Friday, November 12, 2010

தொப்பைக்கு குட்பை!

தொப்பைக்கு குட்பை!

டாக்டர் ராஜ்குமார் -To become slim - Food Habits and Nutrition Guide in Tamil
உடல் பருமன் என்பது சாதாரணமான அழகு சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. உடல் நலன் சார்ந்த பிரச்சினையும் கூட.
இதனால் நீரழிவு, மிகை ரத்த அழுத்தம், மூட்டுவலிகள், தூக்கமின்மை, ஆஸ்துமா, இதயம் செயலிழத்தல், மனஇறுக்கம், மலட்டுத்தன்மை, தோல்புண்கள், ரத்த உறைவுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் ஆகியவை வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மார்பிட் ஓபிசிடி எனப்படும் தீவிரமான உடல்பருமன் மிகவும் ஆபத்தான ஒரு உடல்நலப் பிரச்சினையாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது

அமெரிக்காவில் மட்டும் 40 லட்சம் மக்களுக்கு மேல் இந்த நாட்பட்ட நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதைச் சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை முறை சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது பாதுகாப்பானதாகவும் நீண்டகாலம் சாதகமான விளைவை உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது.
தீவிரமான உடல் பருமன் உள்ள நோயாளிகளுக்கு எடை குறைக்கும் அறுவை சிகிச்சை பலன் தரக்கூடியதாக கருதப்படுகிறது.
லேப்ராஸ்கோப்பிக் முறையிலான பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை பற்றி பார்ப்போம்.
இந்த முறையில் எடை குறைப்பானது 2 அடுக்கு முறையில் சாத்தியமாக்கப்படுகிறது. முதலாவது கட்டுப்பாடு. 2 முதல் 3 லிட்டர் கொள்ளளவு உள்ள அறுவை சிகிச்சை மூலம் ஒரு லிட்டராக கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் நோயாளி ஒரு குறிப்பிட்ட அளவு உணவை மட்டுமே சாப்பிட முடிகிறது. அவ்வாறு சாப்பிட்டதும் சாப்பிட்ட திருப்தியும் ஏற்படுகிறது.
பை போன்று இருக்கும் வயிற்றை அறுவை சிகிச்சை மூலம் குழாய் மாதிரி மாற்றுகிறார்கள். இந்த முறையின் போது இரைப்பையின் ஒரு சிறிய பகுதியானது க்ரெலின் என்ற பசி தூண்டும் ஹார்மோனை சுரக்கும் பகுதி நீக்கப்படுகிறது.
இதனால் நோயாளி உணவுக் கட்டுப்பாடு எதையும் மேற்கொள்ளாமலேயே உணவை அளவாக உண்பதற்கான உணவு முறையிலும் மாற்றம் செய்யப்படுகிறது.

2-வது முறைக்கு மால் அப்சார்ப்ஷன் என்று பெயர். சிறுகுடல் உணவில் உள்ள சத்துப் பொருட்களை உறிஞ்சாமல் இருக்க பை-பாஸ் செய்யப்படும். சிறுகுடலின் மிகச்சிறிய பகுதியால் போதிய அளவு ஊட்டச்சத்தை திறனுடன் உறிஞ்சிட இயலாது.

இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நோயாளி குறைவாகச் சாப்பிடுவார். நிறைவாக உணர்வார். எதை சாப்பிடுகிறாரோ அது குறைவாக உடலால் உட்கிரகிக்கப்படும். கலோரி உட்கொள்ளும் அளவைவிட செலவிடப்படும் கலோரியின் அளவு அதிகரிப்பதால் நோயாளி எடை குறைந்து விடுவார்.

லேப்ராஸ்கோப்பி முறையில் வயிற்றுப் பகுதியில் ஒரு சிறிய சாவி அளவில் துவாரமிடப்பட்டு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்படும் நேரமும் குறைவு, வலியில்லை, செலவுகள் இல்லை. விரைந்து நலம் பெறவும் இயலும். அறுவை சிகிச்சையின் போது பக்க விளைவுகளோ, சிக்கல்களோ தோன்றுவது கிடையாது. கொழுப்பு அடுக்குகளை வெட்டிக் கொண்டிருக்கும் வேலையும் கிடையாது.

இந்த அறுவை சிகிச்சையால் அடுத்த 3 மாதத்தில் 3 முதல் 10 கிலோ எடை வரை குறைகிறது. ஒரு ஆண்டிற்குள் நோயாளிகளுக்கு 15 கிலோ எடை குறையும். அடுத்த சில ஆண்டுகளில் அதிக எடை குறைந்து எடையானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

No comments:

Post a Comment