Tuesday, November 30, 2010

விஜய்க்கான போட்டியில் ஜெயித்தது நான்தான்! - மித்ரா

கிராமத்துக்காக மடிப்பிச்சை எடுத்த சிறுவன்

தமிழில் 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்'

கௌதம் மேனனின் கூட்டணியை மாற்றிய ஒளிப்பதிவாளர்!

ஆர்யாவுக்கு வலுக்கிறது கண்டனங்கள்

தமிழுக்கு வரும் கவர்ச்சித் தென்றல்

'மன்மதன் அம்பு' சரியான ரொமான்டிக் காமெடி! - த்ரிஷா

நான்கு நாட்கள் தண்ணீ­ரில் நின்ற சூர்யா!

அரசுக்கு கமல் வைத்த கோரிக்கை

சிக்கு புக்குக்கு சிறப்பு இணையதளம்

இரவில் மும்பையை சுற்றும் சமீரா

விஜய்யை நெகிழ வைத்த சிலை

எதிர்பார்ப்புடன் யாரும் வராதீர்கள்! - ஜெய்

வீட்டை விட்டு வெளியேறிய சரண்யா

பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி - ஹன்சிகா

கண்களால் மிரள வைத்த சூர்யா!

இளைஞர்களுக்கு அனுஷ்காவின் அறிவுரை

Saturday, November 27, 2010

நடிகர் ஸ்ரீமனின் 'பரிமளா திரையரங்கம்'

பிரபுதேவாவின் 'புதிய காதல்'!

லிம்காவில் சனிக்கிழமை சாயங்காலம்

உயிர் தப்பிய எம்.எஸ்.பாஸ்கரின் உபதேசம்

இடிக்காதீங்கண்ணே நல்லாயில்ல... டென்ஷனான சினேகா!

நண்பனோடு வேட்டைக்குத் தயாரான ஜெய்

திட்டக்குடியில் மகிழ்ச்சி பொங்கிய கௌதமன்!

தம்பிக்கோட்டையில் 420 சங்கீதா

டிசம்பர் ஒன்று முதல் காவலன் இசை!

சிகரத்தின் பாராட்டைப் பெற்ற கரு.பழனியப்பன்

அமீரிடம் கால்ஷீட் கேட்ட எஸ்.ஏ.சி!

'பாடி அழைத்தேன்' நிகழ்ச்சியில் எஸ்.பி.பி

பொங்கல் ஆட்டத்தில் ஆடுகளம்!

விநியோகஸ்தர்கள் மீது சுந்தர்.சி கடுப்பு

கரீனாவால் ட்ராப் ஆன 'ஹீரோயின்'

கின்னஸில் இடம்பெறப் போகும் விஷால்

பி.வாசுவை ஆந்திராவுக்கு போகச் சொன்ன ரஜினி

Thursday, November 25, 2010

கார்த்திக்கு கிடைத்த பிரமோஷன்

முன்னணி இயக்குநருக்கு மறுப்பு தெரிவித்த சூர்யா!

தயாரிப்பாளரை திகிலடைய வைத்த அஜித்

இன்று கலைப்புலி எஸ்.தாணு மகன் திருமணம்

கோடம்பாக்கத்தையே சலசலக்க வைத்த ஆர்யா!

மூவராகுமா 3 இடியட்ஸ்?!

கரு. பழனியப்பன் அரங்கேற்றிய ப்ளாக்கர்ஸ் ஷோ

'மன்மதன் அம்பை' கை கழுவிய உதயநிதி

காவலனுக்கே ஆறு வார காவலா?

பாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா அனுஷ்கா

தமன்னாவை தூக்கி வீசிய லிங்குசாமி!

கோடைக்கு ஏற்ற உடைகள்!

கோடைக்கு ஏற்ற உடைகள்!

தனலெட்சுமி
 
கோடைகாலம் வந்து விட்டாலே கடுமையான வெயில். அதிகமான உஷ்ணம். அதனால் கோடை காலத்துக்கு தக்கபடி நீங்கள் உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்திக் கொண்டால் சவுகரியமாக இருக்கும். அதிக உஷ்ணமும் இருக்காது.
கோடை காலத்தில் உடலில் உள்ள தட்பவெப்ப நிலையை உடைகளால் சமன்படுத்திக் கொள்ள முடியும். உடைகளின் நிறம், அதன் மூலப் பொருள் இரண்டும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இளம் நிறத்திலான உடைகளே கோடை காலத்திற்கு ஏற்றது. கறுப்பு நிற உடை உஷ்ணத்தை அதிகப்படுத்தும். அதேநேரம் இளநிற உடைகள் உஷ்ணத்தை உடலில் இருந்து அப்புறப்படுத்தும். கோடைக்கு மிகவும் ஏற்றது வெள்ளை நிற உடைகள்தான்.
பாலிஸ்டர், ஷிபான் உடைகளை கோடை காலத்தில் உடுத்திக் கொள்ளாமல் இருப்பது மிக நல்லது. மென்மையான பருத்தி ஆடைகளை அணிந்தால், உடலில் உள்ள உஷ்ணம் ஓரளவு அகலும்.

Wednesday, November 24, 2010

பெண்களும் மனித உரிமைகளும்

பெண்களும் மனித உரிமைகளும்

அருணா ஞானதாசன்
 
சுதந்திரம், சமத்துவம், அடிப்படை உரிமைகள், குடியுரிமை, பேச்சு சுதந்திரம் இவை மாதிரியான சிறந்த வார்த்தைகள் இந்தியாவில் 70-ல் இருந்து 80 சதவீதம் வரை இருக்கும் நிலமற்ற உழவர்கள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், அமைப்பு ரீதியில் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு முழுக்க முழுக்க அர்த்தமற்றவை.
மனு என்று கூறப்படுகிற புகழ் பெற்ற இந்து மதச் சட்டமும், வேத புத்தகங்களும் பெண்களைத் தாழ்த்தப்பட்ட மக்களின் அந்தஸ்திற்குத் தாழ்த்தி வைத்தது. ஒன்றும் தற்செயலானது அல்ல. சுரண்டல் சமூகத்தில் தாழ்த்தப்பட்ரோரைப் போல பெண்கள் நாய்கள் மாதிரி நடத்தப்படுகின்றனர். இவர்கள் சில சமயங்களில் கேலி செய்யப்படவும், தாக்கப்படவும், கொலை செய்யப்படவும் ஆளாகிறார்கள். பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். கெய்ல் ஓம்லெட் இவர்களை "தாழ்த்தப்பட்டோரிடையே தாழ்த்தப்பட்டவர்" என்று குறிப்பிடுகின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்த அம்பேத்கார் இந்தக் கருத்தை ஆதரிக்கிறார். டாக்டர் அம்பேத்கார் இந்து சமயச் சாதி அமைப்பை ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கப்பட்டு இருக்கும் களிமண் பானைகளுக்கு ஒப்பிடுகிறார். பிராமணர், சத்திரியர் ஆகியோர் மேலாகவும், சூத்திரர் தீண்டத்தகாதோர் ஆகியோர் கீழாகவும் மட்டுமல்ல. ஒவ்வொரு பானைக்குள்ளும் ஆண்கள் மேலாகவும், பெண்கள் கீழாகவும் அந்தந்த சாதியில் நசுக்கப்பட்ட கழிவுத்துளைப் போல அமைக்கப்பட்டிருக்கின்றனர்.
மிகவும் கீழே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் கீழே அந்த சாதிப் பெண்கள் இருக்கிறார்கள். இப்படி மனித உரிமைகள் பலவந்தமாக மீறப்பட்டு வரும் ஒரு தேசத்தில் பெண்கள் இரட்டைப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெண்கள் தற்போது இவற்றை அறிந்து இவை பற்றி விவாதித்து விஷயங்களை வெளிக் கொணர்வது உற்சாகமூட்டுகிறது. பெண்கள் பிரச்சினை சற்று குழப்பமானதாகவும் பன்முகங் கொண்டதாயும் உள்ளது. இவை பற்றித் தெளிவில்லாமல் பெண்ணுரிமை பற்றிப் பேசுவது அர்த்தமற்றது.
மிகவும் கீழே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் மீது அந்த சாதிப் பெண்கள் இருக்கிறார்கள். இப்படி மனித உரிமைகள் பலவந்தமாக மீறப்பட்டு வரும் ஒரு தேசத்தில் பெண்கள் இரட்டைப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெண்கள் தற்போது இவற்றை அறிந்து இவை பற்றி விவாதித்து விஷயங்களை வெளிக் கொணர்வது உற்சாகமூட்டுகிறது. பெண்கள் பிரச்சினை சற்று குழப்பமானதாகவும் பன்முகங் கொண்டதாயும் உள்ளது. இவை பற்றித் தெளிவில்லாமல் பெண்ணுரிமை பற்றிப் பேசுவது அர்த்தமற்றது. இந்தியாவின் பிற கலாச்சாரங்களைப் பாதிக்கக்கூடிய அளவிலான பெரிய கலாச்சாரமான இந்துக் கலாச்சாரத்தைப் பற்றியே நான் பேச விழைகிறேன்.
ஆண் வழிச் சமுதாயம்
இந்து சமூகம் அடிப்படையில் ஆண் வழி சமூகம். இது இந்தியாவில் பெண்களை உலகின் பிற பாகங்களைப் போலவே ஆண்-பெண் உறவு முறையினைப் பொறுத்த அளவில் இரண்டாவது நிலைக்குத் தள்ளி வைத்து உள்ளது. இந்திய ஜனத் தொகையில் 48.2 சதவீதம் பெண்கள் இருந்தும் இந்நிலை நீடிக்கிறது. இதற்கு பெண்களின் "பெண்மை " காரணம் அல்ல. ஆனால் அவ்வாறே சொல்லப்படுகிறது. உண்மையில் கடுமையான சமூகப்பணி இதற்கு உண்டு.
பொதுவாகப் பரவலாக மற்றும் ஆழமாகப் பெண்களைப் பாதிக்கிறவை உளவியல் ரீதியானவையே. பெண் உடல் மானப்பங்கப்படுத்தப்படும் முன்னரே தாக்கப்பட்டு விடுகிறது. பெண் குழந்தை தவழ ஆரம்பிக்கும் போதே மூளைச்சலவை ஆரம்பித்து விடுகின்றது. ஊக்கமுடைய விசயங்கள் எதையும் செய்ய விடாமல் கை வளையல்களும், கால் கொலுசும் மென்மையைப் புலப்படுத்தும் வகையில் அணிவிக்கப்படுகின்றன. மிகவும் வசதியான குடும்பங்களுக்குக் கூட பெண் குழந்தை பிறப்பு வருத்தத்தையே தருகிறது. ஒரு 80 வயது பெண்மணியிடம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தபோது ஏற்பட்ட உணர்வினைக் கேட்டதற்கு அவர் சொல்கிறார். "அது ஒரு இறுதி சடங்கு மாதிரியானது ஆனால் என் மகன் பிறக்கும் போது அது சந்தோஷமாகவும் இனிப்பு வழங்க ஏற்றதாயும் அமைகிறது".
"புத்ர" பாக்கியம் என்கிற வேதக்கருத்து பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துகிறது. இது பெற்றோர்களுக்கும், சகோதரிகளுக்கும் பொருளாதார ரீதியில் ஆதரவாகவும் முக்கியமாக தந்தைக்கு ஈமகிரியை நடத்தவுமே என்றாகிறது. இந்து மதத்தின் ஆண் வழிச் சமூக அமைப்பை ஆண் மக்கள் பரம்பரைத் தொடர்வது என்கிற கருத்து மேலும் வலுவுள்ளதாக்குகிறது. எத்தனைப் பெண்கள் பெற்றோர்களுக்கு வெறும் பாரமாய் மட்டுமே அமைகிறப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கக் காரணத்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். மனு நீதிப்படி, பெண்கள் குழந்தைப் பிராயத்தில் தகப்பனுக்கும், இளமையில் கணவனுக்கும், கணவன் இறந்த பின் மகன்களுக்கும் கட்டுப்பட்டே வாழ வேண்டும். ஒருக்காலும் அவர்கள் தனித்து வாழ்தல் கூடாது; அவள் வெறுமனே தாயாகவும், மனைவியாகவும், மட்டுமே கருதப்பட்டாள். இந்தக் கருத்து லட்சியமாக்கப்பட்டது. மாத விலக்கு மற்றும்குழந்தைப் பிறப்பு ஆகியவை பெண் ஆணுக்குத் தாழ்ந்தவள் என்கிற கருத்தை வலுவுள்ளதாக்குகிறது. ஆண்கள் பெண்களைத் தொடர்ந்து தாக்குவதும் நீடிக்கிறது. அதிகமான பெண்கள உற்பத்தியில் விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஆகவே, அவர்களின் கணவன்மார் அவர்கள் வருமானத்தை நம்பி வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் ஆண்கள் பெண்களைத் துன்புறுத்துவதால் நீடிக்கிறது. பெண்கள் ஆண்களின் சொத்து என்றாவதால் ஆண்கள் பெண்களை நினைத்தப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறார்கள். அடிக்கடி ஆண்கள் தங்களின் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியினைக் குடிப்பதிலும், பெண்களோடு உறவு வைப்பதிலும் செலவிடுகிறார்கள். பெண்களே தங்களையும் தங்கள் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள். இந்தச் சூழலில் பெண்கள் அடி வாங்குவது சாதாரணமாகிவிடுகிறது.
பெண்கள் சொத்து ஆதல்
இந்து வேதத்தின் மற்றொரு மோசமான விசயம் பெண்கள் ஆண்களின் சொத்து என்று கூறப்படுவது. "அரசியல் வேடதாரிகளும்" இந்து மத ஜால்ராக்காரர்களும் என்ன சொன்னாலும் பெண், ஆணின் சொத்து என்ற கருத்து நமது பாரம்பரிய நடைமுறையில் அமைந்துள்ளது. ஏனெனில் பெண் ஆணின் சொத்து வடிவம். கற்பழிப்பு, உடன்கட்டை ஏறுதல், திருமணமான மகளிர் எரிக்கப்படல் ஆகியவை நியாயப்படுத்தப்படுகின்றன. பெண்கள் அவர்களது கணவன்மார் விரும்புகிறபடி செய்யப்படலாம். ரிக் வேதத்தில் கூட பெண்ணின் உபயோகம் என்கிற கருத்து அவளின் பாலியல் தன்மை என்பதை மையமாகக் கொண்டே அமைகிறது.
பொருளாதார, அரசியல் ரீதியில்
பொருளாதார அமைப்பு பெண்ணுரிமைகளைப் பறிப்பதில் பிரதான பங்கு வகிக்கின்றது. நம்மைக் கட்டுப்படுத்தும் ஒடுக்கு முறை நிறுவனங்கள், பழக்க வழக்கங்கள், தடைச் சக்திகள் அனைத்துப் பொருளாதார சுரண்டலில் வேரூன்றியுள்ளன. பொருளாதாரத் தேக்க நிலையும், பாதுகாப்பற்ற தன்மையும் தொடரும் வரை தொன்றுதொட்டு வரும் பழக்க வழக்கங்கள் ஒருவனுக்கு பாதுகாப்பைத் தருகிறது. தங்களைப் பாதிக்கும் செயல்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள்.
பெண்கள் விடுதலை என்பது தனித்து வெற்றி பெற முடியாதது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் சுரண்டும் வர்க்கம் அல்லது ஜாதி அமைப்பிலிருந்து விடுபடவேண்டி, போராடும் ஒரு போராட்டத்தின் பகுதியாக பெண்கள் விடுதலைப் போராட்டம் அமைதல் வேண்டும். எப்படியும் இப்படி சொல்வது பெண்கள் பிரச்சினை பற்றி விவாதிப்பது என்கிற விசயத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கல்ல. ஏனென்றால் சுரண்டல் சமூகத்தில் பெண்களே மிகவும் பாதிக்கபடுவர்களாகவும் தனிப்பட்ட சுமைகளைச் சுமப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு
நம்முடைய முதலாளித்துவ பொருளியல் அமைப்புப் பெண்களின் பங்கினைக் குறைத்து மதிப்பிடுகிறது. தொழிற் பகுதிகளில் மந்தமான தன்மையும் விவசாயத்துறையில் முதலாளிகளின் ஊடுருவலும் பழங்குடியினர். ஏழை விவசாயிகள் மற்றும் சிறு தொழில் புரிபவர்கள் ஆகியோரின் நிலையைப் பெரிதும் நாசப்படுத்தியுள்ளது. முதலாளித்துவ சமூகத்தில் பெண்களே மிகவும் அதிக அளவில் வறுமையில் வாடுகிறார்கள். தாங்கள் வாழ்வதற்காக அவர்கள் ஒன்று கூட்டம் நிறைந்த நகரங்களுக்குச் சென்று வீட்டுவேலை, பிச்சை எடுத்தல், விபச்சாரம் போன்ற வேலைகளில் ஈடுபடவேண்டும் அல்லது கிராமங்களிலே தேவைக்கு மிகவும் குறைந்த சம்பளத்துக்கு விவசாயக் கூலிகளாக வேலை செய்ய வேண்டும்; பின்னர் அங்கே இங்கே அலைந்து வேலைப் பார்க்கும் போது காண்ட்ராக்டர்களாலும், போலீஸாராலும், நிலச் சுவான்தார்களாலும் கூட கற்பழிக்கப்படவும் சுரண்டபடவும் ஆளாகின்றனர்.
பெண்களும் வேலையும்
முதலாளித்துவத் தொழில் மயத்தினால் குடிசைத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பரம்பரையாக அத்தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வேலையிழக்க நேரிட்டுள்ளது. தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் வகையில் புதிய எந்திரங்களை புகுத்தும் போது மேலும் பெண்கள் வெளியேற்றப்படுகிறார்கள். காரணம் பெண்கள் திறமையற்றவர்களாயிருப்பது, உதாரணமாக விவசாயம், மீன் வளர்த்தல், நெசவு ஆகியவைகளைக் கூறலாம்.
அமைப்பு ரீதியில் ஒருங்கிணைந்த பகுதியினர்
முதலாளித்துவ உலகத்தின் அனுபவம் "சமமான வேலைக்கு சமமான கூலி" என்கிற சட்டம் நடைமுறைக் காட்டிலும் அலங்காரத்தில் தான் உள்ளது என்பதே. அதே போல் ஒரு பொருளாதார நெருக்கடியின் போது பெண் தொழிலாளர்களே வேலையிழந்து முதல் பலி ஆகிறார்கள். இது ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் வேலையற்று இருக்கிறார்கள் என்கிற உண்மை நிலையிலும் கூட நடக்கிறது. வேலைக் கொடுக்கப்படுவதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் தற்போது உள்ள சில பாதுகாப்புச் சட்டங்களால் பெண்களுக்கு முன்பு போல் குறைந்த கூலி கொடுக்க முடியாது. ஆனால் இந்த விசயம் பெண்கள் குழந்தைகளைக் கவனித்தும், வீட்டு வேலைகளைச் செய்வதும் ஆரோக்கியமான குடும்பம் மற்றும் சமூகம் அமையச் செய்வது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நல்லது என்று தத்துவார்த்த ரீதியாகத் திசை திருப்பப்படுகிறது.
பிரபலமான சில பிரச்சினைகள்
மனித உரிமைகளைப் பற்றியும் பெண்கள் பிரச்சினை பற்றியும் ஆன ஒரு ஆழ்ந்த புரிதல் ஏற்பட நான் இங்கே கூறும் பிரச்சினைகள் அவை மட்டும் தான் என்பதல்ல; அவையே பெரிய பிரச்சினைகளுமல்ல; பெண்கள் எந்த வழிகளில் நடத்தப்பட்டார்கள் என அறியவே இவற்றறைக் கூறுகிறேன்.
கற்பழிப்பு
அலிகார், பெல்ச்சி, பெய்லடில்லா, நாராயண்பூர், சிங்பும், அஸ்ஸாம், மிஜோராம் அல்லது சமீபத்தில் குவா சுரங்கத்தில் நடைபெற்றது மாதிரி வன்முறைக் கலவரம், ஜாதிச் சண்டைகள், வகுப்புக் கலவரங்கள் அல்லது போலீஸ் அடக்குமுறை ஆகியன பற்றி செய்தி வராத நாளே இல்லை. அப்படிப்பட்ட செய்திகளின் முதல் பக்கத்தில் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், பயிர்கள் நாசம் செய்யப்பட்டதாகவும் ஏராளமான பெண்கள் தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டதாகவும் செய்தி இருக்கும். பெண்கள் தங்களுக்கெதிராக அணி திரளாமல் தடுக்கும் பொருட்டே நிலப்பிரபுகளும், அவர்களின் குண்டர்படையும் கற்பழிப்பை மேற்கொள்ளுகின்றனர். கற்பழிப்பு, ஒரு பெண்ணை பலர் கற்பழிப்பது, பல பெண்ணை பல ஆண்கள் கூட்டமாகச் சென்று கற்பழிப்பது என்கிறவையெல்லாம் தங்களுக்கெதிராகத் திரளும், பெண்களுக்கெதிராகப் பயன்படுத்தப்படும் அரசியல் ஆயுதமாகியுள்ளது. இந்தக் கருவி போலீசாரால் மட்டும் அல்லாது சி.ஆர்.பி. ராணுவம், அரசியல்வாதிகள், நிலப்பிரபுக்கள், மற்றும் பெரிய தொழிலதிபர்களால் பழங்குடியினர், விவசாயிகள், தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதிவாசிகள் மற்றும் கிராமம் முழுவதிற்கும் எதிராகப் பயன்படுத்தப்படுகிறது

