Sunday, December 26, 2010
கோட்டி
அஞ்சனா சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜெ.டி.சதீஷ்குமார் தயாரிக்கும் படம், 'கோட்டி'. 'விஜயநகரம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் சிவன், இந்தப் படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக 'நெல்லு' படத்தின் கதாநாயகி பாக்யாஞ்சலி நடித்துள்ளார். இவர்களுடன் சாய்குமார், நந்தா சரவணன், யுவராணி, பாலாஜி, கராத்தே ராஜா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். 'மாத்தியோசி' படத்திற்கு இசையமைத்த குருகல்யாண் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு, ஆர்.எச்.அசோக். அனைத்துப் பாடல்களையும் விவேகா எழுதியிருக்கிறார். படத்தொகுப்பை ப்ரியன் மேற்கொள்கிறார். சாய்மணி கலைப்பணியை கவனிக்கிறார். சண்டைப் பயிற்சியை 'பயர்' கார்த்திக் கவனிக்கிறார். கத்தியை கையில் எடுப்பது தவறு என்று நினைத்த கதாநாயகன், தன் தந்தைக்காக ஒரு சூழ்நிலையில் கத்தியை கையில் எடுக்கிறான். அவன் ஜெயித்தானா, இல்லையா? என்பதே இந்தப் படத்தின் கதை. விறுவிறுப்பான ஆக்ஷனும், பரபரப்பான க்ளைமாக்சும் நிச்சயம் பேசப்படும். சண்டைக் காட்சிகளில் இயக்குநர் சிவன் பயன்படுத்தியது நிஜக் கண்ணாடிதானாம். மற்ற படங்களில் பயன்படுத்துற மாதிரி பைபர் இல்லையாம். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. தயாரிப்பு நிர்வாகி: ராஜேந்திரகுமார். மக்கள் தொடர்பாளர் வி.கே.சுந்தர். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment