Thursday, November 11, 2010

இளமையாகவே இருக்க இனிய மருந்து!

இளமையாகவே இருக்க இனிய மருந்து!

டாக்டர் ப.உ.லெனின் Best medicine to be ever youth - Food Habits and Nutrition Guide in Tamil
தலைக்கு மேல் வேலை; அதை எப்படி செய்து முடிப்பது? என்ற கவலை; வீட்டில் மற்றும் வெளியிடங்களில் ஏற்படும் சில சிக்கல்கள்; இதனால் ஏற்படும் மன அழுத்தம்; ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்துப் போராடலாமா? அல்லது எழுந்து ஓடலாமா? என்ற கேள்வி!
இதையே ஆங்கிலத்தில் "ஸ்ட்ரெஸ்" (STRESS) அல்லது "டென்ஷன்" என்று கூறுகிறோம். மன அழுத்தம் ஏற்படும் காலங்களில் மூளையிலிருந்து "பிட்யூட்டரிக்கு சடஸால்" என்ற பொருளை ரத்தத்தில் தள்ள செய்தி வருகிறது. இதன் பிறகு உடலில் உள்ள மற்ற உறுப்புகள், நிலைமையைச் சமாளிக்கத் தயாராகின்றன. "அட்ரீனல்" என்னும் ஹார்மோன் நம் நாடித் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க செய்து நாம் மூச்சு விடுவதற்குக் கஷ்டப்படும் ஓர் நிலைமையை ஏற்படுத்துகிறது. பல நேரங்களில் டென்ஷன் ஏற்படுத்தும் அந்த செயல் ஒன்றுமில்லாமல் மறைந்து விட்டாலும், உடலினுள் ஏற்பட்ட மாறுதல்களும் தங்கி விடுவதுண்டு. இதுவே மீண்டும் மீண்டும் நடைபெறுமேயானால் அது ரத்த அழுத்த நோயையும், நரம்புத் தளர்ச்சியையும் ஏற்படுத்தி இளமையைக் கெடுத்துவிடுகின்றன.
கவலை வேண்டாம்:
"என்னது? கவலையில்லாத வாழ்க்கையா? என்ன விளையாடுகிறீர்களா?" என்று கேட்காதீர்கள். வாழ்க்கையும், கவலையும் நகமும், சதையும் போல! கவலையைச் சமாளித்து, நம் உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தவிர்த்து இளமையாக வாழ வேண்டும்.
டென்ஷன் நமக்கு மூன்று நிலைகளில் ஏற்படுகிறது.
இதில் முதல் நிலை -பயம். இரண்டாம் நிலை -சமாளித்தல் அல்லது எதிர்த்தல். மூன்றாம் நிலை -முதல் இரண்டு நிலைகளைத் தாண்டி வருவதினால் ஏற்படும் அயர்ச்சி. இந்த மூன்று நிலைகளில் எந்த ஒரு நிலையை நாம் தடுத்து நிறுத்தினாலும் அது நம் உடல் நிலையைப் பாதிக்கக்கூடும். அதற்கு பெரும்பாலும் நேரமின்மை காரணமாகிறது.
தியானம்:
"ஸ்ட்ரெஸ்"ஸினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்தால் அது நம் இளமையைப் பாதுகாக்கப் பெரிதும் உதவுகிறது. இதைச் செய்ய பலமுறைகளைக் கையாளலாம். அதில் முக்கியமானது தியானம். ஆழ்ந்த நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும்பொழுது கீழான குணங்கள் நம்மைவிட்டு அகல்கின்றன. நிரந்தர அமைதியைத் தந்து முகத்திற்கு ஒரு தனி தேஜஸை ஏற்படுத்துகிறது. பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத இந்த வசீகர அழகை முயற்சியால் அடையலாம். புற்றீசல் போல் பெருகிவரும் தேவைகளினால் உண்டாகும் பிரச்சினைகளால் நம் அழகும், ஆரோக்கியமும் குலையாமல் இருக்கச் செய்யலாம்.
தியானம் என்பது எங்கோ காட்டிற்குச் சென்று உட்கார்ந்து செய்வது அல்ல. நம்முள் இருக்கும் ஒப்பற்றச் சக்தியை எழுப்புவதற்குச் செய்யும் முயற்சிதான் அது. எந்த ஒரு விஷயத்தையும் பிரச்சினையாகக் கருதி அல்லல் படாமல் அன்றாடம் நடக்கும் ஒரு சாதாரண செய்கை எனவும், அதை நம்மால் சுலபமாகச் சமாளித்து விட முடியும் என்ற நம்பிக்கையையும் தியானம் நமக்குக் கற்பிக்கிறது. சந்தடிகள் அற்ற விடியற்காலை அல்லது இரவு வேளைகளே தியானம் செய்வதற்கு உகந்த நேரம்.
உணவு:
உள்ளத் தூய்மைக்கு உணவுத் தூய்மை அவசியம். அளவோடு தாவர வகை உணவுகளை உண்பது சிறந்தது என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
நீச்சல், ஓடுதல், விளையாடுதல் (போட்டிக்காக அல்ல), உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் செய்ய பழகிக் கொள்வது அவசியமாகும். இதை அன்றாடம் செய்பவர்களுக்கு டென்ஷனை சமாளிக்கும் சக்தி ஏற்பட்டு, உடல் உறுதிப்பட்டு விடுகிறது. தோலில் எளிதில் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை. டென்ஷனால் ஏற்படும் நரை போன்வற்றையும் ஓரளவுக்கு தவிர்த்து இளமையாக வாழலாம்.