பெண்களும் சட்டமும்

பெண்களும் சட்டமும்

கிராமத்தில் வாழும் ஒரு பெண் கிராம வாழ்க்கை பிடிக்காமல் பட்டணத்திற்குச் சென்றால் சுகமாக வாழலாம் என்ற எண்ணத்தில் பட்டணத்திற்கு புகைவண்டியில் பயணம் செய்கிறாள். பயணம் செய்யும் பொழுது வழியில் யாரோ ஒருவர் அவள் கொண்டு வந்திருந்த பணம் அனைத்தையும் திருடி விட்டார். புகைவண்டி நிலைய காவலர் ஒருவர் பார்க்கின்றார். அந்த பெண்ணைத் தன்னுடன் கூட்டிச் செல்கின்றார். திருமணம் முடித்துக் கொள்வதாகக் கூறுகின்றார். ஆறுதல் வார்த்தைகள் பேசுகின்றார். அந்த பெண்ணும் அவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். குழந்தையும் பிறக்கிறது. அதன் பிறகு பிரச்சனைகள் துவங்குகின்றன. அவன் விட்டுச் செல்கின்றான், அவள் பட்டணத்தில் ஆதரவு கொடுக்க ஆளின்றி துன்புறுகின்றாள். இது ஒரு உண்மை நிகழ்ச்சி. இங்கே இந்த குழந்தை சட்டப் பூர்வமான குழந்தையா? அவர்களது உறவை சட்டப்படி திருமண உறவு என்று ஏற்றுக் கொள்ள இயலுமா? பதில் வேண்டுமா? பதில் வேண்டுமா?
ஏழைக்குடும்பத்தில் பிறந்தவள் இவள். இவள் பெயர் கனகா. இவளுக்கு திருமணம் செய்து வைக்கப் பணம் இல்லையே என்று மிகவும் வருத்தத்துடன் இவளது பெற்றோர் இருக்கின்றனர். அங்கே வருகின்றான் பாலு, வரதட்சனை ஏதும் இன்றி கனகாவை மணந்து கொள்வதாகக் கூறுகின்றான், தான் ஒரு அரசு அலுவலர் என்றும் தெரிவிக்கினற்‘ன். இதை கனகாவின் பெற்றோர் நம்புகின்றனர். எளிய முறையில் திருமணம் நடந்து முடிகின்றது. இருவரும் பாலுவின் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கே பாலு கனகாவை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்துகின்றான். கனகா மறுக்கிறாள், கொடுமைகள் ஆரம்பிக்கின்றன. ஒரு நாள் கனகா மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்படுகிறாள். இவ்வாறான பல வகைப்பட்ட பிரச்சனைகளுக்கு சட்டம் என்ன தீர்வு கூறுகின்றது.
சட்டங்கள் எவ்வாறு தோன்றின?
ஒரு மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம்.
ஏறத்தாழ 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதர்கள் குழுக்களாக வாழத் துவங்கினார். பல இலட்சம் ஆண்டுகளாக மந்தை மந்தையாக வாழ்ந்ததில் இருந்து மாறுபட்டு குழு வாழ்க்கை துவங்கியது. ஒரு வழி வந்த உறவினர்கள் ஒரு குழுவாக வாழ்ந்தனர். ஒரே இடத்தில் வாழ்ந்தனர். ஆண்கள் வெளியே வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் சென்றனர். பெண்கள் உணவு வகைகள் தேடிக்கொண்டு வந்தனர். குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்தனர். இவ்வாறு பெண்கள் சிறிது சிறிதாக வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். இவ்வாறு படிப்படியாக துவங்கப்பட்ட பெண் அடிமைத்தனம் நிலைக்க வேண்டாமா? என்ன செய்யலாம்? இங்கே தான் சட்டம் உதவிக்கு வருகின்றது. இந்தப் பெண் அடிமைக் கலாச்சாரத்தைத் தக்க வைக்க ஆண்களால் இயற்றப்பட்ட மதக் கோட்பாடுகளும் சட்டங்களும் பெரிதும் உதவின. "பகை நாட்டு பரி, கரி, தேர், படைக்கலம், ஆடை, குடை, தானியம், பசு, பெண் யாவும் வென்ற நாட்டவனுக்கு உரியன உடையன" என்று மனுநீதி கூறுகின்றது.
ஒரு ஆண்மகனுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டாள் என்று கிறிஸ்துவ மதம் வலியுறுத்துகிறது. இஸ்லாம் சமயம் வெறும் முகமூடித் துணிக்குள் பெண்களை சிறை செய்து வைத்திருக்கின்றது. சட்டமும், கலாச்சாரமும் நெருங்கிய தொடர்புடையன. ஒன்றோடு ஒன்று. பின்னிப் பிணைந்துள்ளன. எனவே இப்படிப்பட்ட ஒரு பெண்ணடிமைக் கலாச்சாரம்
தலைவிரித்தாடும் ஒரு சமுதாயத்தின் சட்டங்களும் பெண்களுக்குப் பெரிதும் எதிராகவே அமைகின்றன.பெண் சிசுக் கொலை :
"பெண் குழந்தைக் கொலை" என்பது பழங்காலந்தொட்டே, சமுதாயத்தின் அங்கீகாரத்தைப் பெற்று தலைவிரித்தாடும் ஒரு கொடுமையாகும். இன்று வரை அது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது என்பது ஒரு மறுக்க முடியாத யதார்த்தம். வெள்ளையர் ஆதிக்கத்தின் கீழ் நமது நாடு இருந்த காலத்தில் முதன் முதலாக "பெண் குழந்தைக் கொலை தடைச் சட்டம்"
1870-ம் ஆண்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. அது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு 119 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால்....? பெரிதாக என்ன மாற்றத்தைக் கண்டுவிட்டோம்? இன்றும் கிராமப்புறங்களில் இந்தக் கொடுமை பெரிதும் தலை விரித்தாடவில்லையா? இல்லை என்று நாம் நினைத்தால் அது அறிவீனம். நமது செய்தித்தாளைப் புரட்டினால் இன்றும் இச்செய்திகளைக் காணலாம். பெண் குழந்தைக்களுக்கான எமன்கள பல வடிவம் கொண்டு உல்லாச உலா வருகின்றன என்பதே உண்மை. என்னென்ன வடிவங்கள்....எருக்கம்பால், நெல்மணி (உயிரைக் காக்கும் உணவா? அல்லது பறிக்கும் எமனா? ) காப்பித்தூள், உப்பு .....இன்னும் எத்தனையோ? இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை தண்டிப்பதாக இருந்தால் தண்டனை மிகக் குறைவானது தான். இது கொலையல்லவா?.... இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை என்று கருதி ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ விதிக்காமல் இந்த அலட்சியம் ஏன்? சாவதும் அழிவதும் பெண் இனம் தானே?...கருவறை எமன்கள்:
இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பெண் குழந்தைகளைக் கருவிலேயே சமாதி கட்டிவிட பல புதிய கண்டுபிடிப்புகளும் தோன்றிவிட்டன. கருவிலேயே ஒரு குழந்தையின் ஊனங்கள் அறியக் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த அறிவியல் பரிசோதனை இன்று பெண் குழந்தைகளின் கருவிற்கே எமனாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகள் மட்டிலும் 78,000 பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதி ஆகியிருக்கின்றன. இது பம்பாய், டெல்லி, சென்னை போன்ற பெரிய நகரங்களில் பெரும்பான்மையாக நிகழ்கின்றன. நம் நாட்டிலுள்ள மற்ற நகரங்களிலும், கிராமங்களிலும் அதிவேகமாக பரவி வருகின்ற இக்கொடுமையைத் தடுக்க என்ன செய்யப் போகின்றோம்?
1971-ம் ஆண்டு நமது அரசு கருக்கலைப்பை சட்டப் பூர்வம் ஆக்கும் வரையிலும் கருக்கலைப்பு என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஒன்றாகவே இருந்தது.
1971-ம் ஆண்டுச் சட்டம் கீழ்க்கண்ட சில காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யலாம் என்று கூறுகின்றது.
1 கர்ப்பிணிப் பெண்ணின உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றாலோ,
2 பிறக்கும் குழந்தைக்கு உடல், மூளை போன்றவை பாதிக்கப்படும் என்றாலோ,
3 மருத்துவர் சரியென்று எண்ணுகின்ற மற்ற காரணங்களுக்காகவோ, கருச் சிதைவு செய்யலாம்.
இன்று பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்க மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த சட்டத்தையே பயன்படுத்துகின்றனர். கருவுற்றிருக்கும் பெண் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தியும், அவள் கருவுற்றிருப்பதால் கருத்தடை செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் காரணம் காட்டுகின்றனர். இவ்வாறு இன்று பல்லாயிரக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதியாகிக் கொண்டு இருக்கின்றன. இதனை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து பெண் விடுதலைக் குழுக்கள் குரலெழுப்பின. இதனைக் கண்ட நமது மத்திய அரசு இக்கொடுமையைத் தடுப்பதற்காக சட்டங்களை அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநில பெண் விடுதலைக் குழுக்கள் தொடர்ந்து போராடியதால் மகாராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில் ஒரு சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆந்திர", அஸ்ஸாம், பீஹார், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், நாகலாந்து, மேற்கு வங்களாம், ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்கள் இதைப் பற்றி கவலைக் கொண்டதாகவே தெரியவில்லை. கர்நாடகம், ஓரிசா, உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதைக் கருத்தில் கொண்டு சிந்தித்துக் கொண்டிருக்கின்றன என்று தெரிய வருகின்றது. முடிவெடுப்பது எப்போது? இந்தியா முழுவதும் ஒரே சட்டம் வருவது எப்போது?
மகாராஷ்டிரா மாநில குழந்தைப் பிறப்பின் முன் செய்யும் பரிசோதனைகளை முறைப்படுத்தும் சட்டம் - 1988.
1988-ம் ஆண்டு மே மாதம் 10-ம் நாள் அமலுக்கு கொண்டு வரப்பட்டது இந்த சட்டம்.
1 ஏற்கனவே இருக்கின்ற பரிசோதனை முறைகளை முறைப்படுத்துவதோடு நின்று விடுகின்றது.
2 குழந்தைப் பிறப்பதற்கு முன் பரிசோதனை செய்ய சில வரையறைகளைக் கொடுக்கின்றது. எந்த சூழ்நிலையில் ஒரு பெண் இந்தப் பரிசோதனையை மேற் கொள்ளலாம்?
அ.பெண் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால்
ஆ.இதற்கு முன்பு 2 அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால்
இ.ஆபத்து விளைவிக்ககூடிய மருந்து உட்கொண்டிருந்தால் அல்லது அபாயகரமான கதிர்கள் ஊடுருவக் கூடிய தொழிற்சாலைகளில் வேலை செய்தால்.
ஈ.பாராம்பரிய நோய்களினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினராக இருந்தால் இந்தப் பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்தலாம்.
3 ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட தனியார் பரிசோதனை கூடங்களை ஒழித்துக் கட்டாமல் அவற்றை முறைப்படுத்துகின்றது. அவை அனைத்தையும் பதிவு செய்து கொள்ள வழிவகுத்துக் கொடுக்கின்றது.
4 இதைக் கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்துகின்றது.
5 இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பெண்ணையும் (சமுதாய கட்டுப்பாடு அழுத்தம் இவற்றால் பரிசோதனையை செய்பவள்) மற்ற குற்றவாளிகளையும் கணவர், மாமியார், (பெண்ணைப் பரிசோதனையைச் செய்யக் கட்டாயப்படுத்துபவர்கள்), டாக்டர்கள், பரிசோதனைக் கூடத்தை நடத்துபவர்கள் போன்றவர்களையும் ஒரே மாதிரியாகப் பார்க்கின்றது; தண்டனைக் கொடுக்கின்றது. இதில் பெண் என்பவர் சமூக, குடும்ப, கலாச்சாரக் கட்டுப்பாடுகளினால் உருவான கட்டாயத்தின் பேரில் தன்னைப் பரிசோதனைக்கு உட்படுத்துபவள்; அவளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதென்பது எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய ஒன்றாகும்.
6 இந்த சட்டத்தின் கீழ் புரியும் குற்றம் பிணையில் விட முடியாத சமரசம் செய்ய முடியாத பிடி ஆணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாகும்.
இவ்வாறு ஆங்காங்கே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் விருப்பத்திற்கேற்ப பல ஓட்டைகளுடன் வெவ்வேறு சட்டங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே சட்டத்தைக் கொண்டு வருமாறு பெண்களும், சமூக நல விரும்பிகளும் இணைந்து குரலெப்பினால் நல்லது. இந்திய தண்டனைச் சட்டம் - 1860 பெண்கள் தொடர்பான பிரிவுகள் இந்த சட்டப்பிரிவுகள் அனைத்தையும் நோக்கினால் பெண், ஆண் என்பவரின் உடைமை, சொத்து என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன என்பது தெள்ள தெளிவாக விளங்கும்.
--------------------------------------------------------------------------------
ஆபாசப் புத்தகம், விளம்பரம்
பிரிவுகள் 292, 292 ஏ, 293, 294 என்ன சொல்கின்றன?
ஆபாசமான புத்தகம், விளக்கம், படம், ஒவியம், பொருள், விற்பது, உற்பத்தி செய்வது இவற்றை தடை செய்கின்றன. ஆபாச விளம்பரம் செய்வதை தடை செய்கிறது. ஆபாச செயல்கள், பாடல்கள், இவற்றை தடை செய்கிறது.
தண்டனை என்ன தெரியுமா?
பிரிவு 292 இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு 292ஏ குறைந்த அளவு தண்டனை ஆறு மாதச் சிறைக்காவல் அல்லது இரண்டு ஆண்டுக்கு மேற்படாமல் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு 293 ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்
பிரிவு 294 மூன்று மாதங்கள் வரை சிறைக்காவல் அபராதம் அல்லது இரண்டும்.
1925-ம் ஆண்டு நமது அரசு ஆபாச விளம்பரங்களை தடை செய்து விரிவாக ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்தது.
இன்று ஆபாச விளம்பரங்கள் இல்லையா? பாடல்கள் இல்லையா? செய்கைகள் இல்லையா? பெண்ணை அலங்காரச் சின்னமாகவும், போகப் பொருள்களாகவும் பார்த்தே பழகிவிட்ட இந்த கலாச்சார அமைப்பிலே சட்டங்கள் பெரிதாக என்ன செய்து விடும்
--------------------------------------------------------------------------------
பெண்ணை அவமதித்தல்
பிரிவு 354 :ஒரு பெண்ணுடைய கண்ணியத்திற்குப் பாதிப்பு விளைவிக்க வேண்டும் என்றக் கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும்.
தண்டனை: இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
--------------------------------------------------------------------------------
கட்டாயத் திருமணம்
பிரிவு 366: ஒரு பெண்ணைப் பலாத்காரமாக வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அப்படி அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாகத் திருமணம் செய்து வைக்கப்படும் என்று தெரிந்திருந்தும், கவர்ந்து செல்வது, அல்லது கடத்திச் செல்வது குற்றமாகும்.
தண்டனை: பத்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும்.
பிரிவு 366ஏ: பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணை, பிறருடன் கட்டாயப் புணர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய புணர்ச்சிக்கு அந்தப் பெண் உட்படுத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தும், அவளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும்படி எந்த வகையில் தூண்டினாலும் குற்றமாகும்.
தண்டனை: பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும்.
--------------------------------------------------------------------------------
விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல்
பிரிவு 373 : பதினெட்டு வயது பூர்த்தியடையாத ஒரு பெண்ணை, எந்த வயதிலாவது விபச்சாரத்துக்கு அல்லது முறைகேடான புணர்ச்சி அல்லது வேறு சட்ட விரோத அல்லது ஒழுக்கக்கேடான செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய நிலைக்கு பலியாகலாம் என்று தெரிந்திருந்தும், அந்த நபரை வாங்குவதும், வாடகைக்குப் பெறுவதும் அல்லது வேறு எந்த வகையிலாவது தன் வசம் கொண்டு வந்து வைத்திருப்பதும் குற்றமாகும்.
தண்டனை : பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும். இன்று இந்தியாவில் கணக்கெடுத்துப் பார்த்தால் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களில் 20% குழந்தைகள். இந்த சட்டங்கள் இருந்தும் இந்நிலைக்கு என்ன பதில் சொல்ல?
ஹசினா என்ற 9 வயது சிறுமி, பெங்களூர் நகரத்தின் ஒரு சுமாரான குடும்பத்தைச் சார்ந்தவள்: தந்தையைச் சமீபத்தில் இழந்து விட்டாள். அவளுடைய உறவினர் ஒருவர் அவளுக்கு வீட்டு வேலை ஒன்று வாங்கி தருவதாக வாக்களித்து பம்பாய்க்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே ஹசினாவை காமத்திபுரா (பம்பாயில் அதிகமாக விபச்சாரம் நடக்கின்ற இடம்) என்ற இடத்தில் விற்று விட்டார். இங்கே இந்த 9 வயது இளஞ்சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டாள்: பல இரவுகள் தொடர்ந்து இவ்வாறான கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாள். அவள் இந்தத் தொழிலை முற்றிலுமாக வெறுத்தாள். ஆனால் இதிலிருந்து தப்பித்துச் செல்வதற்குத் தான் வழி தெரியவில்லை. மெதுவாக அவள் போதைப் பொருட்களை எடுக்கும் பழக்கத்திற்கு உட்படுத்தப்பட்டாள். இன்று அவள் போதை மருந்தை வாங்குவதற்காகப் பணம் ஈட்ட எதையும் செய்யத் தயார் என்ற நிலைக்கு ஆளாகி விட்டாள். இவ்வாறு இன்னும் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகளோ?
--------------------------------------------------------------------------------
பலாத்காரம் (வன்முறைப்புணர்ச்சி)
பலாத்காரம் என்றால் என்ன?
பிரிவு 375: ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கீழ்க்கண்ட 6 சூழ்நிலைகளில் உடல் புணர்ச்சிக் கொண்டால் பலாத்காரம் ஆகும்.
1 அவளுடைய விருப்பத்திற்கு மாறாக
2 அவளுடைய சம்மதமின்றி
3 அவருக்கு அல்லது அவளுக்க நெருக்கமான ஒருவருக்கு மரணம் அல்லது காயம் விளைவிக்கப்படம் என்ற அச்சுறுத்தலின் பேரில் அவளுடைய சம்மதத்தைப் பெற்று.
4 அவளுடைய சம்மதத்துடன் அந்த ஆள் தான் முழுமையாக அவளுடைய கணவன் இல்லையென்று தெரிந்த போதிலும் அந்தப் பெண்தான் அவளுடைய சட்டப்பூர்வமான மனைவி என்று நம்பியிருக்கும் போது.
5 அவளுடைய சம்மதத்துடன் - அந்த சம்மதம் புத்தி சுவாதீனம் இல்லாமல் குடிபோதையில் இருக்கும் போது பெறப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகளில் அவளுடைய சம்மதத்தின் தன்மையையோ, விளைவுகளையோ அவளுக்கு புரிந்துக் கொள்ள முடியாமல் இருக்கும் பொழுது.
6 இவளுடைய சம்மதம் இருந்தும் அவள் 16 வயதிற்கு கீழ் இருக்கக்கூடிய ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில்.
மதுரா வழக்கு மதுரா என்ற 15 வயது பெண் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு காவல் நிலையத்தில் இரு காவலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டாள். இந்தக் குற்றவாளிக் காவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் கீழ்கண்ட காரணங்களுக்காக விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த பெண் எதிர்த்துப் போராடியதற்கான எந்த ஒரு அடையாளமும் அவளது உடலில் இல்லை .
அவள் உதவிக்கு யாரையும் கூச்சலிட்டு அழைக்கவில்லை .
ஏற்கனவே இவள் காதலுடன் உடல் புணர்ச்சிக் கொண்டிருக்கிறாள்
இதனைக் கேள்விக் கேட்டு எதிர்த்து பல பெண் விடுதலை இயக்கங்கள் குரல் எழுப்பின. போராடின இதன் விளைவாக 1983-ல் இந்தப் பிரிவில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த பிரிவு 376 சொல்கின்றது.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள நபர்களல்லாத பிறர் செய்யும் பலாக்காரத்திற்கு குறைந்த பட்சம் 7 வருடம் முதல் ஆயுட்காலம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
1. போலீஸ் அதிகாரி தன் எல்லைக்குள் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
2. சிறை, மருத்துவமனையில் உள்ள பெண்ணை அங்குள்ள ஆண் ஊழியர்கள் பலாத்காரம் செய்தல்.
3 பெண்கள் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் பணி செய்யும் அரசு அதிகாரி தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கு உள்ள பெண்ணை பலாத்காரம் செய்தல்.
4 கற்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
5 12 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணைப் பலாத்காரம் செய்தல்.
6 குழுவாக சேர்ந்து பலாத்காரம் செய்தல்.
இக்குற்றங்களுக்கு குறைந்த பட்சம் 10 வருடம் முதல் ஆயுட்காலம் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
இதை நாம் ஆழமாக சிந்தித்தால், விவாதித்தால் இது எந்த விதத்திலும் ஒரு பெண்ணின் உடலுக்கு எதிரான வன்முறை என்று கருதுவதே இல்லை என்பது புரியும். சமுதாயம் இதை ஆண்களின் கௌரவத்தைப் பாதிக்கும் ஒரு குற்றமாகவே பார்க்கின்றது.
--------------------------------------------------------------------------------
பிறர் மனை சேர்க்கை
பிரிவு 497 பிறருடைய மனைவியுடன் அவளுடைய கணவன் அனுமதி இல்லாது அவளுடன் உடல் புணர்ச்சி செய்வது"பிறர் மனை சேர்க்கை" என்ற குற்றமாகும்.
முக்கிய அம்சங்கள்
1 கணவனுடைய அனுமதி இருக்கக் கூடாது.
2 இதன் கீழ் குற்றம் செய்யும் ஆண் மகன் மட்டும் தான் தண்டனைக்கு உள்ளாவான். பெண்ணை தண்டிக்க இயலாது.
3 பெண்ணின் கணவன் தான் புகார் செய்ய வேண்டும். இதில் நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் - கணவனுடைய அனுமதியோடு ஒத்துழைப்போடு மனைவி பிற ஆணுடன் உடல் புணர்ச்சி கொண்டால் அதை என்ன செய்வது? இவ்வாறு தானே பல ஆண்கள் திருமணம் என்ற பெயரில் "பெண்ணை" மணந்து கொண்டு விபச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். மனைவிக்கு வயதானவுடன், இளமை போனவுடன் அழகு குறைந்தவுடன், இனிமேல் தொழிலுக்கு உதவாதவள் என்று கருதும் பொழுது என் அனுமதியின்றி இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டிருக்கிறாள் என்று கூறி அடித்துத் துரத்துகின்றனர். இதற்கெல்லாம் வழி வகுக்கின்றதே இச்சட்டங்கள்.பல பேரரசுகள், சாம்ராஜ்யங்கள் பெண்ணால் அழிந்தன என்று வரலாறு கூறுகின்றது. அவை பெண்ணால் அழிந்தனவா? அல்லது பெண்கள் மீது ஆண்கள் கொண்ட உடைமை உணர்வால் அழிந்தனவா? அதே உடைமை உணர்வு நமது சட்டங்களிலும் வெளிப்படையாகத் தெரிகின்றது.இந்த சட்டப் பிரிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண்ணுரிமை இயக்கம் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியைத் தழுவினாலும் மக்களிடையே பலவிதமான விவாதங்களை எழுப்பியுள்ளது.
தண்டனை : ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்

