Wednesday, September 29, 2010

ஆதிக்கம்

23 வயது இளம் இயக்குநர் அனிஷ் வேறு எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் தனது சினிமா ஆர்வத்தால் இயக்கி வரும் புதிய படம் "ஆதிக்கம்". ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், அரசியல் ஆதிக்கம், ரவுடி ஆதிக்கம் போலீஸ் ஆதிக்கம் என எத்தனையோ ஆதிக்கங்களை நமது ரியல் லைப்பில் பார்த்திருப்போம். அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாகி வருகிறது அனிஷின் 'ஆதிக்கம்'. பாப்புலிஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் நந்தினி, கணேஷ்குமார், ஹேமந்த்குமார் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள். கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கி வரும் அனிஷ் படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக, ஸ்ரீராம் இசையில் 3 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாயகனாக விவின் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் நடிக்கிறார். அவருக்கு ஜோடி நடிகை மேகா நாயர். இவர்களோடு வினோ மற்றும் "கில்லி" முத்துராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 'தொடக்கம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மேகா, தங்கம், பசுபதி மே ராசக்காபாளையம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இப்போது 'ஆதிக்கம்' படத்தில் நாயகியாக நடிக்கிறார். கவர்ச்சி ஆட்டம் போட்டு வந்த தனக்கு இப்படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மேகா. அவரது கேரக்டர் அந்த அளவுக்கு அழகாக வந்திருக்கிறதாம். படத்தின் கதை...? ரவுடிகள் பற்றிய கதைதான். ஆனால் ரொம்பவே வித்தியாசமானது. இதுவரை எத்தனையோ ரவுடியிச கதைகள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், புதிய வெளிச்சத்தில் அவர்களை காட்டி ரவுடியிசம் தொடர்பான புரிதலை ஏற்படுத்தப் போகிறேன் என்கிறார் இயக்குனர் அனிஷ். பல குறும்படங்களை இயக்கிய அனுபவத்துடன் சினிமா பக்கம் வந்திருக்கும் அவர் ஆதிக்கம் படம் பற்றி கூறுகையில், இதுவரை ரவுடிகள் பற்றி நிறைய படங்கள் வந்து விட்டாலும், அவற்றில் பெரும்பாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்பாவிகள் வன்முறை வழியில் போவதாக காட்டப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு மாறாக ரவுடிகள் இஷ்டப்பட்டே தான் வன்முறையை தேர்வு செய்கிறார்கள். தனது படத்தின் மூலம் அதை உணர்த்தப்போவதாக சொல்கிறார். இதற்கு ஏற்றவகையில் ரவுடி கூட்டத்தில் சேரும் அப்பாவி வளர்ந்து தாதாவாகி, எம்.எல்..வும் ஆகி அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வளர்ந்த பிறகு என்ன நடக்கிறது? என்பதை கதையாக அமைத்திருக்கிறாராம். காதல், காமெடி எல்லாவற்றையும் கதையோடு கலந்திருப்பதாக சொல்லும் அனிஷ் படப்பிடிப்பை முழுக்க முழுக்க மக்கள் கூட்டத்தால் விழிபிதுங்கி நிற்கும் சென்னை நகர சந்துபொந்துகளிலேயே எடுத்து வருகிறார் என்பது ஹைலைட். கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்: அனிஷ், தயாரிப்பு: நந்தினி, கணேஷ்குமார், ஹேமந்த்குமார், இசை: ஸ்ரீராம், ஒளிப்பதிவு: சுரேஷ்

No comments:

Post a Comment