Sunday, December 26, 2010
ஆடுகளம்
'பொல்லாதவன்' படத்துக்குப் பின்பு வெற்றிமாறனின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ஆடுகளத்தில். 'ஆடுகளம்' வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இரண்டாவது படம். இதில் டெல்லியை சேர்ந்த மாடல் அழகி தபசி பன்னு கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மதுரை அருகே வாழும் ஒரு மனிதனின் கதை தான் 'ஆடுகளம்'. ஒரு குறிப்பிட்ட சமூகமும் அதற்குள்ளான பிரச்சினைகளுமே ஆடுகளத்தின் கதைக்களம். இதில் தனுஷ் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனின் கதையாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தப்சி ஒரு ஆங்கிலோ-இந்திய பெண்ணாக வருகிறார். கருணாஸ், கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இது த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதனை பல வழிகளில் விளம்பரப்படுத்த இதனை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. 'பொல்லாதவனுக்கு' இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். கிராமப் பின்னணியிலான படம் என்பதால் வேகமான கிராமத்துப் பாடல்களும், சில மெலோடிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாம். 'ஆடுகளம்' படத்தின் இசை உரிமத்தை சோனி மியூசிக் பெற்றுள்ளது. சன் பிச்சர்ஸ் இணைந்துள்ளதால் படத்திற்கு பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ், படத்தொகுப்பு: டி.இ.கிஷோர், கலை: ஜாக்கி, சண்டைப்பயிற்சி: 'ராம்போ' ராஜ்குமார், ராஜசேகர். நடனம்: தினேஷ், பாடல்கள்: வ.ஐ.ச.ஜெயபாலன், சினேகன், யுகபாரதி, ஏகாதசி. ஒலிப்பதிவு: டி.உதயகுமார், பி.ஆர்.ஓ: ஸ்டில்ஸ் ரவி, சிங்காரவேலு. தயாரிப்பு மேற்பார்வை: எஸ்.பி.சொக்கலிங்கம். ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரிக்கிறார். படத்திற்கு தேவையான காதல், ஆக்ஷன் என அத்தனை அம்சங்கள் ஒருங்கே கொண்ட 'ஆடுகளம்' விரைவில் திரைக்கு வருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment