Saturday, October 23, 2010

பட்டாசு கொளுத்தும்போது கவனிக்க வேண்டியவை

பட்டாசு கொளுத்தும்போது கவனிக்க வேண்டியவை...

Notice during burning Crackers - Child Care Tips and Informations in Tamil
தீபாவளி ஸ்வீட்டுடன் வரவேற்க:
தீபாவளிக்கு முதல் நாளே தெர்மாகோல் பிளேட்டில் ஒருவர் சாப்பிடும் அளவிற்கான ஸ்வீட்ஸ், காரவகைகளை வைத்து "க்ளீங்க் ஷீட்" ஒட்டி நமுத்துப் போகாதவாறு கவர் செய்துவிட்டால், விருந்தினர் வந்தவுடன் சட்டென்று உபசரிக்க வசதியாக இருக்கும். இதே முறையில் அக்கம் பக்க வீடுகளுக்கு கொடுக்கவும் பேக் செய்யலாம்.
விடுமுறை விடுங்கள்:
நம் வீட்டில் வேலை செய்வோரும் பண்டிகைத் திருநாளைக் கொண்டாட ஆசைப்படுவர். எனவே அவர்களுக்கு அன்று ஒருநாள் விடுமுறை அளித்தால் மிகவும் சந்தோஷப்படுவதோடு மட்டுமின்றி அவர்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பும், மதிப்பும் கூடும். அன்று ஒருநாள் மட்டும் டிஸ்போஸபிள் கப், பிளேட்டை பயன்படுத்துவதால் பாத்திரம் துலக்கும் வேலை மிச்சமாகும்.
டிஷ்யூ பேப்பர் அவசியம்:
பொரித்த மிக்ஸரை வடிதட்டில் கொட்டியதோடு விடாமல், பிறகு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய்ப் பசை போனவுடன் பாலிதீன் கவரில் போட்டு வைத்தால் மிக்ஸரில் நீண்ட நாட்கள் வரை எண்ணெய்க் கமறல் வராது.
பட்டாசுகளை பாதுகாப்பாக வையுங்கள்:
எந்தவகை பட்டாசாக இருந்தாலும் தீப்பிடிக்க முடியாதபடி வையுங்கள். தவிர எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி, ஊதுவத்தி ஆகியவற்றை பட்டாசை விட்டு பத்தடி தள்ளியே வையுங்கள்.
மினி டிரெஸ்:
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது காட்டனால் ஆன ஷார்ட்டான உடைகளை அணிந்துகொள்வது நல்லது.
பாம்பு மாத்திரை வேண்டாமே:
பாம்பு மாத்திரையின் புகை பெரும்பாலான குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டு பண்ணும் அபாயம் உள்ளது. எனவே பாம்பு மாத்திரையைத் தவிர்க்கவும். அப்படியே குழந்தைகள் ஆசைப்பட்டாலும் கர்ச்சிஃப்பால் மூக்கை மறைத்துக்கொண்டு கொளுத்தச் சொல்லுங்கள்.
குழந்தைகளை பாதுகாக்க கூடவே இருங்கள்:
குழந்தைகள் பெரிய வெடிகளை வெடிக்கும்போது கண்காணிப்புடன் வெடிக்க செய்ய வேண்டும். அல்லது கூடியவரை பெரிய வெடிகளைத் தவிர்ப்பது நல்லது. சமயத்தில் புஸ்வானம் கூட வெடிக்கும் அபாயம் உள்ளதால் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கண்டிப்பாக கூடவே இருங்கள். எனவே, குழந்தைகளிடம் அதைபற்றி முன் கூட்டியே சொல்லி எச்சரிக்கையாய் இருக்க சொல்ல வேண்டும்.
பக்கெட் நிறைய மண்:
ஒரு பக்கெட் நிறைய மணல்கொட்டி அதில் கம்பி மத்தாப்பு கொளுத்தியவுடன் கம்பிகளைப் போடச் சொல்லுங்கள்.
வயதானவர்களை சந்தோஷப்படுத்துங்கள்:
