Friday, November 12, 2010

தலைவலிக்கு மனநல கோளாறே காரணம்!

தலைவலிக்கு மனநல கோளாறே காரணம்!

இந்திரா கைலாசம் Dr. Interview : Mental Stress is the main cause for Headache - Food Habits and Nutrition Guide in Tamil
கேவலம் பயம் என்கிற உணர்ச்சியே லட்சக்கணக்கான மக்களை நல்ல ஆரோக்கியத்திலிருந்து விலக்கி வைக்கிறது. உடலின் எல்லாவித செயல்பாடுகளையும் அது மோசமாகப் பாதிக்கிறது. ரத்த ஓட்டத்தை முதலில் வெகுவாகப் பாதிக்கிறது. அதன் வேகத்தை குறைக்கிறது. அதனால் உடலிலிருந்து வெளியேற்ற வேண்டிய அசுத்தங்கள் வெளியேறுவதில்லை.
மெதுவான அல்லது சீராக இல்லாத ரத்த ஓட்டம் மெல்ல மெல்ல உடலிலே விஷத்தை ஏற்றுகிறது. சக்தி குறைகிறது. ஆண்மை மெதுவாக குறைய ஆரம்பிக்கிறது. உடலின் அவயங்கள் நன்றாக செயல்படுவதை பய உணர்ச்சியாக விஷமாக உடலில் சென்று மெல்ல மெல்ல தடுக்கிறது.

சிலருக்கு தற்காலிகமாகவும் மற்றும் சிலருக்கு இது நிரந்தரமாகவும் தாக்குகிறது. உள்ளத்தில் பயம் என்கிற உணர்ச்சி இருக்கும் வரை அவயங்கள் சரியாக இயங்கப்போவதில்லை.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் புத்திசாலித் தனம் உடைய ஒன்று என்பது நிச்சயம். அவை ஒவ்வொன்றும் நமது சிந்தனைகளில் பங்கு கொள்கின்றன.

உடலில் உள்ள லட்சோபலட்சம் செல்கள் மூளையுடன் நெருக்க மானதும் உடனடியானதுணை உறவை கொண்டிருக்கின்றன. அதாவது உலகில் அல்லது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்ப நாம் எப்படி நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம் என்பதையும் பொறுத்துதான் செல்களும் செயல்படுகின்றன.

தீராத தலைவலி, ஒற்றை தலைவலி, நாள்பட்ட தலைவலிக்கு எல்லாம் மனநல மருத்துவத்தில் குணமடைய செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எல்லாவிதத்திலும் பூர்ணமான ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய எந்த ஒரு மனிதரையும் நாம் பார்த்ததில்லை.
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அதாவது நம் ஒவ்வொருவருக்கும் கவலைப்படுவதற்கு என்றே ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கவலைப்படுவதினால் நோய் குணமாகப் போவதில்லை. நோயை மேலும் கொடியதாக்க வேண்டிய நஞ்சைத்தான் அது உடலில் மேலும் பாய்ச்சுகிறது. பார்ப்பதற்கு வலுவான பொலிவான தோற்றமும் உடையவர்கள் பலர், அடிக்கடி ஏதோ நல்ல ஆரோக்கியம் இருப்பதாகவே சொல்லிக் கொள்வார்கள். ஆனால் தலைவலிக்கிறது. மண்டையை குடைகிறது. மண்டையை பிச்சுக்கலாம் போல என்பார்கள்.

இந்த வித பேச்சுக்கள் உடல் நலத்தை எவ்வளவு கெடுக்கும் தெரியுமா? இந்த சிறுசிறு பயங்களை அறவே உதறித்தள்ள வேண்டும். அவற்றிற்கு எந்த அளவு இடம் கொடுக்கிறோமோ அந்த அளவு அவை நம்மைச் சேர்த்து கொடுமைப்படுத்தும் நாம் எவற்றைக் கண்டு அஞ்சுகிறோமோ அவை, இனம் இனத்தோடு சேரும் என்கிற என்னும் மாறாத விதிப்படி கட்டாயம் நடந்தே தீருவதற்கு உரிய சக்தியை நாமே அளிக்கிறோம்.

ஒரு வியாபாரத்திற்கு மூலதனம் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஆரோக்கியத்தின் மீது நமக்கு உள்ள நம்பிக்கை என்கிறார் சென்னை, மூலக்கடையில் உள்ள பாத்திமா மருத்துவமனையின் மருத்துவர் எஸ்.எம்.பதூர் மொய்தீன்.

No comments:

Post a Comment