எது பெண் உரிமை....

எது பெண் உரிமை....

வைஜெயந்திமாலா - வேல்ராஜ்
 
"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" பெண்ணின் பிறப்பை கூறினார் கவிமணி.
"எங்கெங்கு காணிணும் சக்தியடா" போற்றினான் பாரதி.
ஆவதும் பெண்ணாலே!
அழிவதும் பெண்ணாலே!
வாழ்வதும் பெண்ணாலே!
தாழ்வதும் பெண்ணாலே!
கூறிச் சென்றனர் மூத்தோர்,
"வாழ்க்கை துணை நலம்" என்று அதிகாரத்தை வள்ளுவனும் ஏனையோறும் எதற்கு சொல்ல வேண்டும்.
வலிமை வாய்ந்தவர்களையே துணையாகக் கொள்வோம். பெண் வலிமையானவள் தான்.
என்னுடைய வெற்றிக்குப் பின் என் தந்தை, கணவர், சகோதரன் இருக்கிறான் என்று எந்த பெண்ணாவது கூறியதுண்டா? சொல்ல மாட்டார்கள். ஏன்? அவர்களுக்கு வாழ்வில் சுதந்திரம் வேண்டும் என்பார்கள்? ஏ பெண்ணே! உன்னைக் காட்டிலும் உன் தந்தையிடம் அதிகம் திட்டுகள் வாங்குவது உன் கூடப்பிறந்த ஆண்பிள்ளை தான் என்பதை மறந்து விட்டாயா? நீங்கள் கேட்கும் சுதந்திரம் எது?
நாகரீக உடை அணிவதும், நகங்களுக்கும், உதடுகளுக்கும், தலை முடிக்கும் சாயப்பூச்சு பூசுவதும், மாலையில் மாதர் சங்கங்களுக்கும் செல்வது தான் சுதந்திரமா....
பெண்களே! ஒரு ஆணினுடைய மாறுபட்ட நடவடிக்கை பெண்களை மட்டும் பாதிக்கின்றது.
பெண்களுடைய மாறுபட்ட நடவடிக்கைகள் எதிர்கால சந்ததியையே பாதிக்கிறது.
பெண் உரிமை என்றால் என்ன என்பதனை தெரிந்து கொள்ளுங்கள். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" மாதர்கள் தங்களைத் தாங்கள் இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வேண்டும்.
முதலில் பெண்ணுக்கு பெண்ணிடமிருந்து விடுதலை வேண்டும்.
வரதட்சணை என்ற பெயரால் வாட்டும் மாமியார்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.
ஆண்கள் ஒரு கருவி தான்...
அவர்களை ஆட்டுவிக்கும் விசைகளை முதலில் சாடுங்கள்.
"பெண்களை அழுகிறார்கள்
ஆண்கள் அழ வைக்கிறார்கள்
இறுதியில் பெண்கள் காரியத்தில் வெற்றி பெறுகிறார்கள்!
என்று டாக்டர் மு.வ. கூறியுள்ளார்.
எனவே பெண்களே உங்கள் கண்ணீரைக்
காட்டி ஆண்களை பலவீனமாக்காதீர்...
பிறரை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்!
மரியாதை தானாக மலரும்

சின்ன வயசில் பெரிய மனுஷி

சின்ன வயசில் பெரிய மனுஷி

சின்னஞ்சிறு மொட்டாக இருக்கிற ஒரு பூ மலர்வதற்கு என்று இயற்கை ஒரு காலத்தை நிர்ணயித்திருக்கிறது. அது போன்றே... ஒரு பெண்ணும் பெரிய மனுஷியாக ஒரு குறிப்பிட்ட காலத்தை இயற்கை நிர்ணயித்திருக்கிறது. அதனால் தான் பொருத்தமாக அந்த மலரும் பருவத்தை பருவ காலம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால் இயற்கைக்குமாறாக சில பெண் குழந்தைகள் மிக மிக இளம் வயதிலேயே பெரிய மனுஷியாகி விடுவதும் உண்டு. இருபதாண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் பருவம் எய்துவது 14 வயதிற்கு மேல்தான் நிகழ்ந்தது. ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் பெண்களின் வளர்ச்சி அபரிமிதமாக போய்விட்டது. இதன் காரணமாக பல பெண்கள் 11, 12 வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். இதற்கு இன்றைய காலக்கட்ட நவ நாகரிக உணவுப்பழக்கம், சமூகத்தில் பெண்களுக்கான சுதந்திரம், சத்துக்கள் இல்லாத ரசாயண மயமாகிவிட்ட உணவும், நொறுக்குத் தீனிகளும் தான் காரணம் என்றாலும் சில குறிப்பிட்ட மருத்துவ காரணமும் இதனைத் தூண்டுகிறது.
மனித மூளையானது - விசித்திரமானது. ஹார்மோன்களின் கட்டுப்பாட்டில் வளர்ச்சி மாற்றத்தை, பாலுறுப்புகளின் வளர்ச்சி நிலையை மூளை அடக்கியே வைத்திருக்கும். பத்து வயதிற்கு மேல் ஹார்மோன்களின் திருவிளையாடலால் பெண் குழந்தைகள் பருவத்தை எய்துவார்கள். ஆனால் சில பெண் குழந்தைகளுக்கு என்ன காரணம் என்று கண்டறிய முடியாமலே ஹார்மோன்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி பத்து வயதிற்குள் பூப்பெய்தி விட நேரிடலாம். பிட்யூட்டரி சுரப்பி கோளாறினாலும், தைராய்டு குறைபாடுகளினாலும்கூட இப்படி நிகழலாம்.
இப்படி மிக இளம் வயதில் பூப்பெய்தி விடுவதற்கு மக்யூன் ஆல்பிரைட் சின்ட்ரோம் என்கின்ற ஒரு வகை பாதிப்புத்தான் காரணம் என்று அண்மைக் கால மருத்துவ அறிவியல் கண்டுபிடித்துள்ளது. இது நோயா? இல்லை முன் கூட்டியே ஹார்மோன்கள் தங்கள் செயல்களை ஆரம்பித்துவிடுவதுதான் காரணமா? என தீவிரமாக மருத்துவ உலகம் ஆராய்ந்து வருகின்றது. மரபணுக்களின் பாதிப்பினால் கூட இப்படி நிகழலாம் என்கின்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
சரி... கொஞ்சம் காலம் தள்ளி பெரிய மனுஷியாக ஆக வேண்டியவள் முன்கூட்டியே பருவம் எய்தி விட்டாள்... அவ்வளவுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்தானே, இதற்கு போய் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கலாம்.
இப்படி இயற்கைக்கு மாறாக மிக இளம் வயதிலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு எலும்பில் உள்ள கால்சியத்தில் குறைபாடு ஏற்படலாம். இதனால் இவர்கள் பல இயற்கை உபத்திரவங்களுக்கு உள்ளாக நேரிடும். இத்தகைய பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, அதிக ரத்தப்போக்கு, பிரசவ சமயத்தில் குறைபாடுகள், அரிதாக சில பெண்களுக்கு பாலியல் உறவில் கூட சிக்கல்கள் ஏற்படலாம். இவ்வாறு இளம் வயதில் பூப்பெய்துவிடுகிற பெண்கள் ஹார்மோன் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது. சுண்ணாம்பு சத்து நிறைந்த பால், முட்டை, மற்றும் காய்கறிகள், கனிகள், தானியங்கள் போன்ற வற்றை இவர்கள் பருவ வயதில் நிறைய உட்கொள்ள வேண்டும். தாய் மிக இளம் வயதில் பூப்பெய்தி இருந்தால் அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பருவ வயதிற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

நாட்டு நடப்பை தெரிஞ்சுக்கங்க

நாட்டு நடப்பை தெரிஞ்சுக்கங்க!

எந்த நாட்டில் பெண்களிடையே மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுகிறதோ அந்த நாடு விரைவிலேயே முன்னேறும். அதற்கு பெண்கள் அனைவரும் கல்வி கற்பதுடன் நாட்டு நடப்புகளை சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நமது நாட்டில் பெண்கள் கல்வி கற்பது அதிகரித்துள்ளது சந்தோஷப்பட வேண்டிய ஒன்று. ஆனால் நமது நாட்டு பெண்மணிகள் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டாதது கவலையளிப்பதாக உள்ளது. டிவியில் காலை முதல் இரவு வரை ஒரு தொடர் கூட விடாமல் பார்க்கும் பெண்மணிகள் தப்பித் தவறி கூட செய்திகளை பார்ப்பதேயில்லை. பத்து சதவீத பெண்கள் செய்திகளைப் பார்த்தாலே பெரிய விஷயம். தொடர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும் பெண்கள் தொடர் முடிந்து செய்திகள் வந்தால் படாரென எழுந்து வீட்டு வேலைகளை கவனிக்க சென்றுவிடுகின்றனர். வீட்டில் வாங்கப்படும் தினசரிகளை எத்தனைப் பெண்கள் ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்றால் இல்லை என்றே தெரியவரும். அப்படியே ஓரிருவர் படித்தால் மங்கையர் சம்பந்தப்பட்ட நாவல்களாகத்தான் இருக்கும். நாட்டு நடப்புகளை பெண்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் சமுதாய மாற்றத்திற்கு ஏற்ப தங்கள் வாரிசுகளை தயார்படுத்துவதற்கும், தேர்தல் சமயங்களில் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே பெண்மணிகள் தொடர்களை பார்ப்பது போலவே முடிந்தால் தொடர்கள் பார்ப்பதை குறைத்துக் கொண்டு செய்திகளைப் பாருங்கள், தினசரிகளை படியுங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது!

மகளிருக்கான குறிப்புகள்

மகளிருக்கான குறிப்புகள்

Tips for women - Child Care Tips and Informations in Tamil
*பட்டுப் புடவையில் துர்நாற்றம் வருகிறதா?

லேசான வெள்ளைத் துணியில் மிளகை வைத்து சிறு சிறு பொட்டலமாகக் கட்டி பட்டுப் புடவைகளுக்கு இடையே வையுங்கள். வாடை அறவே வராது.

*வாங்கிய தக்காளி அழுகிப் போகிறதே என்ற கவலையா?

வாங்கியதும் உப்பு நீரில் போட்டு வைத்தால் கெடாமலும் நிறம் மாறாமலும் இருக்கும்.

*சலவைக்குப் பின் துணி வெண்மையாக இருக்க வேண்டுமா?

இளம் சூடான நீரில் சோடா உப்பு பொடியைப் போட்டுத் துணிகளை ஊறவைத்து துவைக்கவும். துணிகள் "பளிச்" என்று இருக்கும்.

*பாத்திரங்கள் பளபளக்க வேண்டுமா?

தவிடு, அரப்பு, உபயோகித்த காபி பொடி ஆகியவற்றைக் கலந்து பாத்திரங்களை தேயுங்கள். முகம் பார்க்கும் அளவுக்கு அவை பளிச்சிடும்.

*பாட்டில் மூடி இறுகி திறக்கவில்லையா?

வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு திறந்து பாருங்கள் உடனே திறந்துவிடும்.

*சாம்பார் வெங்காயத்தை உரிக்கச் சிரமமாக உள்ளதா?

உரிப்பதற்கு முன் 10 நிமிடத்துக்குத் தண்ணீரில் ஊற வையுங்கள். தோல் சுலபமாக வரும்.

*அரிசி மாவு, ரவை போன்றவை சீக்கிரம் கெட்டுப் போகிறதா?

அவற்றைச் சலித்து வறுத்து வையுங்கள். நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

*சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டதா?

வெந்நீரைச் சேர்க்காதீர்கள். உருளைக்கிழங்கு மெலிதாக நறுக்கிப் போட்டால் உவர்ப்புத் தன்மை குறைந்து விடும்.

*சட்டைக் காலரில் உள்ள அழுக்குப் போகவில்லையா?

சிறிது ஷாம்பு எடுத்து காலர் அழுக்கில் தேய்த்து ஊறவைத்து துவைத்துப் பாருங்கள். அழுக்கு அம்பேல்.

*தயிர் புளிக்க வேண்டுமா?

அதில் தேங்காய் பத்தைகளைப் போட்டுப் பாருங்கள். சீக்கிரம் புளித்துவிடும்.

*சலவை சோப்புகளினால் ரவிக்கை நிறம் மங்குகிறதா?

குளிக்கும் சோப்பினால் துவைத்து நிழலில் உலர்த்துங்கள் நிறம் மாறாது.

*மழைச் சேறு பட்டு உடை கறையாகி விட்டதா?

உருளைக் கிழங்கை அரிந்து எடுத்து அதன் மீது தேய்த்தால் கறை காணாமல் போகும்.

நீங்களும் பின்பற்றலாமே

நீங்களும் பின்பற்றலாமே.....

You too followed... - Child Care Tips and Informations in Tamil
ஒவ்வொரு, பெண்களின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவது திருமணம்!

அன்றைய நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள்.

திருமண நேரத்தில் எல்லோரின் பார்வையும் மணப்பெண்ணையே மையமாகக் கொண்டிருப்பதால் பெண்மைக்கே உரிய நாணம் அவளைத் தலை குனிய வைத்து விடும். இது போன்ற சூழலில் மணப்பெண் தனது தன்னம்பிக்கையை ஒருபோதும் தளரவிட்டு விடக்கூடாது.

சில பெண்கள் பயத்தில் மணமேடையிலேயே கண்ணீர் உதிர்த்தபடி இருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான நாளில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தேவை. அப்போதுதான் அன்று எடுக்கப்படும் போட்டோ, வீடியோ காமிராவில் மிக அழகாக காட்சி அளிப்பீர்கள்.

அதுபோல திருமணத்தின் போது மணப்பெண்கள் புடவை கட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

பட்டுப்புடவையானது அதிகம் தூக்கலாகவோ, தொங்கலாகவோ இருக்கக்கூடாது.

மணமேடையை நோக்கி நடக்கும் போது மிகவும் மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும். குறிப்பாக படிக்கட்டில் ஏறும்போது கவனமாக இருப்பது நல்லது.

வழக்கம் போல் அங்கும் இங்கும் பார்வையைச் சிதற விடாமல் கீழே கவனமாக பார்த்து அடியெடுத்து வைக்க வேண்டும்.

உங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் யாராவது குரல் கொடுத்தாலோ, சிரித்தாலோ அதை கண்டு கொள்ளாதீர்கள்.

உங்கள் பட்டுப் புடவையின் டிசைன் மற்றும் நகைகளின் தேர்வு ஒன்றுக்கொன்று தொந்தரவு செய்யாத வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக நகைகளில், மாலையில் சுற்றப்பட்டிருக்கும் நூல் சிக்கிக் கொள்வதுண்டு.

நீங்கள் மண்டப வாசலில் இருந்து உள்ளே நுழையும் சமயத்தில் பாதையில் உறவினர்கள். பூக்கள் தூவாமல் இருக்க வீட்டாரிடம் சொல்லி வையுங்கள்.

மனமகளுக்கு பீடா, புகையிலை, பபுள்கம், அடிக்கடி சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிடுவது... போன்ற பழக்கம் இருந்தால் மணநாளின் போது அதை தவிர்ப்பது நல்லது.

சில மணப்பெண்கள் அளவுக்கு அதிகமாக மேக்-அப் போட்டு வலம் வருகிறார்கள். இது நல்லதல்ல. ஒரிஜினல் முகம் தெரியாத அளவுக்கு ஒரு போதும் மேக்-அப் போடாதீர்கள்.

போட்டோ கிராபர் சொல்லாத வரை கண்களை அகல விரிக்க வேண்டாம். அதுபோல வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போது கண்களை அங்கும் இங்கும் அலைய விடக்கூடாது. மணப்பெண் நடந்து வரும் போது அருகில் உள்ள தோழியுடன் அனாவசியமாகப் பேசவேண்டாம். பற்கள் தெரிய சிரிப்பதோ, கோபப்படுவதோ தவறு.

மணமேடையில் அமர்ந்திருக்கும் போது யாருடைய பேச்சாவது உங்களுக்கு பிடிக்காமல் போனால், உங்கள் அதிருப்தி அல்லது கோபத்தை உடனே காட்டக்கூடாது.

அப்போது நீங்கள் கோபப்பட்டால் மணமகன் வீட்டார் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்.

அதனால் அந்த ஒரு நாள் மட்டும் கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ளுங்கள். வாழ் நாள் முழுவதும் நினைவில் வைத்து பூஜிக்க வேண்டிய புனித நாள் அல்லவா?

பெண்களின் ரசனையே தனிதான்!

பெண்களின் ரசனையே தனிதான்!

Women's Passion - Child Care Tips and Informations in Tamil
ஒரு அழகான வீடு. வீட்டைச் சுற்றியும் தோட்டம். பூத்துக்குலுங்கும் செடிகள். பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் வீட்டுச் சுவருக்கு அடித்த பெயிண்ட், அப்படியே வீட்டினுள் சென்றால், பழைய மாடல் ஷோபா, பீரோ, கட்டில், பர்னிச்சர்கள்... வீடென்றால் புறம்மட்டும் அழகாக இருந்தால் போதாது, அகமும் அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு வீடு முழுமையாகிறது.
இத்தாலி, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, சீனா, கொரியா, பாகிஸ்தான் போன்ற நாட்டு நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வீட்டு உபயோகப்பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், பர்னிச்சர் வகைகள், கம்பளங்கள், மீன் தொட்டிகள், அழகுசாதன விளக்குகள், கைவினைப் பொருள்கள், குளியல் அறை சாதனங்கள், செராமிக் டைல்ஸ், வீட்டுக் கதவுகள், மின்விசிறிகள், கிரானைட் மார்பிள்கள், தோட்ட அழகு சாதனங்கள், கொசு வலைகள், பைப்கள், ப்ளைவுட், லாக்கர்கள், சூரிய சக்தி அடுப்புகள், சுவர் ஓவியங்கள், ஜன்னல் பிரேம்கள் போன்ற ஏராளமான வீட்டை அழகூட்டும் சாதனங்கள் இங்கு கிடைக்கின்றன. அவற்றை வாங்கி நாம் பயன்படுத்தலாம்.
கார்டன் லைட் காண்போர் கண்களை பிரகாசிக்கச் செய்யும்படி உள்ளது. இது ஒன்பது பிரிவுகளைக் கொண்ட கார்டன் விளக்கு வீட்டுத் தோட்டத்தில் இருந்தால் தோட்டத்தில் பூக்களே தேவையில்லை அவ்வளவு பிரகாசமாக இருக்கும்.
டைனிங் டேபிள், விசிட்டர் டேபிள்கள் சிறப்பாக அமைக்க வேண்டும். படுத்தவுடனேயே தூக்கம் வரவேண்டும் மென்றால், டிசைனிங் ஸ்பர்னிச்சர் ஷோபா, மெத்தைகளை தேர்வு செய்யலாம். கட்டில்கள், மெத்தைகள், டிரெஸ்சிங் டேபிள்கள், டைனிங் டேபிள்கள் என வீட்டிற்குத் தேவையான பல பொருள்களைத் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி வீட்டை அழகு படுத்தலாம்.
ஒரு சமையல் அறைக்கு தேவையான அனைத்து பொருள்களும் மார்பிளால் உருவாக்கப்பட்டிருந்தால், அந்த சமையல் அறைகூட சாமி அறை ஆகிவிடும். இங்கு டெலிபோன்கூட மார்பிள்தான்.
அத்தோடு சுவர் ஓவியங்கள், உடற்பயிற்சி சாதனங்கள், கார்பெட்டுகள், சேப்ட்டி லாக்கர்கள்... இப்படி நம் வீட்டை இப்படியும் கூட அழகாக மாற்றமுடியும்.
செயற்கை செடி, பூ, மரம், தவளை மிதக்கும் தண்ணீர் தொட்டி என வீட்டிற்குள்ளேயே ஒரு தோட்டத்தை அமைக்கலாம். இந்த செயற்கைத் தாவரங்கள் ரூ.100 முதல் கிடைக்கின்றன.
அழகான அருவி, ஆவி பறக்கிறது, இப்படி ஒரு நீர்வீழ்ச்சி நம் வீட்டு ஹாலில் இருந்தால் எப்படி இருக்கும்..? இந்த நீர் வீழ்ச்சி அனைத்தும் மார்பிளால் செய்யப்பட்டிருந்தால் கற்பனையே இவ்வளவு அழகாக இருக்கும் போது நேரில் அமைத்தால் எவ்வளவு அழகாக இருக்கும். மேலும் அழகான சில சிலைகளை நம் ரசனைக்கு தகுந்தபடி வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இப்படி வீட்டுக்குத் தேவையான ஆணி முதல் அட்டாளி வரை உள்ள அனைத்துப் பொருள்களும் நவீனமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்போது நாம் ஏன் வீட்டின் அகத்தையும், புறத்தையும் அழகுபடுத்தக்கூடாது?

எப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா?

எப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா?

To show yourself young - Child Care Tips and Informations in Tamil
முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:-
புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீயைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.
கண்ணில் கருவளையம் மறைய...
சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
முகத்தை பாதுகாக்கும் முறை:-
ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
உதடு உலர்ந்து விட்டதா?
உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.
கழுத்தில் உள்ள கருவளையம் மறைய:-
சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்றுவிடும்.
இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல:-
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
காது அழகை பராமரிப்பது எப்படி?
பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும்... காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.
ஆகவே பெண்மணிகளே காதை மிளிர வைப்பது எப்படி? என்பது பற்றிய யோசனையைகேளுங்க.
உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ் - பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.
சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.

நீங்களும் முயன்று பாருங்கள்...!

நீங்களும் முயன்று பாருங்கள்...!

Give yourself a try...! - Child Care Tips and Informations in Tamil
சாதாரணமாக நடப்பதைவிட சற்று மெதுவாக நடக்க முயலுங்கள்.
மகிழ்ச்சியான, மனநிறைவான உணர்ச்சிகளை தினமும் பத்து நிமிடங்கள் மனதிலே கொண்டு வாருங்கள்.
சாதாரணமாகப் பேசுவதைவிட குறைவாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.
உங்களுக்காகத் தினமும் 30 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த முப்பது நிமிடங்களுக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள்.
சாப்பிட்ட உடனே எழுந்து ஓடாதீர்கள். அமர்ந்து பின்னர் எழுந்து செல்லுங்கள்.
ஒரு கூட்டத்தில் பங்கேற்கும் போதும், மற்ற நேரங்களிலும் மக்களின் முகங்களைப் பாருங்கள்.
பிறர்மேல் உள்ள அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.
உங்கள் கோபத்திற்கு உரிய காரணங்களைக் கண்டுகொள்ள இன்று முயலுங்கள்.
அழகான மரம், மலர் போன்ற இயற்கை காட்சிகளை நின்று ரசியுங்கள்.
உங்கள் முகம்கூட மலர்ச்சியாக இருக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பிறரைப் பார்க்கும்போது புன்முறுவல் பூத்துப் பழகுங்கள்.

ஜிம் இல்லாமல்... ஜம் மென்று

ஜிம் இல்லாமல்... ஜம் மென்று...