வயதானவர்களுக்கு தீபாவளி பண்டிகையின்போது ஸ்பெஷல் கேர் எடுத்துக்கோங்க. டயபடீஸ்காரர்களுக்கு கவனமாக சுகர்ஃப்ரீ போட்டு ஸ்வீட் செய்து அவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்.
எண்ணெயை குறையுங்கள்:
நாற்பது வயதுக்கு மேலான உறவினர்களை ரொம்ப கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆயில் கம்மியாக, வெஜிடபுள் சாலட் அதிகமாக இருக்குமாறு பார்த்துப் பரிமாறுங்கள்.
பெண் குழந்தைகளுக்கு மேக்கப்!
பேபி பவுடர், பேபி லிப்ஸ்டிக் என்று கிடைக்கிறது. அதைக்கொண்டு பெண் குழந்தைகளுக்கு பண்டிகை சமயங்களில் மேக் அப் செய்யலாம்.
சருமப் பாதுகாப்புக்கு தொள தொள உடை!
குழந்தைகளுக்கு நைலான் மெட்டீரியலை தவிர்ப்பதோடு, கொஞ்சம் லூசாகவும் பட்டாசு வெடிக்கும்போது உடை அணிவியுங்கள்! ஏதாவது தீக்காயம் ஏற்பட்டால்கூட குழந்தையின் சருமத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்படாது.
லிக்யூடாக எடுத்துக்கோங்க!
பண்டிகை பரபரப்பில் வீட்டில் இருப்பவர்களை விழுந்து விழுந்து கவனித்துவிட்டு நீங்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்காதீர்கள். க்ளுகோஸ் அல்லது எலுமிச்சை ஜூஸ் என்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஒரு டம்ளர் குடித்து விட்டு தெம்பாக வேலை செய்யுங்கள்.
சந்தோஷத்தைத் தேடுங்கள்:
பண்டிகையன்று வயதானவர்கள் காப்பகம், அனாதைக் குழந்தைகள் இல்லம் என்று உங்கள் குழந்தைகளுடன் விசிட் அடித்து, பலகாரம், பட்டாசு, உடைகள் என கொடுத்து சந்தோஷத்தைப் பெறுங்கள்.
சுட்ட எண்ணெய் வேண்டாமே!
பலகாரங்கள் சுட்ட எண்ணெயை மீண்டும் பலகாரங்கள் செய்யலாம் என்ற எண்ணத்தில் சேமித்து வைக்காமல் உடனடியாக தாளிப்பதற்கு உபயோகப்படுத்தி விடவும். மறுபடியும் உபயோகப்படுத்தினால் எண்ணெய் கெட்டியாகி நம் உடம்பில் கொலஸ்ட்ராலாக தங்கி விட வாய்ப்புள்ளது.
அஜீரணமா?
அளவுக்கு அதிகமாக பலகாரம் சாப்பிட்டு அஜீரணம் ஏற்பட்டால் மோரில் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துக் குடித்தால் உடனே குணமாகும்.
குளிர்ந்த நீரில் கழுவுங்கள்:
பரபரப்பாக சமைக்கும் போது கையில் ஆவி அடித்து விட்டாலோ, பாத்திரத்தின் சூடு பட்டாலோ சூடுபட்ட இடத்தை உடனடியாக குளிர்ந்த நீரில் கையை விடுங்கள்.
உடனே கவனியுங்கள்:
பலகாரம் செய்யும் போது ஆடையில் எண்ணெய்க்கறை படிந்துவிட்டால் உடனே சிறிது ஷாம்பூவைத் தடவி அந்த இடத்தோடு அலசி விடவும்.
பாதங்களை பத்திரப்படுத்துங்க!
பெரியோர் முதல் சிறியோர் வரை பட்டாசு வெடிக்கும்போது காலணிகளை அணிந்து கொண்டால் பாதங்களை தீக்கங்குகளிலிருந்து பாதுகாக்கலாம்.
தேனும், சோற்றுக்கற்றாழையும் இருக்கலாம்:
தேனை தீக்காயம் பட்டவுடனே தடவினால் கொப்புளம் எழும்பாது. காயமும் விரைவில் ஆறும். சோற்றுக்கற்றாழை சோற்றை தீக்காயத்தின் மேல் வைத்தாலும் எரிச்சல் தெரியாமல், குளிர்ச்சியாக இருக்கும்.
வீட்டிலேயே இருங்கள்:
