Sunday, December 26, 2010
ஆதிபகவன்
அன்பு பிக்சர்ஸ் சார்பில் ஜெ.அன்பழகன் தயாரிக்கும் படம் 'ஆதிபகவன்'. இவர் ஓர் அரசியல் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. அமீர் இப்படத்தை இயக்குகிறார். 'ராம்', 'பருத்திவீரன்' என அருமையான படங்களை இயக்கி சர்வதேச விருதுகளைப் பெற்ற அமீர் 'யோகி'யில் கதாநாயகனாக நடித்தார். இப்போது 'ஆதிபகவன்' படத்தை இயக்குவதில் கவனம் செலுத்துவதால், நடிப்பாசையைச் சற்று ஒதுக்கி வைத்துள்ளார். தற்போது 'ஆதிபகவன்' படப்பிடிப்பில் படு பிஸியாக இருந்துவருகிறார் அமீர். இதில் ஜெயம் ரவி தாடிவைத்து வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். கதாநாயகி நீது சந்திரா. கதாநாயகி நீது சந்திரா சிகரெட்டுக்கு அடிமையானவராக நடிக்கிறார். ஒரு நாளைக்கு கணக்கில்லாமல் சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் கேரக்டர். இதன் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டின் பட்டாயா கடற்கரையில் நடந்து வருகிறது. படத்தின் ஒரு காட்சியில் நீது சந்திரா சிகரெட் குடிக்க வேண்டும். ஆனால், அவரோ நான் சிகரெட்டை கையால்கூட பிடித்ததில்லை என்று அமீரிடம் சாக்கு சொல்ல, அமீர் விடவில்லை. சிகரெட் குடித்தே ஆகவேண்டும் என்று அமீர் கண்டிஷன் போட்டார். பிறகு எப்படி சிகரெட் குடிக்க வேண்டும் என்று நீதுவுக்கு சொல்லிக் கொடுத்தார் அமீர். இந்தக் காட்சிக்கு பல டேக்குகள் வாங்கிய நீது சந்திரா, மொத்தம் 28 சிகரெட்டுக்களை குடித்து முடித்தார். ஒரு வழியாக அமீரும் இந்த எதார்த்தக் காட்சியை சிறப்பான முறையில் எடுத்த திருப்தியில் இருக்கிறார். 'ஆதிபகவன்' காதலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஜனரஞ்சகமான படமாக இருக்குமாம். இதில் தாய்-மகன் சென்டிமெண்டும் உண்டு. ஜெயம் ரவியின் அம்மாவாக சுதா சந்திரன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு: ஆர்.பி.குருதேவ் மற்றும் கே.தேவராஜ். படத்தொகுப்பு: ராம் சுதர்சன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment