Sunday, November 14, 2010

கக்குவான் இருமல் குணமாக

கக்குவான் இருமல் குணமாக

கக்குவான் இருமல் குணமாக
நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு, சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை அரை டம்ளர் கொடுக்க குணமாகும்.
வயிற்று பூச்சிகள் ஒழிய
வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை 2 வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.
மலச்சிக்கல் தீர
பேயன் வாழைப்பழம் தோலுடன் வில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணையில் ஊற வைக்கவும் பாட்டிலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணையுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்.
குழந்தைகளுக்கு கண் சூடுதனிய
நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.
இரத்தத்தை சுத்தப்படுத்த
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தம் ஆகும்.

No comments:

Post a Comment