Jim... - Child Care Tips and Informations in Tamil
உடற்பயிற்சி செய்தால் தசைகளுக்கு நல்லது என்று யாருக்குத்தான் தெரியாது? ஆனால், தினமும் சிறிது நேரம் கூட இதற்காக ஒதுக்க முடியாத நிலை பல பெண்களுக்கு இருக்கலாம்.
தவிர, இன்னும் கூட பல குடும்பங்களில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதைப் பிறர் கொஞ்சம் கிண்டலாகத்தான் பார்க்கிறார்கள்.
உடற்பயிற்சிக்காகத் தனியாக நேரமும் செலவாகக் கூடாது. நான் செய்யும் பயிற்சிகள் பிறருக்குப் பளிச்சென்று தெரியவும் கூடாது. இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பெருமூச்சு விடும் பெண்களுக்கு இதோ சில வியக்கத்தக்க பயிற்சிகள். உடற்பயிற்சிகள் மட்டுமல்ல மனப்பயிற்சிகளும் கூட. உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் அதைவிட வேறென்ன வேண்டும்?
எல்லாவற்றையும் விட முக்கியமாக நாம் பல்வேறு விஷயங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே இவற்றைச் செய்து விடலாம் என்பதால் அதிகப்படியாக ஒரு நிமிடம் கூட செலவழிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
வெயிட்டிங் கேம்ஸ் என்ற பிரபல நூலில் அளித்திருக்கும் விஞ்ஞானப்பூர்வமான பயிற்சிகளை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன இவை.
ஒவ்வொரு விதமான பயிற்சிக்கும் சில காத்திருக்கும் சூழல்களை உதாரணத்திற்குக் கொடுத்திருக்கிறோம். நீங்களே சற்று யோசித்தால் உங்களுக்கேற்ற வேறு சூழல்களிலும் அவற்றைச் செய்ய முடியும்.
மிகப் பெரும்பாலான பயிற்சிகள் அனைவராலும் செய்யக்கூடியவைதான் என்றாலும் அதிக ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தீவிரப் பயிற்சிகளை செய்வதற்கு முன் தங்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
1. கொடுமையான விஷயம் வரிசையில் நிற்பதுதான். எப்படியோ எங்காவது அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது கூட அந்த நேரத்தில் பயனுள்ளதாக கழிக்க முடியும்.
உடலைச் சிறிதும் அசைக்காமல் கழுத்தை வலமும் இடமுமாக முடிந்தவரை அதிக அளவுக்குத் திருப்புங்கள். கழுத்துக்கும் இது நல்ல பயிற்சி. தெரிந்தவர்கள் யாரும் தட்டுப் படுகிறார்களா என்று கவனித்த மாதிரியும் இருக்கும்.
2. இந்தப் பயிற்சிகளைக் கூட வரிசையில் நிற்கும் போது செய்து பயனடையலாம்.
ஏதோ ஒரு சுவரில் சாய்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முட்டிகளை இலோசாக வளைத்தபடி முதுகுப் புறத்தை கொஞ்சம் கீழே கொண்டு வாருங்கள். இதைச் செய்யும் போது உங்கள் முதுகுப் பகுதியும் தலையும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் இருக்க வேண்டும்.
அதே நிலையில் உங்கள் தோள்களைப் பின்புறமாக இழுங்கள். ஏதோ இரண்டு தோள்களும் ஒன்றையொன்று தொட முயற்சிப்பது போல அப்படியே சில நொடிகள் இருந்து விட்டு பிறகு இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்
இப்போது ஆழ்ந்து சுவாசியுங்கள். சுவாசக் காற்றை வெளியேற்றும் போது உங்கள் வயிற்றுத் தசை முதுகெலும்பில் படும்படி இழுத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்படியே சில நொடிகள் இருங்கள். பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு வரலாம்.
3. ஒரு முக்கியமான நபரைப் பார்க்க வேண்டும். விசிட்டிங் கார்டைக் கொடுத்து அனுப்பியாச்சு. இன்னும் சற்று நேரத்தில் உள்ளே கூப்பிடப் போகிறார்கள், படபடப்பாயிருக்கு, இந்த பதற்றத்தைத் தவிர்க்க நீங்க சில மனப் பயிற்சிகளைச் செய்யலாம்.
அந்த வி.ஐ.பி.யுடனான அந்தச் சந்திப்பு எப்படி அமைய வேண்டும் என்று நீங்கள் யூகிக்கிறீர்களோ அதை அப்படியே மனதில் காட்சிகளாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.
அந்த வி.ஐ.பி.யை மிகச் சாதாரணமான உடையில் (லுங்கி, சட்டை இவற்றை மட்டும் அணிந்திருப்பது போல) கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த வி.ஐ.பி.க்கு நல்ல குணங்கள் எதிராளியை மதிக்கும் பண்பு முதலியவை இருப்பதாக நம்புங்கள்.
கடந்த காலத்தில் நீங்கள் செய்த சாதனைகளை மனதில் கொண்டு வாருங்கள். பிறகென்ன, உங்கள் மனதில் நம்பிக்கை பிறக்கும், நம்பிக்கை வந்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும்.
4. ஒரு வேளை நீங்கள் உயரம் குறைவானவராக இருக்கலாம். அதனால் நீங்கள் சந்திக்க இருப்பவர் முதல் பார்வையிலேயே குறைவானவராக எடை போட்டு விடுவாரோ என்ற பயம் உங்களுக்குத் தோன்றலாம். இதற்கு நீங்கள் சில சாதாரண உடற்பயிற்சிகள் மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் கூட செய்யலாம்.
நீங்கள் உட்கார்ந்திருந்தாலும் சரி, நின்று கொண்டிருந்தாலும் சரி மிக அதிகமான பரப்பளவை அடைத்துக் கொள்ளும்படி இருங்கள். அதாவது உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். தோள்கள் பின்புறம் செல்ல வேண்டும். கால்களும், பாதங்களும் ஒன்றுக்கொன்று குறுக்கே வைத்துக் கொள்ளாது இணைகோடுகள் போல தரையில் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவற்றின் மூலம் உங்களுக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுவதோடு உங்களுக்கே சுவாரஸ்யம் ஏற்படும். உங்களுக்கே தோற்றத்தில் உள்ள குறைபாடு தெரியாது.
5. பயந்து நடுங்கிக் கொண்டு காத்திருக்க வேண்டிய நிலை. இப்போது மேலதிகாரி உங்களைச் சந்திக்கப் போகிறார். எப்போதோ செய்த தவறைக் கண்டுபிடித்து விட்டாரோ என்ற திகில் வேறு.
அல்லது டாக்டரைச் சந்திக்க அவரது க்ளினிக்கில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படியும் ஊசி போடுவார் என்ற கிலி. இந்தப் பயத்தைப் போக்க கீழ்க்கண்ட சாதாரணப் பயிற்சிகளை செய்து பாருங்கள்.
முதலில் பாதங்களில் தொடங்கி உடம்பில் ஒவ்வொரு பகுதியும் மிகவும் இறுக்கமின்றி ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். வலது பாதம், இடது பாதம், வலது முழங்கால், இடது முழங்கால், வலது தொடை, இடது தொடை என்று ஒவ்வொரு பாகமாக தசைகளை தளர்வு படுத்துங்கள். ஒவ்வொரு பாகமாக ஐந்து நொடி செய்யலாம். அந்தந்தப் பகுதியில் ஏற்படும் நிம்மதியான நிலையை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
உள்ளே அழைக்கப்படும் போது உடல் இலேசான ஒரு நிலையோடு செல்லுங்கள். உடலில் எந்தப் பகுதியாவது இறுக்கம் அடைந்திருந்தால் மீண்டும் ரிலாக்ஸ் பண்ணி விட்டுக் கொள்ளுங்கள். இந்த நிலை உடலில் சக்தி விரயமாகாமல் காக்கப்படுகிறது. இதோடு மனமும் தெளிவாக இருக்கிறது. நேர்முகத் தேர்வுக்குக் காத்திருக்கும் போது கூட இந்தப் பயிற்சிகளைச் செய்து பயன்பெறலாம்.
6. கேமிராவுக்கு எதிராக நின்று கொண்டிருக்கிறீர்கள். ஏதோ லைசென்ஸீக்காக எடுக்கப்படும் பாஸ்போர்ட் படமாக இருந்தாலும் சரி, மற்றவர்களோடு சேர்ந்து எடுத்துக் கொள்ளும் குரூப் ஃபோட்டோவாக இருந்தாலும் சரி, நம் முகம் புகைப்படத்தில் அழகாக விழவேண்டுமே என்ற ஒரு சின்ன டென்ஷன் மனது ஓரத்தில் எட்டிப் பார்ப்பது இயல்பு (புகைப்படத்திலே நாம் அசிங்கமாகத் தெரியாமல் இருக்கணுமே என்ற கவலை சிலருக்கு)
உங்கள் முகம் தனி ஒளியுடன் திகழ்வதற்கு இதோ சில ஆலோசனைகள், ஸ்டூடியோவில் உள்ள மேக்-அப் அறைக்குள் செல்லும் போது கூட இதைச் செய்து பார்க்கலாம். இடுப்புக்கு மேல் உள்ள பகுதியை முன்னுக்குக் கொண்டு வாருங்கள். தலையை தரையைத் தொடுவது போல முயற்சி செய்யட்டும். அப்படியே கொஞ்ச நேரம் இருங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிமிருங்கள். தலைப்பகுதிக்கு ரத்தம் அதிகமாகப் பாய்வதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. காத்திருக்கும் போது என்று இல்லாமல் எப்போதும் இந்தப் பயிற்சியை சில முறை செய்து வந்தால் தொடர்ந்து ஃபிரஷ்ஷாக இருக்கும்.
7. உடலில் கீழ்ப்பகுதியைச் சிறிதும் அசைக்காமல் இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதியை வலதும் இடதுமாகத் திருப்புங்கள். (பார்ப்பவர்களுக்கு நீங்கள் யாரையோ தேடுவது போலிருக்கும்.).
ஏதாவது கூட்டம் குறைந்த பொது இடத்தில் நிற்கும் போது கூட இதைச் செய்யலாம். தொப்பைப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகி கொழுப்புச் சத்தில் ஒரு பகுதியையாவது காணாமல் போகச் செய்யும் இந்தப் பயிற்சி.
8. மணிக்கட்டுகளுக்கான பயிற்சி இது. இதை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.
முஷ்டியை நன்கு இறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொன்றாக எல்லா விரல்களையும் அகலமாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மணிக்கட்டைச் சுழற்றுங்கள். பிறகு மணிக்கட்டை மேலும் கீழுமாக சில முறை உதறுங்கள்.
பிறகு மொத்த கையுமே தளர்த்தியாக விட்டுக் கொண்டு அசைத்துப் பாருங்கள்.
9. வீட்டில் யாருடனாவது தொலைபேசியில் பேசும் போது ஒரு கைதானே ரிஸ“வரைப் பிடித்துள்ளது. இன்னொரு கையும் உடலின் மற்ற பல பகுதிகளும் ஏன் வேஸ்டாக இருக்க வேண்டும்? இதோ சில பயிற்சிகள்.
ரிசிவரை இடது கையில் வைத்திருந்தால் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வலது கையில் கனமான ஒரு பொருளைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். (அதற்காக அம்மிகுழவி லெவலுக்குப் போய் விட வேண்டாம். ஒரு பேப்பர் வெயிட், கனமான புத்தகம் இப்படி இருக்கலாம்.)
இப்போது அந்த எடையை உச்சிக்குத் தூக்குங்கள். ஏதோ மேல் கூரையைத் தொடுமளவிற்கு பிறகு உங்கள் தலைக்குப் பின்புறம் வழியாக அதை நன்கு கீழே கொண்டு வாருங்கள்.
பிறகு அதைப் பக்கவாட்டில் இங்குமங்குமாக ஆட்டுங்கள். அதாவது, உங்கள் மார்புப் பகுதியை நோக்கி கொண்டு வருவது போலிருக்க வேண்டும். பிறகு மெதுவாகப் பக்கவாட்டில் இறக்குங்கள். தரையைத் தொடுவது போல முயற்சி. தொடர்ந்து சில தடவைகள் செய்யுங்கள். அடிக்கடி செய்தால் கைகள் வலிமை பெறும்.
10. உட்கார்ந்திருக்கும் போது பின்புறம் உட்காரும் பகுதியில் உள்ள தசைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்படியே உங்கள் இரு கால்களையும் நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும்.
வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை நன்கு உள்ளுக்கிழுக்க வேண்டும்.
நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலி அல்லது சோபாவினுள் உங்கள் கையை நுழைத்து அதைத் தூக்குவது போல் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் ஒரு உற்சாகம் வரும். எதிர்மறை எண்ணங்கள் விலகும்.
11. வீட்டில் உங்கள் தொலைபேசியில் பேசும் போதும், சமையலறையில் வேலை செய்து கொண்டே இதைச் செய்யலாம். பாட்டில் வடிவத்தில் உள்ள ஒரு ரப்பர் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும். இலேசாக உடல் தள்ளாடினாலும் பேலன்ஸ் செய்து கொள்ள முடியும் என்றால் ரப்பர் பந்தைப் பயன்படுத்தலாம். ரப்பர் பொருளைக் கீழே வைத்து விட்டு பாதத்தால் உருட்ட வேண்டும். இதனால் பாதத்துக்கு மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படுகிறது. கால் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அது மட்டுமல்ல, பல உடல் உறுப்புகளின் நரம்புகள் பாதத்தின் கீழ்ப்பகுதியில் முடிவடைவதால் இப்படி மசாஜ் செய்து கொள்வதன் மூலமும் உடலின் எல்லாப் பகுதிகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன.
12. நாள் முழுவதும் உழைத்துக் களைத்து விட்டீர்கள். வேலை டென்ஷனில் மனதில் பதியாமல் இருந்த ஒரு விஷயம் இப்போது புலப்படுகிறது. ஒரே தோள் வலி. உங்கள் தோள்களை காதுகளை நோக்கி உயர்த்துங்கள். பிறகு அவற்றைத் தொய்வாக விட்டு தளர்த்துங்கள்.
அடுத்து ஒரு தோளை இறுக்கத்துடன் உயர்த்தி மறுதோளை ரிலாக்ஸாக வைத்திருங்கள். இப்படி மாறி மாறி இரு தோள்களையும் இயக்குங்கள்.
பிறகு காரின் ஸ்டியரிங் வீலைப் பிடித்திருப்பது போல கைகளை வைத்துக் கொண்டு தோள்களை சின்னச் சின்ன வட்டங்களாகச் சுற்றுங்கள். முதலில் முன்புறமாகவும் பிறகு பின்புறமாகவும் இந்த வட்டங்களைப் போடுங்கள்.
பிறகு உங்கள் தோள்களை பின்புறமாகக் கொண்டு செல்லுங்கள். அவை இரண்டும் ஒன்றையொன்று தொடுவதற்கு முயற்சிப்பது போல் இருக்கட்டும்.
இந்தப் பயிற்சிகளின் மூலம் தோள் பகுதியில் உள்ள இறுக்கம் நீங்கி விடுவதால் அந்தப் பகுதி டென்ஷனில்லாமல் இருப்பதோடு தலைக்கு ரத்த ஓட்டமும் தடையின்றி இருக்கும்.
13. காரில் உட்கார்ந்து செல்கிறீர்கள். சும்மாவா செல்வது?
மூக்கின் வழியாக காற்றை நன்கு உள்ளே இழுங்கள் சில நொடிகள் சுவாசத்தை உள்ளேயே அடக்கிக் கொண்டு நாக்கை வெளிப்புறமாக நீட்டுங்கள். நாக்கினால் முகவாயின் கீழ்ப்பகுதியைத் தொடுவது போன்று இருக்கட்டும். அப்போது கண்களையும் முடிந்த அளவு நன்கு விழித்துப் பாருங்கள். அப்படியே பத்ரகாளி போலத் தோன்றும் என்கிறீர்களா? அதனால் என்ன?!
இப்போது வாயைத் திறந்தவாறு காற்றை வெளியேற்றுங்கள். அப்போது ஹா ஹா என்ற ஒலியை உங்கள் வாயிலிருந்து எழுப்பியபடி காற்றை வெளியே வேகமாகத் தள்ளுங்கள்.
இந்தப் பயிற்சிகள் உங்கள் முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்கும். ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு ஆகியவையும் அண்ட விடாமல் பாதுகாக்க உதவும்.
14. நீங்கள் செல்வது பஸ்ஸோ, இரு சக்கர வாகனமோ அல்லது காரோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஏதாவது சில இடங்களிலாவது சிகப்பு சிக்னல் விழுந்தால் வண்டி நின்றுதானே ஆகவேண்டும்? அந்தச் சமயத்தில் நீங்கள் கீழ்க்கண்ட பயிற்சியைச் செய்தால் தொப்பை விழுவதைத் தடுக்கலாம் அல்லது விழுந்த தொப்பையைக் குறைக்கலாம்.
உங்கள் வயிற்றுத் தசைகளை நன்கு உட்புறமாக இழுத்துக் கொள்ளுங்கள். பச்சை சிக்னல் வரும் போதுதான் அந்தத் தசைகளை தளர்த்த வேண்டும். தொடக்கத்தில் அதிக நேரம் இழுத்துப் பிடிக்க முடியாமல் போகலாம். விட்டுப் பிடியுங்கள். நாளடைவில் எளிதாகவே சற்று அதிக நேரத்துக்கு இந்தப் பயிற்சியைச் செய்ய முடியும்.
15. தனியாக ஒரு தீவில் மாட்டிக் கொண்டு விட்டீர்கள். எப்படியாவது யாராவது உதவக்கூடும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் எப்போது உதவிக் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
தீவில்தான் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதில்லை. இது போன்ற திகிலான சூழல் எதுவாக இருந்தாலும் மனதில் ஏற்படும் படபடப்பையும் நிம்மதியின்மையையும் போக்க கீழே உள்ள மனப்பயிற்சிகள் உதவும்.
நீங்கள் ஒரு அற்புதமான கடற்கரையில் இருப்பதாகவும், சூரிய ஒளி பட்டு உங்கள் மேனி தகதகப்பதாகவும், இதனால் உங்களுக்கு ஒரு தனி சக்தி கிடைப்பதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். "இந்தச் சூழலில் நான் படுத்துக் கொண்டிருந்தால் (அல்லது உட்கார்ந்து கொண்டிருந்தால்) நேரம் வேகமாகக் கழியும்" என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த கவிதை அல்லது பாடல் வரிகளையும் வாய் விட்டுப் பாடலாம். இந்தப் பயிற்சிகளின் காரணமாக மனதில் ஏற்பட்டுள்ள திகில் உணர்ச்சி மறைவதுடன் நேரத்தையும் வேகமாகக் கடக்கலாம்.
16. பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறீர்கள். அடுத்தடுத்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தது உங்கள் முறை, பயமாக இருக்கிறது. எப்படித்தான் இவ்வளவு பெரிய அரங்கில், இவ்வளவு பேர் முன்னிலையில் பாடப் போகிறோமோ என்ற அச்சம், நீங்கள் செய்ய வேண்டியது இதைத்தான்.
நீங்கள் உட்காரும் இடங்களையும், கால்களையும் நன்கு இறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு அவற்றைத் தளர்த்தி விடுங்கள். இப்போது கால்கள் முழுவதும் ஓர் ஓய்வான சூழலில் எந்தவித இறுக்கமுமின்றி இருப்பதை உணருங்கள்.
ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து விட்டு பிறகு மெதுவாக அதை வெளியேற்றுங்கள், இன்னமும் நேரமிருந்தால் கண்களை மூடிக் கொண்டு உங்களுக்குப் பிடித்த ஒரு காட்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இந்தப் பயிற்சிகளின் காரணமாக மனதில் ஓர் அமைதி ஏற்படும். நீங்கள் திட்டமிட்டபடி பயமின்றி நினைத்த காரியத்தை முடிக்கலாம்.
17. உடலை குறிப்பிட்ட வகையில் வைத்துக் கொண்டால் திருடர்களோ, பிற தீயவர்களோ உங்களைத் தாக்க பலமுறை யோசிப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் சந்தடி அடங்கிய நேரத்தில் ஒரு தெருவைத் தாண்ட வேண்டியிருக்கிறது. பின்னால் வருபவன் நல்லவனா அல்லது உங்களுக்கு ஏதாவது கெடுதல் செய்ய எண்ணுகிறானா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் உடலை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் தைரியம் வெளிப்படட்டும். கண்கள், வாய், தலையை அசைப்பது எல்லாவற்றிலுமே ஒரு கம்பீரத்தை (தற்காலிகமாவது) கொண்டு வாருங்கள், தோல்கள் இறுக்கமின்றி இருக்கட்டும். ஏதோ அந்தப் பகுதியே உங்களுக்கு சொந்தமானது என்பது போன்ற உணர்வோடு நடந்து செல்லுங்கள்.
இப்படித் தோற்றமளிப்பவர்களைத் தாக்க தீயவர்கள் பெரிதும் தயங்குவார்கள் என்பது மனோதத்துவம்.
18. வயிற்றுப் பகுதியில் மட்டுமல்ல புருவங்களுக்கு நடுவே கோடுகள் தென்பட்டால் கூட அவை முகப்பொலிவைக் கெடுத்துவிடும்.
நெற்றியில் உள்ள தசைகள் உதவியுடன் புருவங்களை ஒன்றோடு ஒன்று நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். யாரையாவது கோபமாகப் பார்க்கும் போது செய்கிற மாதிரி இருக்கிறதே என்கிறீர்களா? கடுகடு வென்று முகம் அந்த நேரத்தில் காட்சியளிக்கும் என்றாலும் தசைப் பயிற்சிதானே!
பிறகு முடிந்தவரை புருவங்களுக்கு நடுவேயுள்ள தூரத்தை அதிகப்படுத்துங்கள். இதையெல்லாம் செய்வதற்கு கை விரல்களைப் பயன்படுத்த வேண்டாம். நெற்றித் தசைகளைப் பயன்படுத்துங்கள்.
ஒரு கூடுதல் ரகசியம். புருவங்களை விலகச் செய்து மேலெழும்பும் சமயங்களில் கண்களை நன்கு மூடிக் கொள்ளுங்கள். இதன் காரணமாக கண் பகுதியில் உள்ள இரத்தம் ஓட்டம் சிறப்பாக அமையும்.
19. முகம் ஜம்மென்று இருக்க கொட்டாவி விடலாம். அதாவது வெறுமனே கொட்டாவி விடாமல் கொட்டாவி விடும்போதே சில பயிற்சிகளைச் செய்யலாம். எப்படியும் கொட்டாவி விடும் போது கையால் வாய்ப்பகுதியை மறைத்துக் கொள்வோம். அப்போதுதானே அந்தக் கொட்டாவி ஒரு தொற்று வியாதியைப் போல் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும்? தவிர அதுதானே நாகரிகம்?
கொட்டாவி வரும்போது உதடுகளால் பற்களை முடிந்தவரை மடித்து மூடிக் கொள்ளுங்கள். பிறகு மெல்ல கொட்டாவி விடும்போது வலிந்து ஒரு நீளமான புன்னகையை வெளிப்படுத்துவதன் மூலம் வாயின் இரு ஓரங்களுக்கும் அழுத்தம் கொடுங்கள்.
ஒவ்வொரு முறையும் தானாக உதடுகள் விரிவதை விட கொஞ்சம் முயற்சித்து மேலும் அதிகமாக வாயைத் திறக்க வேண்டும். அப்போது கழுத்துத் தசைகள் கூட விரிவடைவதை உணர்வீர்கள்.
இந்தக் கொட்டாவிப் பயிற்சியால் வாய்ப்பகுதியும் கன்னங்களும் தங்கள் தொளதொள தன்மையை இழந்து பொலிவு பெறும். கண்ணுக்குக் கீழேயும் கழுத்திலும் சுருக்கங்கள் ஏற்படுவதையும் இது தடுக்கும்.
20. சும்மா எங்காவது உட்கார்ந்து கொண்டிருக்கும்போதே உங்கள் கவனிக்கும் திறனை அதிகப்படுத்திக் கொண்டால் நல்லதுதானே?
ஏதோ ஒரு ரிசப்ஷன் அறையில் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் சுற்றும் முற்றும் பாருங்கள். எந்தப் பகுதியில் நீங்கள் நன்கு கவனிப்பதற்கு ஏற்ற மாதிரி பல விஷயங்களைக் கொண்டதாக இருக்கிறது என்பதைத் தீர்மானம் செய்யுங்கள்.
பிறகு நீங்களே ஒரு நேரம் கொடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக ரொம்பவும் அதிக நேரம் இல்லை. சுமார் அரை நிமிடம், அவ்வளவுதான். அந்த அரை நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நன்கு உற்றுப் பாருங்கள். பிறகு உங்கள் முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொள்ளுங்கள் (அல்லது கண்களை மூடிக் கொள்ளுங்கள்).
இப்போது உங்கள் மனதில் முதலில் பார்த்த காட்சியைக் கொண்டு வாருங்கள். "வெளிர் பச்சை வண்ணம் தீட்டப்பட்ட சுவர், அதை ஒட்டிய மாதிரி ஸ்டீல் மேஜை, அதன் மேல் ஓர் அழகான மேஜை விரிப்பு, அந்த மேஜை விரிப்பின் மேல் ஒரு கனமான புத்தகம் என்று பார்த்தவற்றை லிஸ்ட் போடுங்கள்.
பிறகு மீண்டும் அதே காட்சியைப் பார்த்து விட்டு, நீங்கள் செய்த தவறுகளையும், உங்கள் நினைவிலிருந்து மறந்த விஷயங்களையும் பட்டியலிடுங்கள். இது போன்ற மனப்பயிற்சி காரணமாக நமது கவனிக்கும் திறமை அதிகரிக்கும்.
21. கூந்தலில் எதையுமே புதிதாகத் தடவிக் கொண்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம். என்றாலும் கூந்தல் கற்றைக் கற்றையாக உதிர்வதைத் தடுக்க முடியும் என்றால் அது இனிப்பான செய்திதானே?
இரண்டு கைகளையும் அருகருகே கொண்டு வாருங்கள். கட்டை விரல்களைத் தவிர மீதி எட்டு நகங்களையும் ஒன்றோடொன்று உரசுங்கள். (எனக்கு நகம் வளர்க்கும் பழக்கமே கிடையாதே என்பது போல் பதில் சொல்ல வேண்டாம். இங்கே குறிப்பிடுவது நகமும் சதையுமாக இருக்குமே அந்த நகத்தை) இப்படி அடிக்கடி (ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது) செய்து கொண்டால் முடி உதிர்வது நிற்கும். அல்லது குறைந்தது குறையும் (முடி அல்லது முடி உதிர்வது!)
22. "அதெப்படி? இவ்வளவு தூரம் வந்துட்டுக் காப்பி கூட சாப்பிடாமப் போனா எப்படி?" என்றபடி அந்தப் பெண்மணி சமையலறைக்குள் நுழைந்திருப்பார். அவர் விருந்தோம்பலை மெச்சியபடி சும்மா பொழுதைப் போக்கிக் கொள்ளாமல் சில சின்னச் சின்ன அசைவுகளைச் செய்து உற்சாகத்தை ஏற்றிக் கொள்ளலாமே.
நம் உடலிலுள்ள பல பாகங்களின் நரம்புமுனைகள் உள்ளங்கையில் சங்கமமாகின்றன. உள்ளங்கை உங்களைப் பார்த்திருப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள். இப்போதே இடது உள்ளங்கைக்குக் கீழ்ப்புறத்தில் வலது கையில் (கட்டை விரல் தவிர) பிற நான்கு விரல்களை ஆதாரமாக வைத்துக் கொள்ளவும். பின் வலது கை கட்டை விரலால் இடது உள்ளங்கையில் உள்ள மேட்டுப் பகுதிகளைச் சற்றே அழுத்திக் கொடுங்கள். முக்கியமாக விரல்களின் கீழ்ப் பகுதியிலுள்ள மேடுகள், பிறகு வலது உள்ளங்கையில் உள்ள மேடுகளுக்கு இதே போல் அழுத்தம் கொடுங்கள். வழக்கத்தை விட மெதுவாக இயங்கிக் கொண்டிருக்கும் பாகங்கள் சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி பெறும்.
23. சில சமயம் சந்தர்ப்பம் காரணமாக வெளியில் சிரித்துப் பேசிக் கொண்டிருப்போம். ஆனால் உள்ளுக்குள் ஏதாவது கவலை அரித்துத் தின்று கொண்டேயிருக்கும்.
எந்த இடத்தில் இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு மனப்பயிற்சியைச் செய்யலாம். ஒவ்வொரு கவலையாக நினையுங்கள். அது உங்களை விட்டுப் பறந்து போவதாகக் கற்பனை செய்யுங்கள். அதாவது ஒரு கழுகு அல்லது வல்லூறு வடிவில் அந்தக் கவலை உங்கள் மூளைப் பகுதியிலிருந்து வெளியே பறந்து செல்கிறது. அப்படிப் பறந்தவுடன் உங்கள் மனதில் உற்சாகம் பரவுவதாகக் கற்பனை செய்யுங்கள். மனம் லேசாவதை உணர்வீர்கள்.
24. எந்த இடத்துக்குச் சென்றாலும் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். படிக்கிறீர்களோ இல்லையோ சில வகைப் பயிற்சிகளை சத்தமில்லாமல் செய்ய அது உபயோகமாக இருக்கும்.
எதற்காகவாவது உட்கார்ந்தபடி காத்திருக்கும் சமயத்தில் புத்தகத்தை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். கண்களை வெகு வேகமாக வலப்பக்கமும் இடப்பக்கமுமாக மேயவிடுங்கள். கண்களுக்கு இது நல்ல பயிற்சி. தப்பித் தவறி உங்களை யாராவது பார்த்தால் "அட எவ்ளோ வேகமா படிக்கிறாங்க" என்று வியந்து மனதுக்குள் பாராட்டிக் கொள்வார்கள். ரொம்பவும் அருகில் யாரும் இல்லையென்றால் நடுநடுவே கண்களை மூடிக் கொண்டு கூட விழிகளை அங்குமிங்கும் ஓட்டி "புத்தகம் படிக்கலாம்" கண்களுக்கு இது சரியான பயிற்சி. அங்கு ரத்த ஓட்டம் அதிகமாகும்.
25. பியானோவைப் பார்த்திருப்பீர்கள். நேரில் இல்லாவிட்டாலும் தமிழ் சினிமாக்களில். (அதுதான் காதலியின் பிறந்த நாளன்று காதலன் ஒரு முழுப்பாட்டை பியானோவின் துணையோடு பாடுவானே).
எந்த மாஸ்டரிடமும் போக வேண்டாம். ஆனா "பியானோ-கீ"க்களை வாசிப்பது போன்ற சில அசைவுகளைச் செய்யுங்கள்.
அதுவும் உங்கள் விரல்கள் இலகுவாக இல்லாமல் ஸ்டிஃப்பாக இருந்தால் நீங்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.
உங்கள் கைகளை முன்புறமாக நீட்டுங்கள். உள்ளங்கை உங்கள் முகத்தை நோக்கி இருக்கட்டும்.
இப்போது உங்கள் வலது ஆள்காட்டி விரலால் இடது கட்டை விரலைக் கீழே கொண்டு வாருங்கள். கட்டை விரலின் நுனி இடது உள்ளங்கையைத் தொட வேண்டும். பிறகு கட்டை விரலை அதன் இயல்பு நிலைக்கு விட்டுவிடுங்கள். அடுத்து இடக்கை ஆள்காட்டி விரலை மடக்கி உள்ளங்கையைத் தொட வையுங்கள். இப்படியே இரு கைகளிலும் உள்ள ஒவ்வொரு விரலையும் மடக்கி நீட்டுங்கள். ஒவ்வொரு முறையும் மூன்று முறையாவது இதைச் செய்ய வேண்டும்.

வெற்றி சிந்தனைகள்

வெற்றி சிந்தனைகள்

Thoughts for victory - Child Care Tips and Informations in Tamil
காலத்தைக் கவனமாகக் கையாளுவோம்!
காலத்தின் பெருமையையும், எதையும் உரிய காலத்தில் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நீங்கள் உணர வேண்டும்.
"எனக்கு நேரமே சரியில்லை!" என்று புலம்புகின்ற மனிதர்கள் சிலர். "என்றைக்கு நல்ல காலம் பிறக்குமோ!" என்று பெருமூச்சுவிடுபவர் சிலர்.
"நேரமும் காலமும் வந்து ஒண்ணா சேர்ந்திடுச்சிண்ணா நடக்கிறதெல்லாம் நல்லபடியாக நடந்திடும்" என்று நல்ல நேரத்துக்காக சோதிடர்களிடம் நாள் நட்சத்திரம் பார்க்கச் செல்லுபவர்கள் சிலர்.
இப்படி, நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல்தான் "நேரம் - காலம் - Time"
இவ்வாறு காலத்தின் பெருமை பற்றிப் பல கருத்துகள் கூறப்பட்டாலும் நம்மில் பலர் காலத்துக்கு உரிய மதிப்பளிக்காமைக்குக் காரணம் காலத்தின் மதிப்பு அவர்களுக்குத் தெரியாமைதான்.
"என்ன செய்வதென்றே தெரியவில்லை"
"சே! ரொம்ப சலிப்பாக இருக்கிறது"
"இப்ப போனா போகட்டும்; பிறகு பார்த்துக்கலாம்!"
"என்றைக்காவது ஒருநாள் வராமலா போய்விடும்!"
இப்படியெல்லாம் பேசி, காலத்தை வீணடிப்பவர்களும் உண்டு. நாமும் அவர்களை போல் இல்லாமல் காலம் பொன்போன்றது என்று நினைத்து காலத்தை கவனமாக கையாளுவோம். அவ்வாறு காலத்தைக் கவனமாகக் கையாள வேண்டுமானால் அதற்கான 10 கட்டளைகள்.
1. வெட்டிப் பேச்சு பேசுவதை விட்டொழியுங்கள்.
2. சோம்பேறிகள், சுகவாசிகள், வேறு வேலையில்லாதவர்களோடு பழகாதீர்கள்.
3. வாழ்க்கைக்குப் பயன்தராத புத்தகங்களைப் படிக்காதீர்கள்.
4. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்களைப் பொறுத்தவரையில் மிகவும் சிறந்த நிகழ்ச்சிகளை மட்டும் கேளுங்கள் - பாருங்கள்.
5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள் - நாளைய வேலையைக்கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள்; ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்.
6. செய்யக்கூடிய வேலையை முக்கியமானவை, அவசரமானவை, வழக்கமானவை, ஒன்றுக்கும் உதவாதவை எனத் தரம் பிரித்து, கிடைக்கும் நேரத்தில் வரிசைப்படி செய்து முடியுங்கள்.
7. எந்த வேலையையும் இதற்குள் முடிப்பேன் என்று ஒரு காலக்கெடு வைத்து அதற்குள் முடிக்க முயற்சியுங்கள்.
8. நாளைக்கு என்ன வேலை செய்ய வேண்டும்? யாரைச் சந்திக்க வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்பதை இன்றைக்கே குறித்து வையுங்கள்.
9. உடற்பயிற்சி செய்து, உடலை ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக வைத்திருங்கள்.
10. நல்ல ஓய்வு எடுங்கள். போதிய உறக்கம் தேவை. தியானம் செய்யுங்கள்

இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே

இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே!

If it is possible, it's to be good! - Child Care Tips and Informations in Tamil
காதுகளை மறைத்துப் பின்னல் போட்டுக் கொண்டால் பெண்களின் நீளமான முகம் உருண்டையான முகம் போலத் தோன்றும்.
அணியும் புடவை பகட்டான டிசைன்கள் உள்ளதாக இருந்தால், அணியும் சோளி பூ வேலையோடு கோடுகளே இல்லாத லேசான வண்ணத்தினால் உள்ளதாக இருக்க வேண்டும். அப்போதுதான் எடுப்பாக இருக்கும்.
ஒற்றைச் சடை போட்டுக் கொள்ளும் பெண்கள், கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலியும், காதுகளில் கல் பதித்த அகலமில்லாத கம்மல்களையும் அணிந்து கொண்டால் அழகாக இருக்கும்.
நீள முகமுடைய பெண்கள், நெற்றியில் வட்டமாகப் பொட்டிடாமல், நெற்றியின் அகலவாக்கில் ஒன்றரை அங்குல நீளத்துக்கு விபூதிப் பூச்சுபோல் தடிப்பாகப் பொட்டிட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும்.
உயரமான தோற்றமுடைய பெண்கள் உயரத்தைக் குறைத்துக் காட்ட குதிகால் உயர்ந்த பாத அணிகளைத் தவிர்த்து, தரையோடு படிந்த அடிப்பாகம் கொண்ட பாத அணிகளையே பயன்படுத்த வேண்டும்.
ஒடுக்கமான கழுத்தைப் பெற்ற பெண்கள், காதுகளில் ஜிமிக்கி போன்ற தொங்கலான காதணியை அணிந்தால் தான் நன்றாக இருக்கும்.
குள்ளமான உருவமுடைய பெண்கள் பட்டையான தங்க வளையல்களை அணிந்தால் நல்லது. மெல்லிய வளையல்களாக இருந்தால் குறைந்தபட்சம் ஒவ்வொரு கையிலும் இரண்டு வளையல்கள் அணியவேண்டும்.
உயரமான கொண்டை போட்டுக் கொண்டால் எடுப்பான பெரிய பெரிய பூக்களைச் சற்றுப் பட்டையாகத் தொடுத்துச் சரமாக்கி கொண்டையைச் சுற்றி அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும்

நீங்களும் தொழில் அதிபர்தான்

நீங்களும் தொழில் அதிபர்தான்

U r also Businessmagnet - Child Care Tips and Informations in Tamil
இப்போதெல்லாம் அழகு சாதனப்பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி உள்ளன. அதிலும் சிலவற்றுள் ரசாயணம் கலக்கப்படுவதால் முக அழகு சிதைந்து விடுகிறது.
அதனால் அழகு சாதன பொருட்களை நீங்கள் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்யலாம். இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவற்றை தயாரிக்க கூடுதலான முதலீடு தேவை இல்லை. நல்ல லாபகரமான தொழில்!
இத்தொழிலில் உள்ள பெண்கள் பலர் இன்று தொழில் அதிபர்களாக மாறி உள்ளனர்.
வீட்டில் இருந்தபடியே முயற்சி செய்தால் இனி நீங்களும் தொழில் அதிபர்தான்! முயன்றால் வெற்றி நிச்சயம்.
அழகு சாதனப்பொருட்களை தயாரிக்கும் முறைகள்:-
பொடுகு நீக்கும் எண்ணை:-
தேவை:
சுத்தமான தேங்காய் எண்ணை (தேவைக்கேற்ப) கொட்டை முத்து இலை, மருதாணி இலை.
செய்முறை:-
எண்ணெய்யில் இந்த இலைகளை போட்டு கொதிக்க விடுங்கள் ஆறியதும், வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் தலைக்கு தடவி வரவும். கூந்தல் பொடுகு தொல்லையின்றி முடி கருகருவென அடர்த்தியாக வளரும்.
சிகப்பழகு கிரீம்:-
தேவை:
வெண்ணை 1 தேக்கரண்டி, வைட்டமின் ஈ கேப்சூல்.
செய்முறை:
வெண்ணையுடன் கேப்சூலில் உள்ள எண்ணையை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளவும். 10 நிமிடங்கள் ஊறியதும் கடலை மாவு அல்லது பயத்தம் மாவு கொண்டு தேய்த்து கழுவவும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளும், கருந்திட்டுகளும் மறைந்து இயற்கையாக சிகப்பழகு கிடைக்கும்.
உதடுகளுக்கான கிரீம்:-
தேவை:
வாசலின் 1 தேக்கரண்டி, தேன் 1/2 தேக்கரண்டி, ஆரஞ்சு சாறு சில துளிகள், இவை மூன்றையும் கலந்து உதடுகளில் தடவி வரவும். தொடர்ந்து இதை செய்து வந்தால் லிப்ஸ்டிக் உதவியின்றி உதடுகள் சிவப்பாக மென்மையாக மாறும்.
நரையை விரட்டும் எண்ணை:-
தேவை:
நல்லெண்ணை 1 லிட்டர், கறிவேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி, செம்பருத்திப்பொடி, தலா 25 கிராம். வல்லாரைக்கீரை பொடி 20 கிராம், அதில் சந்தனபொடி 10 கிராம், எண்ணையை காய வைத்து அதில் மேற்கண்ட அனைத்து பொடிகளையும் போடவும்.
எண்ணை புகையக் கூடாது. உடனே வடிகட்டாமல் அப்படியே அந்த எண்ணையை வெயிலில் 4 நாட்கள் வைத்திருக்கவும். பிறகு மென்மையான மஸ்லின் துணியில் வடிகட்டி பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளவும். இந்த எண்ணையை தலைக்கு தடவி மசாஜ் செய்து குளித்து வந்தால் இளநரை மறைந்து கூந்தல் கருமையாக அடர்த்தியாக வளரும்.
சரும சுருக்கம் நீக்கும் பொடி:-
தேவை:
கற்றாழைப்பொடி, ஆரஞ்சு பழத்தோல் பொடி, ரோஜாப்பூ பொடி, சந்தனபொடி சமஅளவு.
சில பெண்களுக்கு 50வயதிற்கு முன்பே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. இப்படிப்பட்டவர்கள் இந்த பொடியை பால் அல்லது பாலாடையுடன் முகத்தில் தடவி வரலாம்.
பிளீச்:-
தேவை:
உருளைக்கிழங்கு பவுடர் 2 தேக்கரண்டி, பப்பாளி பவுடர் 2 தேக்கரண்டி, கயோலின் பவுடர் 2 தேக்கரண்டி, சந்தனபவுடர் 1 தேக்கரண்டி.
செய்முறை:
மேற்கண்ட அத்தனை பொடிகளையும் ஒன்றாகக்கலந்து கொள்ளவும். வறண்ட மற்றும் மென்மையான சருமம் என்றால் இந்த பொடியில் 4 தேக்கரண்டி இளநீரும், எண்ணை பசையான சருமம் என்றால் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தண்ணீரும் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறிய பின் துடைத்து எடுக்கலாம். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.
இந்த முறைகளை பின்பற்றி நல்ல தரமான அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம். நீங்களும் முயற்சி செய்யலாமே!

பருவப் பெண்களின் தாய்மார்களுக்கு....

பருவப் பெண்களின் தாய்மார்களுக்கு....

To the mothers of adolescent girls - Child Care Tips and Informations in Tamil

பெண்களின் வாழ்க்கையில் "டீன் ஏஜ்" என்பது வசந்தகாலம் போன்றது

பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை "டீன் ஏஜ்" என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.
இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதே போல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.
டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன?
* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.
* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர். எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.
* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித் தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.
* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.
* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்சினைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப்படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

ஏன் இந்த வேகம்?

ஏன் இந்த வேகம்?

Why this speed? - Child Care Tips and Informations in Tamil
மனத்திற்கு நம்மை ஐந்து வகையில் நிர்வகிக்கும் ஆற்றல்கள் உண்டு. அவை
எதையும் சரியான கோணத்தில் பார்த்தல்; Right Focussing.
தவறான கோணத்தில் பார்த்தல்; Wrong focussing.
நினைவில் வைத்து வெளிப்படுத்துதல்; Memory focussing.
கற்பனை செய்தல்; Imagination
தூங்க வைத்தல்; Sleep
ஆக, நினைவாற்றல் என்பது, மனம் நிர்வகிக்கும் ஐந்து பணிகளில் ஒன்றே தவிர, அது மட்டுமே மனத்தின் பணியல்ல.
மனத்தை முழுதும் தன் வயப்படுத்தியோர்க்கு, இந்த ஐந்து வகை நிர்வாகமும் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
ஒவ்வொன்றையும் நம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முடியும்; முயல வேண்டும்.
என்ன முயற்சி?
ஒவ்வொன்றிற்கும் உரிய நேரத்தை ஒதுக்க வேண்டும்; உரிய நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும்.
* ஒரேயடியாய்த் தூங்குபவன் உருப்பட்டதில்லை.
* அளவுக்கதிகமாய்க் கற்பனையில் மிதப்பவன் செயல்படுவதில்லை.
* தன் மூளை ஆற்றலை வியந்து, ஒரேயடியாய் அதற்கு வேலைப்பளு கொடுத்தவன், கடைசிவரை அதைக் கொண்டு செலுத்தியதில்லை.
* தவறான கோணத்தில் மட்டுமே பார்க்கத் தெரிந்தவன், புகழுடனும் பெருமையுடனும் வாழ்ந்ததில்லை.
* சரியான கோணத்தில் மட்டுமே பார்க்கத் தெரிந்தவன், சிலுவைக்கும், துப்பாக்கிக்கும், நஞ்சுக்கும் தப்பி, முழு ஆயுளுடன் உலகில் வாழ்ந்ததில்லை.
எனவேதான் திருவள்ளுவர்கூட, "அறிவாளிகளிடம் அறிவாளியாய் இரு; முட்டாள்களிடம் முட்டாள்போல் இரு!" என்பார்.
எனவே, இவை ஒவ்வொன்றிற்கும் நேரம் ஒதுக்குவதில் மிகுந்த கவனம் வேண்டும். எந்த ஒன்றும் அளவு தாண்டி, நம் மனத்தை அழுத்த நாம அனுமதிக்கக்கூடாது.
ஏனெனில், நம் வாழ்க்கையே அளவை அடிப்படையாய்க் கொண்டது.
மனம், எதையும் உடனே முழுமையாக்கத் துடிக்கும்.
பார்ப்பது எதுவானாலும், அதன் அத்தனை பரிமாணங்களையும் அழகாக, அனுபவித்துப் பார்க்கப் பழகுங்கள்.
கேட்பதை, முழு ஈடுபாட்டுடன் கேட்கத் தொடங்குங்கள்.
தொடுவதை, உணர்வுடன் தொடுங்கள்.
சுவைப்பதை, நிதானமாகச் சுவைக்க ஆரம்பியுங்கள்.
நாளடைவில் மனம், தானாய் அடங்கி நிகழ்காலத்தில் நிற்கும். தொடங்கும் போதே முடிவுக்குச் செல்லத் துடிக்க மாட்டோம்.
வெற்றியும் இன்பமும் தாமே வெளிப்படும். இன்பம் என்பது வெளியிலிருந்து வருவதல்ல; அது ஏற்கெனவே நம்முள் இருக்கிறது.
பயிற்சி கொடுத்து எந்த ஆற்றலையும் உடலுக்குள் திணிக்க முடியாது. ஏற்கெனவே எல்லா ஆற்றல்களும் நமக்குள் இருக்கின்றன. அவற்றை வெளியே வர விடாமல் தடுக்கும் தடைகளை மட்டும் நீக்கினால் போதும்: ஆற்றல் வெளிப்படத் தொடங்கிவிடும்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்க எத்தனையோ வழிகள்!

வீட்டிலிருந்தே சம்பாதிக்க எத்தனையோ வழிகள்!

