Sunday, December 26, 2010
ஈசன்
'சுப்பிரமணியபுரம்' படத்தை தயாரித்து, இயக்கி நடித்த சசிகுமார், 'நாடோடிகள்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்பு 'பசங்க' படத்தை தயாரித்தார். இந்தப் படங்களை அடுத்து அவர் எழுத்து, மற்றும் இயக்கத்தில் வளர்ந்துள்ள புதிய படம், 'ஈசன்'. கதாநாயகன்-கதாநாயகி என்று யாரும் இல்லாமல், எல்லா கதாபாத்திரங்களும் கதை நாயகர்களாக அமைந்துள்ளனர். இயக்குநர் சமுத்திரக்கனி, பட அதிபர் ஏ.எல்.அழகப்பன், 'நாடோடிகள்' புகழ் அபிநயா, மலையாள இயக்குநர் பிளஸ்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் வைபவ், 'மும்பை' அபர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜேம்ஸ் வசந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, நா.முத்துக்குமார், யுகபாரதி, மோகன்ராஜ் பாடல்கள் எழுதுகின்றனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.கே.நாகுராஜ் கலைப்பணியை மேற்கொள்கிறார். ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். ராஜசேகர், திலீப் சுப்புராயன் சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். "தலைப்பை பார்த்ததும் பக்திப் படமோ என்று தோன்றும். அதுதான் இல்லை. இது நகரத்தில் வாழும் மக்களின் பின்னணியில் அமைந்த கதை. வெளியூரில் இருந்து பிழைக்க வந்தவர்கள், ஏழைகள், பணக்காரர்கள் இப்படி எல்லாரும் எல்லாம் கலந்தது தான் நகரம். இதில் பகலில் ஒரு முகம், இரவில் இன்னொரு முகம் காட்டும் மனிதர்கள். இவர்களின் முகமூடி வாழ்க்கையை அவரவர் பின்னணியில் இருந்து திரைக்கதையாக்கியிருக்கிறேன்". என்னுடைய முந்தைய படத்திற்கும் இந்தப் படத்திற்கும் துளியளவுகூட சம்பந்தம் இருக்காது என்கிறார் இயக்குநர் சசிகுமார். இந்தப்படத்தை முதலில் சீயான் விக்ரம் தயாரிப்பதாக இருந்தது. அவர் பின்வாங்கிக் கொள்ளவே, சசிகுமாரே நேரடியாகத் தயாரிக்கிறார். அதோடு சசிகுமாரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சென்னை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் இந்தப் படம் வளர்ந்து இருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம். இயக்கம், தயாரிப்பு: சசிகுமார், இணைதயாரிப்பு: அசோக்குமார், இசை: ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கதிர், கலை: ஆர்.கே.நாகுராஜ், படத்தொகுப்பு: ஏ.எல்.ரமேஷ், பாடல்கள்: நா.முத்துக்குமார், யுகபாரதி, மோகன்ராஜ், நடனம்:தினேஷ், சண்டைப்பயிற்சி: ராஜசேகர், திலீப் சுப்புராயன். 'ஈசன்' படம், டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment