்படி கழுத்து வலி வருகிறது? எல்லாருக்குமா வருகிறது? இதை கவனிக்க வேண்டும். சாப்ட்வேரில் இருப்பர் எல்லாருக்கும், கால் சென்டர்களில் வேலை செய்வோர் எல்லாருக்கும் இப்படி ஏற்படுவதில்லை.

சிலருக்கு தான், அவர்கள் உடல் நிலையை பொறுத்து வருகிறது இந்த வலிகள். பல நு‘று பேர் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான பேர் அவதியுறுகின்றனர். சாப்ட்வேர் நிறுவனமாகட்டும், மற்ற எந்த நிறுவனமாகட்டும், கம்ப்யூட்டர் என்று சொல்லப்படும் கணினி கையாளும் யாருக்கும் போதிய உடற்திறன், உடற்பயிற்சி இல்லாவிட்டால், நிச்சயம் பாதிப்பு தான். இளைய வயதினர் என்பதல்ல, யாருக்கும் இது வரலாம். ஆனால் அதை தவிர்ப்பது, தடுப்பது பெரிய விஷயமே இல்லை.

இதுபற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. விலங்குகளைப் போல் இல்லாமல் நிமிர்ந்து நிற்பதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது நமது முதுகு தண்டுவடம் ஆகும். இத்தண்டுவடம் எலும்புகளை சங்கிலியால் கோர்த்தது போன்ற நுணுக்கமான அமைப்பாகும்.
இந்த எலும்புகள் இடையே தேய்மானம் ஏற்படாமல் இருக்க ஜவ்வானது, குஷன் போன்று செயல்படுகிறது. இதையே நாம் ஆங்கிலத்தில் இன்டர் வெர்ட்டிபிரெல் டிஸ்க் (intervertebral Disc) என்போம்.
யார் யாருக்கு ஏற்படுகிறது?
* கணினி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள்.
* அடிக்கடி வெகு தொலைவுக்கு பயணம் மேற்கொள்பவர்கள்.
* நடுத்தர வயதை கடந்தவர்கள்.
இவர்களின் கழுத்து எலும்பு மிகவும் தேய்மானம் அடைவதால் குஷன் போன்று செயல்பட்ட குருத்தெலும்பு நகர்ந்து விடுகிறது. இதன் காரணமாக நரம்புகள் அழுத்தப்படுகின்றன.
அறிகுறிகள் என்னென்ன?
* எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதால் கழுத்து பகுதி விரைதன்மை அடைந்து கழுத்தை திருப்ப முடியாமல் போகிறது.
* நரம்புகளின் அழுத்தத்தால் ஏற்படும் வலியானது தோள்பட்டையில் இருந்து உள்ளங்கை வரை மின்னல் தாக்குவது போன்று பரவும்.
* வலியோடு மட்டும் இன்றி மரத்துப் போய்விடுவதால் தளர்ச்சி உணர்வு அற்ற தன்மையும் காணப்படும்.
* சிலருக்கு தலை சுற்றலும் ஏற்பட வாய்ப்புள்ளது.
தடுக்கும் முறைகள்
"வரும் முன் காப்பது நிலம்" என்பதற்கு ஏற்ப நாம் உட்காரும்போது சரியான விதத்தில் உட்கார வேண்டும். தினமும் சிறிது நேர உடற்பயிற்சியானது நம் உடலுக்கு நலத்தை விளைவிக்கும்.
சரி பிரச்னை ஏற்பட்டு விட்டது. அதற்காக கவலைப்பட வேண்டாமே! ஹோமியோபதி மருத்துவத்தில் இதற்கு நிரந்தரமாக குணமளிக்கக் கூடிய RHUSTOX BRYONIA RUTA CALC FLOUR போன்ற பல நன்மை பயக்கும் மருந்துகள் பல உள்ளன. இவற்றால் எந்த பக்க விளைவுகளும் இருக்காது. எனவே, கழுத்துப் பட்டைக்கு "குட்பை" கூறிவிட்டு அருகில் உள்ள ஹோமியோபதி மருத்துவரை நாடி பயன் பெறுங்கள்.

No comments:

Post a Comment