Wednesday, September 29, 2010

வெரைட்டியான வேடங்களில் நடிக்கவே விருப்பம் - மம்தா மோகன்தாஸ்

விரைவுப் பேருந்து

ஸ்ரீ பண்ணாரியம்மன் டீம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பரமேஸ்வரர், வடிவேல் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் படம் 'விரைவுப் பேருந்து'. இதில் நாயகனாக யுவன் நடிக்க, நாயகியாக அபிநிதா நடிக்கிறார். முரளிராஜ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். தொலைக்காட்சித் தொடர்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த செந்தில் சுவாமிநாதன் இப்படத்தின் மூலம் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் கதைக்களம் முழுவதும் ஒரு பேருந்துதானாம். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பேருந்துக்குள்தான் கதை நடக்கிறதாம். சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும் ஒரு விரைவுப் பேருந்தில் அவசரமாக ஓடிவந்து ஏறும் கதாநாயகிக்கு உள்ள பிரச்சினை என்ன? கதாநாயகியின் பிரச்சினைகளுக்கு கதாநாயகன் எவ்வாறு உதவி செய்கிறான் என்பதைத்தான் திரைக்கதை அமைத்து படமாக உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர்: செந்தில் சுவாமிநாதன், தயாரிப்பு: எஸ்.பரமேஸ்வரர், வடிவேல், ஒளிப்பதிவு: ஜி.கே.ரவிக்குமார், கலை: சாய்மணி, படத்தொகுப்பு: பாரிவள்ளல், இசை: ஜீன் ஹுயுரேட். சிதம்பரத்தில் இருந்து சென்னை வரையிலான பயண நேரத்தில்தான் கதை சொல்லப்படுவதால், பவானி, நெடுங்குளம், குமாரபாளையம், பூலாம்பட்டி, சென்னை மற்றும் காஞ்சீபுரம் ஆகியப் பகுதிகளிலும் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். விரைவில் திரைக்கு வர இருக்கிறது 'விரைவுப் பேருந்து'.

வாலிபமே வா

வாலிபமே வா

ஏராளமான தாராள காட்சிகளில் கிரண் நடித்திருக்கும் படம் 'வாலிபமே வா'. ஜோதி பிலிம்ஸ் பேக்டரி சார்பில் கௌரி சங்கர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கிரண் ஜோடியாக அறிமுக நாயகன் கார்த்திக் நடிக்கிறார். கதாநாயகனை விட வயதில் மூத்தவராக, சாஃப்ட்வேர் என்ஜினியர் கேரக்டரில் நடிக்கிறார் கிரண். ஆரம்பத்தில் நட்பாகப் பழகும் நாயகன், கிரணின் அழகில் மயங்கி, அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். நாயகனின் மனதில் உள்ள மோகத்தைப் புரிந்து கொள்ளாமல் நாயகியும் நட்பாகப் பழகுகிறார். நாளடைவில் நாயகனின் சுயரூபம் தெரிய வருகிறது. அவருக்கு அறிவுரை கூறி, காதலுக்கும் காமத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிய வைக்கிறார் கிரண். தலைப்புக்கு ஏற்றபடி, முழுக்க முழுக்க இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. படத்திற்கு ஒளிப்பதிவை கல்யாண் கவனிக்க, சாகித் சாய்ராம் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் நரசிம்மா இயக்குகிறார். 'வாலிபமே வா' விரைவில் திரைக்கு வருகி

வாடா போடா நண்பர்கள்

வாடா போடா நண்பர்கள்

நட்புக்கும், காதலுக்கும் முடிச்சு போட்டு, 'வாடா போடா நண்பர்கள்" என்ற புதிய படம் தயாராகிறது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் மணிகை, இந்த படத்தின் மூலம் இயக்குநராகிறார். மகேஷ் முத்துசுவாமியிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த அருண் ஜேம்ஸ் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார். மும்பை திரைப்பட கல்லூரி மாணவர் சித்தார்த், இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். 'புகைப்படம்" படத்தில் கதாநாயகனாக நடித்த நந்தா, பிரகாஷ்ராஜின் 'இனிது இனிது" படத்தில் நடித்த ஷரன் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த யஷிஹா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, ஸ்ரீநாத், கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். 8 பாய்ண்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சிங்கப்பூரை சேர்ந்த பி.அருமைச்சந்திரன் தயாரிக்கிறார். படம், வேகமாக வளர்ந்து வருகிறது.

வர்மம்

ராக்கி

யுவன் யுவதி

ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞனுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை கருவாக வைத்து, ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, "யுவன் யுவதி" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இளமை ததும்பும் இந்த படத்தில், பரத் ஒரு துள்ளலான வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த ரீமா கல்லிங்கல் அறிமுகம் ஆகிறார். இவர், ஏற்கனவே 3 மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். சந்தானம், சம்பத் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் கதை-வசனம் எழுத, ஜி.என்.ஆர்.குமரவேலன் திரைக்கதை அமைத்து இயக்குகிறார். டாக்டர் வி.ராமதாஸ் வழங்க, ராம் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பைஜா என்பவர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு கடந்த 14-ந் தேதி சென்னையில் தொடங்கி, பழனி, பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் நடைபெறுகிறது. கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு உள்ள வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்யும் படம் இது