வயதில் பெரியோர்கள் ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் தீபாவளியின் போது வெளியில் செல்வது, புகை மிகுந்த இடங்களில் இருப்பதைத் தவிர்ப்பது நுரையீரலுக்கு நல்லது.
இயற்கை நிறம் பெஸ்ட்!
பிரிசர்வேட்டிவ்,ஃபுட்கலர் போன்றவை ஆரோக்கியத்தை கெடுப்பவை. எனவே இவைகளில்லாமல் செய்த உணவுகளையே தேர்ந்தெடுங்கள். கேரட், பீட்ரூட் போன்ற இயற்கையான மற்றும் தாவர ஃபுட்கலர்களை பயன்படுத்தி ஸ்வீட் செய்யுங்கள்.
ஃபிளாட்ஸில் வசிப்பவர்களின் கவனத்திற்கு:
ஃபிளாட்ஸில் வசிப்பவர்கள் வராந்தாவில் அலுமினியம் பக்கெட்டில் தண்ணீர் வைத்து தம் பிள்ளைகளிடம் எரிந்து முடிந்த கம்பிமத்தாப்பு, பென்சில் வெடி, சாட்டை போன்றவற்றை அதில் போடச் சொன்னால் யார் காலிலும் தீக்காயங்கள் ஏற்படாது அல்லவா?
கை கழுவியாயிற்றா?
குழந்தைகள் பட்டாசு வெடித்ததும் கைகளை நன்கு கழுவிச் சுத்தம் செய்த பின்பே உணவுப்பண்டங்களை உட்கொள்ளச் சொல்லவும்.
கரிசனம் காட்டுங்கள்!
தினமும் அதிகாலையிலிருந்து இரவு வரை சமையலுடன் போராடும் மனைவி மற்றும் தாயின் மேல் சற்று கரிசனம் கொண்டு பண்டிகைத் திருநாளன்று பிள்ளைகளும் கணவன்மாரும் கொஞ்சம் கூடமாட வேலைகளைச் செய்து அவர்களது வேலைப் பளுவைக் குறைக்கலாமே.
நிழலில் உலர்த்துங்கள்:
அதிகமாக வியர்வை வழியும் பிரச்சினை உள்ளவர்கள் தாம் கட்டியிருக்கும் பட்டுப் புடவையை அவிழ்த்த பிறகு இடுப்பு, கழுத்துப் பகுதியில் வரும் ஜரிகையை நன்கு ஈரத்துணி கொண்டு துடைத்து நிழலில் உலர்த்தி பின் மடித்து வைக்கவும்.
உறவுகள் மேம்பட:
தனிக்குடித்தனமாக வாழ்பவர்கள் பண்டிகையன்றாவது உற்றார், உறவினருடன் ஒன்றுகூடி கொண்டாடினால் அவர்களது வாரிசுகளுக்கு உறவினர்கள் மீது பற்றுதல் ஏற்படும்.
அன்பளிப்பு கொடுங்கள்:
நமக்காக வருடம் முழுவதும் உழைக்கும் தபால்காரர், கொரியர்காரர், காஸ் டெலிவரி ஆள், வாட்ச்மேன், கூர்க்கா, கார் டிரைவர் போன்றவர்களுக்கு பண்டிகையை முன்னிட்டு வீட்டில் செய்தோ அல்லது கடையில் வாங்கியோ இனிப்பு, கார வகைகளுடன் ஒரு சிறு தொகையை அன்பளிப்பாக வழங்கினால் அவர்கள் மனதிருப்தியோடு உங்களை வாழ்த்திச் செல்வார்கள்.
உப்பு கலந்த நீர்:
தீ பட்டுவிட்டால் அந்த இடத்தில் உப்பு கலந்த நீரைப் பிழிந்தால் வடு ஏற்படாது.
லேகியத்துக்கு பதில்!
தீபாவளி லேகியம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. தனியாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சி, மிளகு, சிரகம் அரைத்து வடிகட்டி லேசாக சுடச் செய்து அதில் எலுமிச்சம்பழம் பிழிந்து சிறிது சர்க்கரை, தேன் கலந்து ஒரு டம்ளர் குடித்து 10 நிமிடம் கழித்து காபி சாப்பிடலாம். பித்தம் நீங்கி ஜீரணசக்தி அதிகரிக்கும்.
பயன்படுத்தக் கூடாதது:
தீப்புண்ணில் எண்ணெய், ஆயில்மெண்ட், இங்க் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

No comments:

Post a Comment