Friday, January 14, 2011

ஐ.பி.எல். ஊழல்

ஐ.பி.எல். ஊழல்

"அந்த ஆஸ்பத்திரியில பேஷன்ட்டை நல்லா கவனிச்சுப்பாங்களாமே... அப்படியா?" "ஆமா ஊசி போட ஒரு நர்ஸ், தடவிவிட ஒரு நர்ஸ்னு ரெண்டு பேர் இருக்காங்க...!".

"கிரிக்கெட் விளையாடத் தெரியலைனு ஏன் தலைவர் வருத்தப்படறாரு?" "தெரிஞ்சிருந்தா ஐ.பி.எல்-ல ஊழல் பண்ணியிருக்கலாமே!" .

"உங்க வீட்ல தினமும் மனைவி சமையல்தானா?" "எப்படி டாக்டர் கரெக்டா கண்டுபிடிச்சீங்க...?" "தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்னு நீங்கதானே சொன்னீங்க...!".

"டென்ஷனுக்கு மாத்திரை எழுதிக் குடுத்தேனே... அதை ஏன் வாங்கிச் சாப்பிடலை...? "மாத்திரையோட விலையைக் கேட்டாலே, ஒரே டென்ஷனா வருது டாக்டர்!"


"ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் உங்க கணவர் பிழைப்பார்..." "அப்படின்னா, நானும் என் மாமியாரும் ராசியாகிட்டோம்னு அவர்கிட்ட சொல்லிப்பாருங்க டாக்டர்

கல்யாணத் தரகர்

கல்யாணத் தரகர்

"சிஸ்டர்... புதுசா வந்த அந்த பேஷன்ட் எப்படி இருக்காரு?" "நீங்க ஒரு பங்களா கட்டற அளவுக்கு ஏகப்பட்ட வியாதிகளோட இருக்காரு, டாக்டர்..."

"நான் காதலிக்கற பொண்ணை மறந்துட்டு, அவர் சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு மிரட்டறார்..." "யாரு... உங்க அப்பாவா?" "இல்ல... கல்யாணத் தரகர்!"

என்னதான் லோ பட்ஜெட் படம்னாலும், இப்படியெல்லாம் சீன் வைக்கக்கூடாது...!" "என்ன ஆச்சு...?" "வில்லன் சைக்கிள்ல அடிபட்டு சாகறமாதிரி சீன் வருதே... அதைச் சொன்னேன்!"

"அவர் டாக்டரா இருந்து சினிமாவுக்கு வந்தவர்னு எப்படிச் சொல்றே...?" "கிளைமாக்ஸ்ல வில்லனை சாகடிக்கணும்னு சொன்னா, 'வில்லனுக்கு ஆபரேஷன் நடக்கறமாதிரி சீன் வச்சுக்கலாமா'ன்னு கேக்கறார்...!"

"ரயில் விபத்து நடந்ததைப் பார்வையிட நான் போயிருக்க வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்களா?" "இல்லை தலைவரே.... விபத்து நடந்த ரயிலில் நீங்கள் போயிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்!"

108 தையல்

108 தையல்

"நான் பாடம் நடத்தும்போது அவன் ஏன்டா வெளியில போறான்...?" "அவனுக்குத் தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு சார்...!"

"ஏன் எனக்கு விவாகரத்து கிடைக்காதுன்னு சொல்றீங்க...?" "ஒரே நேரத்துல மூணு பேரை விவாகரத்து பண்ணணும்னு சொல்றீங்களே...!"

"கல்யாண மண்டபத்துல ஏன் அவரை எல்லாரும் திட்டறாங்க...?" "வீடியோ எடுக்கறப்ப 500 ரூபா நோட்டை எடுத்துக் காட்டிட்டு, மொய் எழுதறப்ப ஐம்பது ரூபா எழுதினாராம்!"

"வறுமையின் காரணமா நிறைய பொய் சொல்லிட்டேன்னு புலம்பறீங்களே... அப்படி என்ன பொய் சொன்னீர் புலவரே...?" "தங்களைப் புகழ்ந்து ஆயிரக்கணக்கில் பாடல்கள் பாடியதைத் தான் சொல்கிறேன் மன்னா...!"

"டாக்டருக்கு ஏதோ வேண்டுதலாம்..." "அதுக்காக? பேஷன்ட்டுக்கு ஆபரேஷன் பண்ணிட்டு 108 தையல் போடறதெல்லாம் ரொம்ப ஓவர்!"