வீட்டில் ஏற்படும் டென்ஷன் பெரும்பாலும் நாம் செய்யும் காரியங்களை செவ்வனே செய்யாததினால் ஏற்படுகிறது. நமக்கு ஏற்படும் பிரச்சினைகளில் பெரும்பாலானவற்றினை சில ஒழுங்கு முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் தவிர்க்கலாம். அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்மணிகள், தங்களது வேலைகளை வீட்டிற்குக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் செய்ய வேண்டிய அன்றாட வேலைகளையும், திடீரென்று தோன்றும் வேலைகளையும் மறந்து விடாமல் இருக்க, அதை ஒரு இடத்தில் எழுதி வைத்துக் கொள்ள பழகுங்கள். இதற்காக ஒரு போர்டை (பலகை) பயன்படுத்தலாம். அதில் மற்றவர்களையும், அவர்கள் கொடுக்கும் அன்றாட வேலைகளையும் எழுதி வைத்துவிட்டு போகச் சொல்லுங்கள். இதனால் எதையாவது மறந்து விட்டோமா? என்ற கவலையோ, டென்ஷனோ ஏற்படாது. வீட்டில் ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு நாள் என்று தூய்மைப்படுத்த திட்டமிட்டால், "வீடு குப்பையாக உள்ளதே, இதை எப்படி சீர்படுத்துவது?" என்று அங்கலாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படாது. உங்களால் செய்ய முடியாத வேலைகளைத் தலையில் போட்டுக் கொண்டு எப்படிச் செய்வது? என்ற கவலையையும், டென்ஷனையும் தவிர்க்கலாம். முடிந்ததை செய்யலாம், அதன் மூலம் நிறைவு பெறலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலை ஏற்படுவதினால் தலைவலி, உற்சாகமின்மை ஆகியவை உண்டாவது இயல்பே. இதைத் தவிர்க்க அவர்கள் அவ்வப்பொழுது உடலுக்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வது அவசியம். எந்த வேலையைச் செய்யும்போதும் அதை ஆசையோடும், ஆவலோடும் செய்யுங்கள். இதனால் டென்ஷனையும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம்.
மனநலம் என்பது வேறு:
மனநலம் என்பது சில விதிமுறைகள் மற்றும் அம்சங்களை உள்ளடக்கியதாகும். அது விரும்பப்படும் ஒன்றாகும். அதை முயற்சி செய்து அடையலாம். மாறுபடக் கூடியதல்ல. உலகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் ஏற்புடையதாக இருக்கும். எல்லாக் கலாச்சாரமும், வழிமுறை, நடைமுறை பிராந்தியம் என்ற அனைத்திற்கும் பொதுவானதாகும்.
ஆனால் நார்மல் என்பது பெரும்பான்மையை வைத்து முடிவுச் செய்யக் கூடிய ஒன்றாகும். சௌகரியத்தை வைத்து, வசதியை வைத்து, ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். எனவே நார்மல் மாறுபடக் கூடியதாகும்; வேறுபடக் கூடியதாகும்.
அது பற்றி விரிவாக பார்ப்போம்:
1. தன்னைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
2. ஏனையரோடு சுமூகமாக உறவாடத் தெரிந்திருத்தல்.
3. செய்கைகள் அனைத்தும் தனக்கும், மற்றவருக்கும் பயன்படுவதாக இருத்தல்.
இந்த மூன்று அம்சங்களும் மனநலத்தின் அடிப்படைத் தேவைகளாகும். யார் ஒருவர் மேற்கூறிய மூன்று அம்சங்களையும் பெற்றிருக்கிறார்களோ அவர்களை மனநலம் உள்ளவர்களாக ஏற்றுக் கொள்ளலாம்.
யார் ஒருவருக்கு தன்னைப் பற்றி தெரிந்திருக்கவில்லையோ அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று உறுதியாகக் கூறலாம். ஒருவரின் செய்கை அல்லது காரியம் அவருக்கோ, மற்றவர்களுக்கோ சங்கடத்தையும், சஞ்சலத்தையும் விளைவிக்குமேயானால் நிச்சயம் அந்த நபர் மனநல பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார் என்று உறுதியாகக் கூறலாம்.
இந்த ஆதார அடிப்படைகளை பாதுகாத்து வந்தோமேயானால் அனைவரும் மனநலத்தோடு, மகிழ்ச்சியோடு வாழ வழிவகை கிடைக்கும். இப்படிப்பட்ட மனதை புறந்தள்ளிவிட்டு மருத்துவம் செய்ய முடியாது என்பதுதான் ஹோமியோ தத்துவம். மருத்துவரிடம் உங்கள் மனதைச் சொல்லுங்கள்.
டென்ஷனால் உடலில் பல உபாதைகள் ஏற்படுகின்றன. உபாதைகள் இளமையை அழிக்கின்றன. ஆகவே நாம் உபாதைகளைத் தவிர்த்து இளமையோடும், புத்துணர்ச்சியோடும் வாழ்வது நம் கையில்தான் இருக்கிறது. மனதில்தான் இருக்கிறது மனதால் உடலில் வரும் நோய்களுக்கும், பயம், பதட்டம், பரபரப்பு ஆகியவற்றை குறைக்கவும், குணப்படுத்தவும் ஏராளமான ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. இம்மருந்துகள் நோயை பக்கவிளைவுகள் இன்றி கட்டுப்படுத்துகின்றன என்பது சிறப்பு அம்சமாகும்.

No comments:

Post a Comment