Saturday, November 13, 2010

தீராத தலைவலியை தீர்க்கும் மாம்பழம்...

தீராத தலைவலியை தீர்க்கும் மாம்பழம்...

Mango Cures severe Headache - Food Habits and Nutrition Guide in Tamil
மாம்பழத்தின் பயன்கள்:
  • மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.
  • தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும்.
  • மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.
  • பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
  • மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.
  • மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.
  • கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
  • மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்தினால் சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.
மாங்காயின் பயன்கள்:
  • இது அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும்.
  • மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் குறைபாடால் ஏற்படும் நோய் குணமாகும்.
  • காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள் உறுப்புகள் பலப்படும்.
  • மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.
  • மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்.

No comments:

Post a Comment