ஷுகர் செக்கப்

ஷுகர் செக்கப்

''என்ன! உங்க பையனைப் போய் பிரிட்ஜ் உள்ளே உட்கார வெச்சிருக்கீங்க?'' ''அப்பதானே அவன் கெட்டுப் போகாம இருப்பான்.'' 
"என்ன! உங்க பையனைப் போய் பிரிட்ஜ் உள்ளே உட்கார வெச்சிருக்கீங்க?" "அப்பதானே அவன் கெட்டுப் போகாம இருப்பான்." 
"உங்க பையன் படிப்புல இவ்வளவு பெரிய சாதனை செஞ்சதுக்கு நீங்க ஊக்குவித்ததுதானே முதல் காரணம்?" "தப்பா சொல்றீங்க.... பாக்கு வித்துதான் என் பையனை இவ்வளவு தூரம் படிக்க வெச்சேன்!"
"எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணணுமாம்.... டாக்டர் சொல்லிட்டாரு...." "டாக்டர் இருக்கும்போது மேஜர் எதுக்கு ஆபரேஷன் பண்றாரு?"
"என்ன.. உன் கணவர் அடிக்கடி சர்க்கரை டப்பாவைத் திறந்து பார்க்கறாரு...?" "டாக்டர்தான் அவரை அப்பப்ப ஷுகர் இருக்கான்னு செக்கப் பண்ணிக்கச் சொன்னாரு!"

ரயில்வே ஸ்டேஷன்

ரயில்வே ஸ்டேஷன்

"கபாலி.... நீ தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்னு சொன்னேனே.... ஏன் வரலை?" "எந்த ஸ்டேஷன்னு சொல்லாததால, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டேன் ஏட்டய்யா...!"

"வாங்கின காய்கறியை ஏன் அப்படியே வச்சிருக்கே...?" "இத்தனை விலை கொடுத்து வாங்கினதை எடுத்துச் சமைக்க மனசு வரலை!"

"ஆனாலும் அவர் அநியாயத்துக்கு முன்ஜாக்கிரதை பேர்வழியா இருக்கார்..." "என்ன செய்தார்...?" "தனக்கு கொலஸ்ட்ரால் இருக்குங்கறதுக்காக கோயில்ல தேங்காய் உடைக்கறதையே நிறுத்திட்டாரே....!"

"காதலிச்ச உங்களைக் கைவிட முடியலை..." "அதனாலே...?" "கல்யாணம் பண்ணிக்கிட்டு டைவர்ஸ் பண்ணப் போறேன்!"

"என்னய்யா இது... எவ்வளவு குடிச்சாலும் போதையே ஏறலை! தண்ணி நிறைய கலந்துட்டீங்களா....?" "தலைவரே... அது தண்ணி மட்டும்தான்! இப்ப நீங்க பார்ல இல்ல... மீட்டிங்ல இருக்கீங்க!"

மூக்குக்கண்ணாடி

மூக்குக்கண்ணாடி

"வெரிகுட்! நான் சொன்னபடியே ஆறு மாசம் மாடிப்படி ஏறி இறங்காம இருந்ததால, உங்களுக்கு கால் சரியாகிடுச்சு பார்த்தீங்களா?" "ஆமா டாக்டர்! ஆனா, கயிறு கட்டி ஏறி இறங்கத்தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..."

"மன்னர் போதையில இருக்கையில பாடப்போனது தப்பாப் போச்சா.... ஏன் புலவரே?" "குவாட்டருக்கு இயற்கையிலேயே மணம் உண்டா, இல்லையான்னு கேட்கிறார்...!"

"வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது!" "சும்மா அளக்காதே...." "உண்மையாதான் சொல்றேன்... எந்த மாடாவது மூக்குக்கண்ணாடி போட்டிருக்கா.."

"வானம் கூட குடிக்கும் போலிருக்கு.." "எப்படிச் சொல்றீங்க?" "பின்ன! இன்றும் வானம் தெளிவாக இருக்கும்னு ரேடியோல சொன்னாங்களே.."

"என் பிள்ளைக்கு கண்ணைத் திறந்து விட்டவர் அவர்தான்!" அவனோட காலேஜ் புரொபசரா?" இல்லை, அவனுக்கு முடிவெட்டி விட்டவர்

துரு" பஸ்

"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, 'பேசாம' நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!" 'பேசாம' எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

"படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே... ஏன்?" மசாலாப் படமாச்சே.... அதான்!"

"காபி டம்ளரை வாய்கிட்டே வெச்சுக்கிட்டு அவர் என்ன பேசிக்கிட்டிருக்கார்?" "ஆவியோட பேசறாராம்!"

"ஏங்க மதுரைக்கு "துரு" பஸ் இருக்கா?" "இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!"

"போதை ஊசி போடணும் டாக்டர்..." "என்னது... போதை ஊசியா?" "நர்ஸ் கையால ஊசி போட்டுக்கிட்டா, அது போதை ஊசிதான் டாக்டர்..!" அம்பை தேவா, திருநெல்வேலி