Saturday, December 4, 2010

சமையல்:புரோகோலி கூட்டு

சமையல்:புரோகோலி கூட்டு

Diet Food: Broccoli Curry - Cooking Recipes in Tamil
உடம்பைக் குறைப்பதே பெரும்பாடு... என அலுத்துக்கொள்ளும் பெண்மணிகளே... உங்கள் எடையைக் குறைக்க எளிய வழி: வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உணவில் புரோகோலி சேர்த்துக்கொள்ளுங்கள். எடை குறைவதுடன் ஆரோக்கியமாக வாழலாம். அரைவேக்காடுதான் சிறந்தது!
தேவையான பொருட்கள்:
புரோகோலி - 1/4 கிலோ
முழு பூண்டு - 1
வெங்காயம் - 1/4 (சிறிய துண்டு)
எண்ணெய் - 2 அல்லது 3 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
தண்­ணீர் - 1/4 கப்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
* புரோகோலியை அதன் தண்டு உட்பட (அரை இன்ச் அளவில்) நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
* பூண்டு பற்களை வட்ட வடிவில், சற்றுத் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய்விட்டு அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக வதக்கி, பிறகு நறுக்கிய புரோகோலியையும் அத்துடன் சேர்த்து வதக்கவும்.
* புரோகோலியின் பச்சை நிறம் மாறாத அளவுக்கு மட்டும் வதக்கிய பிறகு உப்பு, தண்ணீ­ர் சேர்த்து மூடி போடாமல் வேகவைக்கவும்.
* வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

No comments:

Post a Comment