Earn mony to many way by home - Child Care Tips and Informations in Tamil
பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க எத்தனையோ கவுரவமான வழிகள் உள்ளன. அவசரஅவசரமாய் தூங்கியெழுந்ததும் ஒன்றும் பாதியுமாய் சமையலை முடித்து அரக்கப்பரக்க குழந்தைகளை பள்ளிக்குத் துரத்தி விட்டு ஓட்டமும் நடையுமாய் சென்று காலைப் பேருந்தை பிடித்து அலுவலகம் போனால் உயரதிகாரியிடம் திட்டு வாங்கி... இவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு சாரசரி பெண்ணால் எவ்வளவு சம்பாதித்து விட முடியும்? அதிகபட்சம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்குமா?
அதே அளவு வருவாயை நாம் வீட்டிலிருந்தபடியே நமக்கு விருப்பமான நேரத்தில் பிடித்தமான வேலையைச் செய்யவும் முடியும். அட அது எப்படி என்கிறீர்களா?
சாப்பிட பயன்படுத்துகிறோமே ரொட்டி. அதைக் கொண்டு விதவிதமான வடிவங்களில் கலைப் பொருட்களைச் செய்வதுதான் "ப்ரெட்கிராப்டிங்" என்கிறார்கள். ஆனால் இதை பார்த்து ரசிக்கத்தான் முடியும். சாப்பிட முடியாது காரணம் இதில் துத்தநாக ஆக்ஸைடு கலந்திருப்பதுதான். எறும்பு பூச்சிகளின் அரிப்பிலிருந்து இப்பொருட்களைக் காப்பதற்காகவே துத்தநாக ஆக்ஸைடு கலக்கிறார்கள்.
வீட்டிலுள்ள அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு தன் கையால் செய்த பொருட்களால் வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், ப்ரெட்கிராப்ட் வெஜிடபுள் கார்விங் போன்ற விஷயங்களில் பெண்கள் ஈடுபடுவது அவர்களின் ரசனையை உயர்த்துவதுடன் குடும்ப வருவாயைப் பெருக்கும்.
பிரெட் 5 துண்டுகள், துத்தநாக ஆக்ஸைடு ஒரு டீஸ்பூன், பெவிகால்- தேவையான அளவு, வளையும் தன்மையுள்ள மென்மையான கம்பி, பேப்ரிக் பெயிண்ட்- ஏதேனும் 4 நிறங்கள், ஐஸ்கிரீம் கிண்ணம்- 1, தேங்காய் எண்ணெய் சிறிதளவு.
செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும்.
பிரெட்தூள், மற்றும் துத்தநாக ஆக்ஸைடை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு பெவிக்கால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு பிசையும் போது கையில் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளாமல் இருக்க உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
கிண்ணத்தைச் சுற்றி பெவிகால் தடவவும். பெவிக்காலின் மேல் பேப்பரை ஒட்டவும். பிசைந்து வைத்துள்ள மாவை பேப்பரில் ஒட்டவும். வளைவாக இருப்பது போல் கம்பியைச் சொருகவும். (இது கூடை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்) ஒவ்வொன் றும் காய்ந்த பிறகுதான் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும். காய்வதற்கு எப்படியும் மூன்று நாட்களாவது ஆகும்.
டெடிபியர் செய்யலாமா?
முதலில் டெடியின் உடம்பைச் செய்துவிட்டு கை, கால் தலை செய்வதற்காக உடம்பின் மேல் பக்கவாட்டில் கைகளுக்காக இரு பக்கங்களிலும் இரண்டு சிறிய கம்பியும், கீழ் பக்கவாட்டில் கால் களுக்காக இரண்டு சிறிய கம்பியும், உடம்பின் மேல் பாகத்தில் தலைக்காக இரண்டு கம்பியும், சொருகி வைக்கவும். உடம்பு பகுதி காய்ந்த பிறகு கை, கால், தலை என்று சரி செய்து அதற்காகவிடப்பட்டுள்ள கம்பியில் அழகாக சொருகி விடுங்கள்.
தலை செய்யும் போதே காதுக்காக இரண்டு கம்பி செய்த பிறகு காதையும் செய்து கம்பியில் பொருத்தவும்.
முழுமையாக எல்லாம் காய்ந்த பிறகு பேப்ரிக் பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டுங்கள்.
கூடையைச் சுற்றி, பூ, இலை என்று நாம் செய்யும் அலங்காரங்கள் எல்லாம் கற்பனையைப் பொருத்தது. உதாரணமாக பூ என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கு பெரிதாக ஒன்றும் மெனக்கிட வேண்டாம். சுண்டைக்காய் அளவு மாவை உருட்டிக் கொண்டு பேனாவின் பின் பக்கத்தினால் மாவை அழுத்தினால் பூ, ரெடி. இதை கூடையிலுள்ள கம்பியில் ஆங்காங்கே சொருகி வைத்தால் அழகான பூக்கூடை ரெடி.
கைவேலை செய்வதற்கு நிறைய பொறுமையும் ஆர்வமும் தேவை.
இந்த மாதிரி ஒரு கலைப் பொருளைச் செய்ய 50லி ருந்து 75 ரூபாய் வரைதான் ஆகும். ஆனால் கடைகளில் 150 லிருந்து 200 ரூபாய் வரை கொடுத்து வாங்கத்தயாராக இருக்கிறார்கள். தெரிந்தவர்களுக்குப் பரிசாகவும் அளிக்கலாம்.

நேரத்தை மிச்சப்படுத்துவது எப்படி

நேரத்தை மிச்சப்படுத்துவது எப்படி...

கவிதா Time Management - Child Care Tips and Informations in Tamil
எல்லோருக்கும் ஒரே மாதிரியாக 24 மணி நேரத்தைத்தான் கொடுத்திருக்கிறார் கடவுள். சிலர் அந்த நேரத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்தி நிறைய விஷயங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள். சிலரோ எல்லா வேலைகளையும் டென்ஷனோடு ஆரம்பித்து சரியாக முடிக்கவும் முடியாமல் சொதப்பி விடுவார்கள். ஒரு சிலரால் முடிந்த விஷயம் ஏன் பெரும்பாலானவர்களால் முடியவில்லை என்று பார்த்தால், அவர்களுக்கு நேரத்தைப் பயன்படுத்தும் சூட்சுமங்கள் தெரியவில்லை என்பது தான் உண்மை!
எந்தெந்த சமயங்களில் பெண்கள் டென்ஷனாகிறார்கள்?
காலை நேரத்துப் பரபரப்பு (குழந்தைகள், கணவரை பள்ளிக்கு, வேலைக்கு அனுப்பும் சமயத்தில் தலை கிறுகிறுத்துப் போகும்).
ஒர்க்கிங் வுமனாக இருந்தால் கணவர் குழந்தைகளை ஆஃபீசுக்கு அனுப்பிவிட்டு, தானும் ரெடியாகி அரக்கப் பரக்க பஸ் பிடிக்க ஓடும் சமயங்கள். இந்த இரண்டு பிரச்னைகளையும் அநேகமாக எல்லாப் பெண்களும் சந்தித்து வருகிறார்கள். சே... என்னடா வாழ்க்கை இது. என்று நாங்கள் சற்று வெறுத்துப்போய் பேசும் தருணங்களும் இதுதான் என்கிறார்கள் நம்மிடம் பேசிய சில இல்லத்தரசிகள்.
காலை நேரத்துப் பரபரப்பை எப்படி சமாளிப்பது?
திட்டமிடுங்கள்... அதுதான் உங்கள் டென்ஷனைக் குறைக்க முதல் வழி. யூ.கே.ஜி. படிக்கும் பையன், பிஸினஸ் செய்யும் கணவர் இருவரையும் காலை ஒன்பதரை மணிக்குள் கிளப்ப வேண்டும். டி.வி. பார்த்துக் கொண்டே மறுநாளைக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்து விடுங்கள்.
சமைக்கும்போது குழப்பம் வரவே கூடாது. உருளைக்கிழங்கு பொரியல், சாம்பர் வைக்க வேண்டும் என்று முதல் நாள் முடிவு செய்து விட்டால் அதிலிருந்து மாறக் கூடாது. ஏனென்றால் காலை நேரப் பரபரப்பை குழப்பங்கள் ரொம்பவே அதிகப்படுத்திவிடும்.
அதேபோல் முதல் நாளே குக்கர் வைக்கத் தேவையான அரிசி, பருப்பைக்கூட தனித் தனியாக எடுத்து வைத்து விட்டால் சமையல் சுலபமாகிவிடும்.
வாணலியில் கடுகை வெடிக்க விட்டு விட்டு கறிவேப்பிலை எடுக்க, கொத்தமல்லி எடுக்க என்று ஒவ்வொன்றுக்காகவும் ஃப்ரிட்ஜை நோக்கி ஓடி வருவதைத் தவிர்த்து விடுங்கள். நேர விரயத்தோடு கால்வலியும் வரும். அதனால் சமைக்கத் தேவையான அத்தனை பொருட்களையும் தயாராய் எடுத்து வைத்துக் கொண்டு சமையுங்கள்.
வாட்டர் பாட்டில், ஷூ, சாக்ஸ், டிஃபன் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ் முதலியவற்றை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல், தாங்களே எடுத்துக் கொள்ளும்படி உங்கள் குழந்தைகளைப் பழக்குங்கள். ஏனென்றால் இது மாதிரியான சின்னச் சின்ன வேலைகள் தான் காலை நேரத்து டென்ஷனை அதிகப்படுத்தும்.
நேரத்தை அதிகப்படுத்தும் விஷயங்கள்
வண்டிச் சாவி, பீரோ சாவி, பிரீமியம் கட்டச் சொல்லி வந்த கடிதம், செல்ஃபோன், நியூஸ் பேப்பர், மெடிக்கல் பிரிஸ்க்ரிப்ஷன்... போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தினமும் ஏதாவது ஒரு குடும்பத்தில் வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருப்பார்கள்.
சே... இந்த வீட்ல அவசரத்துக்கு ஒரு பொருளாவது கிடைக்குதா? என்று தேடுபவர் டென்ஷனாகிக் கத்த, மற்றவர்களும் சேர்ந்து கத்த குடும்பமே தேடு தேடென்று தேடினால் பீரோ சாவி கட்டிலுக்கு அடியில் கிடக்கும். மெடிக்கல் பிரிஸ்க்ரிப்ஷன் பூஜை அறையில் விபூதிக்கு வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்... அந்தந்தப் பொருளை அந்தந்த இடத்தில் வைக்காததன் விளைவுதானே இந்த நேர விரயம்?
ஒவ்வொரு பொருளும் அதற்குரிய இடத்தில் சரியாக வைக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை எடுத்துப் பயன்படுத்திய பிறகும் மீண்டும் எடுத்த இடத்தில் அந்தப் பொருளை வைக்க வேண்டும்.
இந்த சூட்சுமத்தை சரியாகக் கையாண்டால் இல்லத்தரசிகள் கையில் எக்கச்சக்கமான மணித் துளிகள் தவழும். (உங்கள் குடும்பத்தாருக்கும் எடுத்த இடத்தில் பொருளை வைக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்களேன்.)

பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள்...

பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிகள்...

ந.ஜ“வா -Self Defense for Women - Child Care Tips and Informations in Tamil
என்னதான் பெண்கள் படித்துவிட்டு வேலைக்குப் போய் ஆண்களுக்கு நிகராகச் சம்பாதித்தாலும் அவர்கள் ஆண்களைப் போல சுதந்திரமாக நடமாட முடிவதில்லை.
"வீட்டை விட்டு வேலைக்காகவோ, படிப்பதற்காகவோ வெளியே செல்லும் பெண்ணாகட்டும், வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்ணாகட்டும் அவர்களுக்கு ஆண்களால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் ஏற்படலாம். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எப்போதும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்கிறார் பெண்களுக்கான தற்பாதுகாப்புப் பயிற்சிகளை அளித்துவரும் தருணா. "பெராடிகம்ஷிப்ட்" என்ற நிறுவனத்தின் இயக்குநரான அவரை சந்தித்தபோது...
"பெண்ணாகப் பிறந்துவிட்டாலே இந்த உலகில் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆண்களால் பலாத்காரம் செய்யப்படுதல், ஈவ் டீசிங் செய்யப்படுதல் என்று எந்தப் பெண்ணுக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் எப்போதும் இருக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் நான் சந்திக்கிற பல கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் பலரும் "எங்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது" என்ற நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த ஆபத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
இப்படி இருப்பதனால் அவர்களுக்கு உண்மையிலேயே ஆபத்து நேரக்கூடிய சந்தர்ப்பங்களில் எதுவும் செய்ய முடியாமல் அதிர்ச்சியால் உறைந்து போகிறார்கள்.
இந்த நிலையை மாற்ற பெண்கள் எப்போதும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஆபத்துகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
இதற்கான பயிற்சிகளைத்தான் நாங்கள் பெண்களுக்கு கற்றுத் தருகிறோம்.
நாங்கள் நடத்தும் பயிற்சி கராத்தேவோ, குங்க்ஃபூவோ அல்ல. ஆண்களால் பெண்களுக்குத் தாக்குதல் ஏற்படும் போது அதை அவர்கள் எவ்விதம் எதிர்கொள்வது என்பதற்கான மனரீதியான, உடல்ரீதியான பயிற்சிகளையே அளிக்கிறோம்.
பெண்கள் பாதுகாப்பாக இருக்க யோசனைகள் சொல்கிறோம்.
முதலில் பெண்கள் யாருமில்லாத இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சில நூலகங்கள் மிகப் பெரியவையாக அதிக ஆள் நடமாட்டம் இல்லாததாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் பெண்கள் தனியாகப் போகக் கூடாது. அதுபோல அலுவலகத்திலும் கூட தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஷாப்பிங் போகும் போது இருசக்கர வாகனத்தை, காரை ரொம்ப தூரமான இடத்தில் நிறுத்திவைத்துவிட்டுச் செல்லக் கூடாது. ஷாப்பிங் முடித்து விட்டு வர நேரமாகிவிட்டால் தனியாகச் சிறிது தூரம் நடந்து சென்று வாகனத்தை எடுக்க வேண்டும். அப்போது எது வேண்டுமானாலும் நிகழலாம்.
பொது இடங்களில், பார்ட்டிகளில் பெண்கள் தாங்கள் குடிக்க இருக்கிற குளிர்பானத்தை உடனே குடித்துவிட வேண்டும். மேஜையில் வைத்துவிட்டுச் சற்று எழுந்து போனால்கூட அதில் மயக்க மருந்தோ, வேறு எதையோ பிறர் கலந்து வைத்துவிட வாய்ப்புண்டு.
இப்போது கால்சென்டர், பிபிஓ போன்றவற்றுக்கு பெண்கள் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. நள்ளிரவில் கூட நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. அல்லது அலுவலகத்தில் வேலை முடிந்து நேரம் கழித்து வீட்டிற்கு வர வேண்டியிருக்கிறது.
அப்போது காரில் ஏறும் முன்பு பெண்கள் டிரைவரை முதலில் கவனிக்க வேண்டும். அவர் குடித்திருக்கிறாரா என்பதை அவர் கண்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். காரில் டிரைவருக்குப் பக்கத்தில் சம்பந்தமில்லாத ஆள் யார் உட்கார்ந்திருந்தாலும் காரில் ஏறக் கூடாது. அந்த ஆள் காரில் இருந்தால் நான் காரில் வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட வேண்டும்.
காரில் ஏறி உட்கார்ந்தவுடன் செல்போனைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பிக்கக் கூடாது. இடையில் யார் காரில் ஏறுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். கார் செல்லும் பாதையை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேறுபாதையில் கார் செல்லுமானால் அதை உரிய நேரத்தில் போன் மூலம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். காரில் செல்லும் போது தூங்கக் கூடாது.
பஸ்ஸில் போகும் போது ஆண்களின் பால்ரீதியான தொந்தரவுக்குள்ளாக நேரிடுகிறது. இதைச் சண்டை போடாமல் சமயோசிதமாகச் சமாளிக்க முடியும். உதாரணமாக பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஆண் தொந்தரவு கொடுக்கும் போது வாந்தி வருவது போல நடித்தால் அந்த ஆண் தள்ளி உட்கார்ந்து கொள்வான்.
இப்படி சமயோசிதமாக நடந்து கொள்வதற்கு முக்கியத் தேவை, எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். அடுத்து உணர்ச்சிவசப்படாமல் நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற அறிவு.
பெண், ஆணின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தப்பிக்கும்போது ஆணைத் தாக்க வேண்டிய தேவையிருந்தால் நிச்சயமாகத் தாக்க வேண்டும்.
பின்னாலிருந்து பிடிக்கும் ஆணின் முன்பாதத்தில் ஓங்கி மிதிக்க வலி தாங்கமாட்டாமல் அவன் பிடியை விட்டுவிடுவான். காலால் அவனின் முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதியில் ஓங்கி உதைத்தாலும் விட்டுவிடுவான்.
அதுபோல பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆணிடம் இருந்து தப்பிக்க அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு சிறிது தூரம் முன்னோக்கி ஓடி பின் சட்டென்று திரும்பி அவனைத் தாக்க வேண்டும்.
ஆணை விட பெண்கள் உடல்ரீதியில் வலிமை குறைந்தவர்கள் தான் என்றாலும் எளிதில் தாக்கும் முறைகளை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆண்களின் உடலில் சில பகுதிகள் மிக மென்மையானவை. அந்தப் பகுதிகளில் தாக்கினால் அவன் விட்டுவிடுவான். உதாரணமாகப் பின்னாலிருந்து பிடிக்கும் ஆணை ஒரு பெண் தனது முழங்கையால் அவனுடைய விலா எலும்பில் ஓங்கி இடித்தால் அவன் நிலை குலைந்து விடுவான். மார்புக்குக் கீழே, வயிற்றுக்கு மேலே உள்ள மையமான பகுதியில் இடித்தாலும் அவனால் தாங்க முடியாது. தொண்டைக் குழிக்கு அருகில், நெற்றிப் பொட்டில், இடுப்புக்குக் கீழே எல்லாம் தாக்கினால் ஆண் எழுந்து கொள்ளவே முடியாது.
இந்தத் தற்காப்புத் தாக்குதலையெல்லாம் நினைத்த மாத்திரத்தில் பெண்களால் செய்ய முடியாது. அதற்கு ஓரளவுக்குப் பயிற்சி தேவை. அதை நாங்கள் தருகிறோம்.
இந்தப் பயிற்சிகளில் பெண்கள் தங்களுடைய கால்களை, கைகளை வலுப்படுத்திக் கொள்ளச் சொல்லித் தருகிறோம். தினமும் அந்தப் பயிற்சிகளைச் செய்தால் போதுமானது.
ஓர் ஆண் தன்னைத் தாக்கும் போது எப்படி அவனைத் திருப்பித் தாக்க வேண்டும் என்பதற்குக் கற்பனையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளைக் கணவரையோ, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி போன்றவர்களின் உதவியுடன் வீட்டிலேயே தினமும் செய்யலாம். இதனால் உண்மையிலேயே தாக்குதல் வரும் சந்தர்ப்பங்களில் திருப்பித் தாக்குவது எளிதாக இருக்கும். வேகமாக ஓடுவதற்கும், பல தடைகளைக் கடந்து தாண்டிக் குதித்து ஓடுவதற்கும் பயிற்சி எடுக்க வேண்டும். இதையெல்லாம் நாங்கள் எங்கள் பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுக்கிறோம்.
ஓர் இடத்திற்குப் போகும் போது அந்த இடத்தில் ஆணால் தனக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தோன்றினால் அந்த இடத்தில் உள்ள பொருட்களை வைத்து அவனை எப்படித் தாக்கலாம், எப்படித் தப்பிக்கலாம் என்பதை முதலில் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது மனக்கண்ணில் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒருவேளை நிஜமாகவே தாக்குதல் நிகழும் போது தப்பிப்பது எளிதாக இருக்கும். உதாரணமாக ஹோட்டலில் உட்கார்ந்திருக்கும் போது ஓர் ஆண் கெட்ட நோக்கத்துடன் தன்னை நெருங்கி வந்தால் சூடான காபியை அவன் முகத்தில் ஊற்றி அவனை நிலைகுலையச் செய்து தப்பித்துவிடலாம்.
பெண்கள் தங்கள் கைப்பையில் ஒரு விசிலை வைத்துக் கொள்ள வேண்டும். ஆணின் தாக்குதல் நிகழும்போது அந்த விசிலால் ஒலியெழுப்பினால் அக்கம்பக்கம் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். ஏனெனில் உரத்த குரலில் கத்துவது எல்லாருக்கும் முடியாது. இப்போது பெப்பர் ஸ்பிரே போன்ற தற்காப்புப் பொருட்கள் வந்துவிட்டன. அவற்றையும் பயன்படுத்தலாம்.
கூட்டமுள்ள பகுதிகளில் பெண்கள் நடந்து செல்லும்போது கையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது. கைகளைக் கட்டிக் கொண்டு நடந்தால் பின்புறம் இருந்து பிடிப்பவரையோ, அருகே வந்து இடிப்பவரையோ முழங்கையால் தாக்க முடியும்.
துப்பட்டாவின் நுனிகள் முதுகுப்புறம் வரும்படி போட்டால் பின்புறமிருந்து துப்பட்டாவை இழுப்பார்கள். அப்போது நமது உடைகள் கிழிந்து விடும். கழுத்து நெரிபடும். முன்புறம் போட்டால் இந்தப் பிரச்சினையில்லை.
பெண்களைத் தாக்க வருகிறவர்கள் திட்டம்போட்டுத்தான் தாக்க வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்கவும், திருப்பித் தாக்கவும் பயிற்சி தேவை. அத்தகைய பயிற்சிகளைத்தான் நாங்கள் அளித்து வருகிறோம்."

