Saturday, December 4, 2010

சமையல்:வேர்க்கடலை பிட்லா

சமையல்:வேர்க்கடலை பிட்லா

ஆதிரை வேணுகோபால், சென்னை
Indian Stew: Groundnut-Brinjal Pitla - Cooking Recipes in Tamil
சாம்பார் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துப்போய் விட்டதா..? சுவையான பிட்லா ட்ரை பண்ணுங்க. சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி.. இப்படி எல்லா வித அயிட்டங்களோட மேட்ச் ஆகும். வேர்க்கடலையோட மணமும் கத்தரிக்காயோட சுவையும் ஆஹா.....! நமக்கு வேலையும் மிச்சம். சுவைக்கு சுவையும் ஆச்சு. பின்ன என்ன...? செய்ய வேண்டியது தான் மிச்சம்!
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 50 கிராம்
பிஞ்சு கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 8
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - 10
வெந்தயம் - 1/4  டீ ஸ்பூன்
கசகசா - ஒரு டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை புளி கரைசல் - தலா 3 டேபிள் ஸ்பூன்
உப்பு, கடுகு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* வேர்க்கடலை மற்றும் துவரம்பருப்பை தனித்தனியாக வேகவைக்கவும்.
* எண்ணெயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், கசகசா ஆகியவற்றை வறுக்கவும்.
* வேகவைத்த வேர்க்கடலை + வறுத்த மசாலா சாமான் + ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்துருவல் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.
* நீரில் கத்தரி மற்றும் தக்காளியை உப்பு சேர்த்து வேக விடவும்.
* வெந்தபின் புளிக்கரைசலை விடவும்.
* பிறகு அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
* 10 நிமிடம் கழித்து வெந்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
* பிறகு வாணலியில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் தாளித்துக் கொட்ட வேர்க்கடலை பிட்லை ரெடி!

No comments:

Post a Comment