இரை தேட வந்த இடத்தில் கழுகுக்கும், ஆந்தைக்கும் பயங்கரமான
சண்டை.இரண்டும் கடுமையாக மோதிக்கொண்டன.கொஞ்ச நேரத்தில்
களைப்பு மிகுதியால் இரண்டும் களைப்படைந்து அருகில் இருந்த
மரத்தடியில் விழுந்தன.அப்போது தான் இருவருக்கும் தேவையில்லாமல்
சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்புத்தோன்றியது
உடனே இரண்டும் சமாதானமாக போவதுஎன்ற முடிவுக்கு வந்தது.
தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்
கொண்டன. “என்னுடைய குழந்தை நீ பார்க்கவில்லையே...அடடா என்ன
அழகு!அவற்றின் கண் அழகும்,இறக்கை அழகும் பார்க்கப் பார்க்க ஆசையா
இருக்கும். நான் இப்போது சொல்லியதை வைத்தே, என் குழந்தைகளை
நீ எங்கு பார்தாலும் அடையாளம் கண்டுகொள்ளளாம்”என்றது ஆந்தை.
அதை கேட்ட கழுகு அப்படியா” என்று வியந்தது. இரண்டும் தங்கள்
இருப்பிடத்திற்குச் திரும்பின. ஒருநாள் மரப்பொந்து ஒன்றில் சில ஆந்தை
குஞ்சுகளைப் பார்த்தது கழுகு. விழித்த கண் விழித்தபடி பயங்கரமான
கண்களோடு இருந்த அந்த குஞ்சுகளைப் பார்த்ததும்,”இவை ஒரு போதும்
தன் நண்பன் ஆந்தையின் குஞ்சுகளாய் இருக்கமுடியாது. அவை அழகாக
இருக்கும் என்றல்லவா ஆந்தை சொல்லிற்று.? என்று நினைத்தப்படி
அந்த குஞ்சுகளை தின்றுவிட்டது. அந்த நேரம்ப்பார்த்து அங்கேவந்த
ஆந்தை,”அடப்பாவி, என் குழந்தைளை இப்படி அநியாயமாகத்
தின்றுவிட்டாயே என்று கோபத்துடன் கேட்டது. “உன் குஞ்சுகள் அழகாக
இருக்கும் என்றல்லவா கூறினாய்.அதனால் தான் அழகில்லாத இந்த
குஞ்சுகளை நான் தின்றுவிட்டேன். தவறு உன் மீது தான். நீ சொன்ன
தேவையற்றவ் வர்ணையால் தான் இப்படி நடந்துவிட்டது. என்னை
மன்னித்து விடு”என்று ஆந்தையிடம் மன்னிப்புக் கேட்டது கழுகு.
தான் சொல்லிய பொய்யால் குழந்தைகளை இழக்க வேண்டிய நிலை
ஏற்பட்டதை எண்ணி வருந்தியது ஆந்தை.
கதையின் நீதி: இல்லாத விஷயத்தை மிகைப்படுத்திக் கூறினால் ஆபத்தில்
தான் முடியும்.
No comments:
Post a Comment