மன உளைச்சலில் ஷகிலா

அமலா மேனஜரை மாற்றிய விக்ரம்

தரவேண்டியதைத் தந்து 'வேங்கை'யை வாங்கிய ஹரி!

ஸ்ரீகாந்துக்கு 25 தந்த ஜெமினி பிலிம் சர்க்யூட்

தனித்தன்மை வாய்ந்தது கமல் குரல்! - தேவிஸ்ரீ பிரசாத்

சரியே' பாடல் வெளியீட்டு விழா

தமிழ் சினிமாவை கொச்சைப்படுத்திய நடிகர்

விருதகிரி பாடல் வெளியீட்டு விழா

5 லட்சம்: டிமாண்ட் வைக்கும் சந்தானம்

இலியானாவுக்கு ஒன்றரை கோடியா?

மன்மதன் அம்பு - சுவாரஸ்யமான தகவல்கள்

ரசிகர்களை ஏமாற்றிய விஜய்

'பெற்றால்தான் பிள்ளையா'வுக்கு உதவிய கமல்

Monday, November 22, 2010

கொஞ்சம் சிரிக்க வந்த வாசன்

ஷக்திக்கு சக்தி கொடுக்க வரும் சந்தானம்

கொடுத்த சத்தியத்தை மீறிய சசிகுமார்

'கோ'வில் நடனமாட நட்சத்திரங்களுக்கு அழைப்பு!

முதலில் யாருக்கு.. குழப்பத்தில் பிரபு சாலமன்

விஷாலை திகைப்படைய வைத்த பாலா

கணேஷ் வெங்கட்ராமன் மேல் விழுந்த 'பனித்துளி'!

கமல் பாடும்போது கண்கலங்கிய மாதவன்

சைலண்ட்டா திரும்பி வந்த ஸ்வாதி!

தோழமையுடன் நடந்து கொள்ளும் ஜெனி, ஹன்ஸி!

Sunday, November 21, 2010

எல்லாமே மனசு விரும்புகிறதை பொருத்துதான்! - பிரபுதேவா

பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதரவாக விடப்பட்டிருக்கிறார்கள்

பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதரவாக விடப்பட்டிருக்கிறார்கள்!Dinakaran office burnt verdict is truly injustice to the victims - Tamil Katturaikal - General Articles
தமிழக அரசியல் களத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் பற்றிய கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டதற்காக மதுரைத் தினகரன் அலுவலகத்தின் மீது 2007 மே 9 அன்று தாக்குதல் நடத்தி, அதன் மூன்று அப்பாவி ஊழியர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை முதலில் மாநிலக் காவல்துறைக் குற்றப்பிரிவினரும் பின்னர் மத்தியப் புலனாய்வுத் துறையினரும் விசாரித்ததும் அது தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்து 2009 டிசம்பர் 9 அன்று தீர்ப்பளித்ததும் அனைவரும் அறிந்த செய்தி. இது போன்ற முக்கியத்துவமுடைய வழக்குகளின் விசாரணை, நீதிமன்ற நடைமுறைகளின் மீது அக்கறை காட்டும் ஊடகங்கள் இம்முறை மௌனமாக இருந்தன. விசாரணை குறித்த விவரங்களையோ தீர்ப்பு குறித்த விமர்சனங்களையோ வெளியிடுவதில் தமிழ் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் அநேகமாக எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட, பட்டப்பகலில் தன் ஊழியர்களில் மூன்று பேரின் உயிர்களைப் பறிகொடுத்த தினகரன் நாளிதழுங்கூட விதிவிலக்காக இருக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியூட்டக்கூடியது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பது தவிர வேறு வழியற்ற நிலைக்கு விசாரணை நீதிமன்றம் தள்ளப்பட்டது. அரசுத் தரப்பின் முக்கியச் சாட்சிகளில் பெரும்பாலானோர் விசாரணை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலங்களை நீதிமன்ற விசாரணைகளின்போது மறுத்து, பிறழ்வு சாட்சிகளாக மாறி அரசுத் தரப்பைத் தோற்கடித்துக் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உதவியுள்ளனர். பிறழ்வு சாட்சிகளாக மாறியவர்களில் சப் இன்ஸ்பெக்டர் ஆலடியான், சரவணக்குமார், ராம் நாராயணன், இன்ஸ்பெக்டர் தெய்வீகப் பாண்டியன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரப் பாண்டியனும், தினகரன் ஊழியர்கள் முத்துப் பாண்டியன், ஆர்.எம்.ஆர்.ரமேஷ், ஸ்ரீனிவாசகன் போன்றோரும் அடங்குவர். இதைவிடக் கவலைக்கிடமான ஒரு விசயம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன் கடமையைச் சரியாகச் செய்யத் தவறியதுதான். குறுக்குவிசாரணையின்போது அநேகமாக அவர் ஒன்றுமே செய்யவில்லை. எதற்காகவோ பயந்து சாட்சிகள் எல்லோரும் பொய் சொல்கிறார்கள் என அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டது போல்தான் இருந்தது. சாட்சிகளைப் பயம் கவ்வியிருந்தது. விசாரணை அதிகாரிகள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் எல்லோரும் ஏதோவொரு சக்தியைக் கண்டு பயந்துபோயிருந்தார்கள் என்பது தெரிகிறது.
வேலியே பயிரை மேய்ந்த கதைக்குச் சிறந்த உதாரணம் இந்த வழக்கு. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளும் தன் சக ஊழியர்களைப் பறிகொடுத்திருந்த தினகரன் அலுவலக ஊழியர்களுங்கூட முதற்கட்ட விசாரணையில் தாம் காவல் துறையிடம் அளித்த வாக்குமூலங்களை சிபிஐ விசாரணையின்போது மறுத்திருக்கின்றனர். சிபிஐ விசாரணையின்போது அவர்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் உண்மையானால் முதன்முதலில் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் பொய் என்றாகிவிடுகிறது. காவல் துறையினரிடம் முதலில் அளித்த வாக்குமூலம் உண்மையென்றால் சிபிஐ அதிகாரிகளிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றாகிவிடுகிறது. இந்த வழக்கையும் அது தொடர்பாகப் பல்வேறு கட்டங்களில் நடந்துவந்த விசாரணைகளையும் தொடர்ந்து கவனித்துவருபவர்களால்கூட உண்மை எது, பொய் எது என்பதைப் பகுத்தறிய முடியாத அளவுக்கு விசாரணை நடைமுறைகள் திட்டமிட்டுக் குழப்பப்பட்டன. உண்மையைக் கண்டறியும் எள்ளளவு முனைப்புங்கூட நீதிமன்றத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
பிறழ்வு சாட்சிகளாக மாறியவர்கள் மிக எளிதாகத் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமும்கூட இனிவரும் காலங்களில் சாட்சிகளுக்கு அதிகப் பாதுகாப்பளித்து அவர்கள் உண்மையைச் சொல்லும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்னும் மென்மையான கருத்தோடு தன் கடமையை முடித்துக்கொண்டது.
நீதிமன்றத்தின் கையறுநிலையை எப்படிப் புரிந்துகொள்வது? ஜெஸிகாலால், பிரியதர்சினி மட்டோ ஆகியோரது கொலை வழக்குகளில் குற்றப்பின்னணிகளை வெளிக்கொண்டு வந்ததிலும் உண்மையான குற்றவாளிகள் தண்டனை பெறத்தக்க வகையில் விவாதங்களை வளர்த்தெடுத்ததிலும் ஊடகங்கள் பெரும் பங்குவகித்தன. அவர்கள் பெண்களாகவும் அழகான தோற்ற முடையவர்களாகவும் இருந்ததால் தான் ஊடகங்கள் அவர்களுக்காகக் குரல் கொடுத்தனவா என்னும் கேள்வி எழுகிறது. ஏனெனில் தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் அவை கைகளைக் கட்டிக்கொண்டிருந்துவிட்டன. எந்தவொரு விசயமும் ஊடகக் கவனம்பெற ஏதாவது கவர்ச்சிகரமான அம்சம் இருக்க வேண்டுமென ஊடகங்கள் கருதுகின்றனவா? இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதை அரசு தன் தோல்வியாகக் கருதவேயில்லை. வழக்கின் தோல்விக்குக் காரணமானவர்களும் பிறழ்வு சாட்சிகளுமான தன் ஊழியர்கள்மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? குறைந்தபட்சம் அரசின் ஒரு துறையிடம் - காவல்துறை, சிபிஐ அல்லது நீதிமன்றம் - அவர்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள்மீது நீதிமன்றத்தாலும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
ஒருபுறம் சத்யமேவ ஜயதே என முழங்கிக்கொண்டே மறுபுறம் பொய் சொல்வது நமக்கு இயல்பானதாகத் தென்படத் தொடங்கியிருக்கிறது. சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் கொண்டவர்கள் நம் தலைவர்களாக இருக்கிறார்கள். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாம் திருமணம் செய்து கொள்வதென்பது சட்டப்படிக் குற்றம். ஆனால் நம் தலைவர்களும் கடவுளர்களும் இரண்டு மனைவிகளைக் கொண்டவர்களாக இருப்பது நமக்கு உறைப்பதே இல்லை. சட்டப்படி அது குற்றமாகத் தெரிவதுமில்லை. நீதிமன்றத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 191இன் படி பொய் சாட்சி சொல்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை வழங்க வழி இருக்கிறது. அப்படியிருக்கும்போது பொய் சாட்சி சொல்லி நீதிமன்றங்களை ஏமாற்றியவர்களுக்கெதிராகப் பெரிய அளவில் சட்டரீதியில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நேர்வுகள் சொற்பம். பெஸ்ட் பேக்கரி வழக்கிலும் ஜெஸிகா லால் கொலை வழக்கிலும் பொய் சாட்சியங்கள் மூலம் நீதிமன்றங்களை ஏமாற்றிக் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள உதவியவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்கள் பரிந்துரைத்த நல்ல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. பொய் சாட்சி சொல்பவர்கள் குற்றவாளிகளைத் தப்பவிடுவதன் மூலம் குற்றத்துக்குத் துணைபுரிபவர்கள். தினகரன் அலுவலக ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் பிறழ்வு சாட்சிகளாய் மாறியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதவரை அரசுங்கூடக் குற்றத்துக்குத் துணைபுரிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.என்.காரே, "குற்றமில்லாத நாடாக நம் நாடு உருவாக வேண்டுமானால் பொய் சாட்சியம் என்பது தீவிரமான குற்றமாகப் பார்க்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார். நாம் அநீதியான இந்தத் தீர்ப்புக்கெதிராக மிகப் பெரிய அளவில் போராடியாக வேண்டும். இது போன்ற வெளிப்படையான, கொடிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு நம்மால் தண்டனை பெற்றுத் தரமுடியவில்லையெனில் யார் வேண்டுமானாலும் எத்தகைய குற்றவழக்குகளிலிருந்தும் தப்பிவிடலாம் என்னும் தவறான நம்பிக்கை வேரூன்றப்பட்டுவிடும். இது தவறான, அபாயகரமான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடக்கூடும். இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றமோ காவல் துறையோ நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை. பொய் சாட்சியம் என்பது தீவிரமான குற்றமாகப் பார்க்கப்படாதவரை இது போன்ற தீர்ப்புகள் தொடர்கதையாக வந்துகொண்டேயிருக்கும். வெகுண்டெழுந்திருக்க வேண்டிய ஊடகங்கள் கண்களை மூடிக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது. குற்றம்சாட்டப்பட்ட பதினேழு பேரும் விடுவிக்கப்பட்டதைக் குறித்த அதிர்ச்சியைத் தினமணி தவிர மற்ற நாளிதழ்கள் வெளிப்படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் அளவுக்கு வலிமைகொண்டவர்கள் அல்ல. ஆக பாதிப்புக்குள்ளானவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதரவானவர்களாக விடப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றிய குற்றவுணர்வோ வெட்கமோ இல்லாமல் நாம் நீதியை, ஜனநாயகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இக்கொடிய குற்றத்துக்குத் தலைமை தாங்கியவர்கள், முன்னின்று நடத்தியவர்கள் திமுகவினர் என்பதால் மாநிலக் காவல் துறையால் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்பதற்காகவே இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மாநில அரசின் காவல் துறையிடமிருந்த இந்த வழக்கை அரசு சிபிஐயிடம் ஒப்படைத்ததைத் தவறாகப் பார்க்க முடியாதுதான். ஆனால் சிபிஐகூட இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது என்பதுதான் நமது மனத்தை உறுத்தும் விசயம். சிபிஐ ஒரு சுயேச்சையான புலனாய்வு அமைப்பு என்பதுதான் பொதுநம்பிக்கை. மாநிலக் காவல்துறை சொன்ன எல்லாவற்றையும் சிபிஐ அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. ஏற்கனவே மாநிலக் குற்றப் பிரிவு போலீசாரின் விசாரணைக்குள்ளானவர்களை சிபிஐயும் விசாரித்திருக்கும். அதன் பின்புதான் அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கவும் வேண்டும்.
பிறழ்வு சாட்சிகளில் ஒருவரான சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரப்பாண்டியன், காவல் துறையினர் நீட்டிய வெற்றுத்தாளில் கையெழுத்திட்டதாகச் சொல்லிக் காவல் துறையினரிடம் தான் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் மறுத்திருக்கிறார். பொறுப்புள்ள வருவாய்த் துறை ஊழியர் ஒருவர் வெற்றுத்தாளில் கையெழுத்திட்டதாகச் சொல்வது அதிர்ச்சியூட்டக்கூடிய விசயம் அல்லவா? அப்படியானால் நாம் நம் அரசின் அடிப்படையான அலகுகளை எப்படி நம்புவது? அந்தக் கிராம நிர்வாக அலுவலருக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அவர்மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூட அரசு முயலாதது விநோதம். சரி, அவரிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியவர்கள் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா? குற்றத்தை நேரில் பார்த்தவர்கள், நேரடியான நடவடிக்கைகளில் பங்குபெற்றவர்கள் தவிர மற்ற சாட்சிகள் பிறழவில்லை. அதனால் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எந்தச் சிக்கலும் எழவில்லை. ஆனால் சாட்சிகள் மிரட்டப்படவில்லை எனச் சொல்லிக்கொள்ள இது உதவும் அல்லவா?
தொழில்நுட்பரீதியில் மிகச் சாதுர்யமான முறையில் நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ள வழக்கு இது. குற்றம் நடந்ததற்கு ஆதாரமான எண்ணற்ற புகைப்படங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றைப் படமெடுத்ததாகச் சொல்லப்பட்ட புகைப்படக்காரர்கள் நீதிமன்றத்தில் அதை ஒப்புக்கொள்ளாததால் அவை அதிகாரபூர்வச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒளிப்படக் காட்சிகள் எவையும் காட்டப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியச் சாட்சிகள் சட்டப்படி, நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்கள், ஆவணங்கள், தடயங்கள் போன்றவை சட்டத்துக்குட்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். நேரடியாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் ஒருவர் பிறகு பிறழ முடியாது. சாட்சிகள் பிறழ்வதற்கு வாய்ப்புள்ள எல்லா வழக்குகளிலும் சாட்சிகள் நேரடியாக நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவதும் நீதிபதியிடமே நேரடியாக வாக்குமூலம் அளிக்கச் செய்வதுதாம் நடைமுறை. பிரேமானந்தா வழக்கில் எல்லாச் சாட்சிகளுமே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரியும் நீதிமன்றத்தின் முன் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இந்த வழக்கு கையாளப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது இது மறுவிசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய வழக்கு என்பதில் சந்தேகமில்லை. அதற்கான காரணங்கள் வெளிப்படையாக உள்ளன. மக்கள் கண்காணிப்பகம் போன்ற ஒருசில அமைப்புகளைத் தவிர மனித உரிமை அமைப்புகள்கூட இவ்வழக்கில் பெரிதாக ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தால் ஏதாவது உபயோகமாக இருக்கலாம். மதுரை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருக்கிறது. ஆனால் அது இன்னும் பதிவு செய்யப்படக்கூட இல்லை. தேசிய மனித உரிமை ஆணையம் தானே முன்வந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்கை மறுவிசாரணைக்குட்படுத்தக் கோரலாம். அதற்குச் சட்டத்தில் இடமிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் என்பதால் இது நடக்குமா எனத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் என்பதைவிடக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சக்திவாய்ந்தவர்கள் என்பது முக்கியமான விசயம் அல்லவா?
தமிழகத்தின் செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர்கள் பற்றிய கருத்துக் கணிப்பொன்றை வெளியிட்டதற்காக மதுரைத் தினகரன் அலுவலகம் 2007, மே 9 அன்று தீயிட்டுக்கொளுத்தப்பட்டது. தாக்குதலில் தினகரன் ஊழியர்கள் மூவர் பலியாயினர். இவ் வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் 2009, டிசம்பர் 9 அன்று மத்தியப் புலனாய்வுத் துறையால் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலைசெய்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு தொடர்பாக வழக்கறிஞரும் ஜனநாயக மாதர் சங்கத்தின் உறுப்பினருமான சுதா ராமலிங்கம் அவர்களுடன் நடத்திய உரையாடல் பதிவு இது. தீர்ப்பின் நகலைக் கொடுத்து உதவிய மதுரை மக்கள் கண்காணிப்பகத்துக்கு நன்றி.