Friday, November 5, 2010

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர்
 
சோழநாட்டுச் சிர்காழியிலே, அந்தணர்குல, கவுணியர் கோத்திரத்திலே சிவாபதஇருதயர், பகவதி அம்மைக்கு மகனாகப் பிறந்தவர் திரு ஞானசம்பந்தர்.
மூன்று வயதிலேயே... ஈசனருள் பெற்று... சிர்காழிக் குளக்கரையிலே ஞானப்பால் பருகிய திருவருட்செல்வர்.
திருக்கோலக் காவில் பொற்றாளம் (ஈசனிடம்) பெற்றவர். திரு நீலகண்டப்பதிகம்பாடி, அடியவர்க்கு வந்த கடுமையான நளிர் சுர நோயைத்தீர்த்தவர்.
திருக்நெல்வாயில் சிவனருளால் முத்துச்சிவிகையும், பட்டீஸ்வரத்திலே முத்துப் பந்தரும் பெற்றவர்.
பதிகங்களைப்பாடி, பாம்பு கடித்து மாண்ட வணிகனைக் காத்தது, சிவனிடமே படிக்காசு பெற்றது, மக்களின் பஞ்ச வறுமைகளைப் போக்கியது... திருமறைக் காட்டிலே (வேதாரண்யம்) கோயில் கதவு அற்புதம், மதுரையிலே அனல் வாதம், புனல் வாதம் புரிந்து " மந்திரமாவதுநீறு" பாடி பாண்டியனின் வெப்பு நோயையும், பலமதத்தவரின் விதண்டாவாதங்களையும் வென்றவர்.
சென்னைத் திருமயிலையிலே மாண்டு போன சிவநேசச்செட்டியார் மகளின் எலும்புகளை " மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை " எனும் பதிகம் பாடி " பூம்பாவைப் " பெண்ணாக்கி " மகளே!" என்றழைத்த மாசில்லாத் தவசிலர்.
ஆச்சாபுரத்திலே திருமணம் செய்து கொண்டு, " காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி " எனும் பதிகத்தைப் பாடி முடித்து மணப்பந்தலிலேயே ஒளிச்சுடராய் மாறி, இறைவனோடு இரண்டறக் கலந்தவர் திருஞான சம்பந்தமூர்த்தி.
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை,
கண்ணில்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.
- சம்பந்தர் தேவாரம்.

No comments:

Post a Comment