Tuesday, November 9, 2010

குழந்தைகளை சரியான விதத்தில் வளர்ப்பதெப்படி?

குழந்தைகளை சரியான விதத்தில் வளர்ப்பதெப்படி?

How to develop a child in right way? - Child Care Tips and Informations in Tamil
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தாயின் பொறுப்பு மிக முக்கியம், அவசியமானதும்கூட. கர்ப்பிணித் தாயின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் அமையும் என்பதால், பேறுகாலத்தின் போது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை செய்ய வேண்டும்.
* வழக்கத்தை விட, ஒன்று அல்லது இரண்டு முறை கூடுதலாக சாப்பிட வேண்டும்.
* பழங்கள், கீரைகள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* உங்கள் குழந்தைக்கு பாலூட்ட ஆயத்தாமாகுங்கள்; அதற்கு தடையாக ஏதேனும் பிரச்சினை இருக்குமென்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
தாய்ப்பால்:
* உங்கள் குழந்தைக்கு பெரிதும் நன்மை பயக்கக்கூடியது தாய்ப்பால்தான்; அது கடவுள் உங்கள் குழந்தைக்கு வழங்கியது.
* குறித்த கால அளவுக்கு முன்னர் பிரசவித்த தாயின் பால், குறித்த காலம் நிறைவடைந்த தாயின் பால், இவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் வித்தியாசப்படும்.
* தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அதிக புத்திசாலித்தனமும் மூளை வளர்ச்சியும் உடையவர்களாக இருப்பர்.
* வயிற்றுப்போக்கு, மூச்சுப் பிரச்சினைகள், காதில் வரும் நோய்களின் தொற்று போன்றவற்றை எதிர்க்கக்கூடிய சக்தி பெற்றிருப்பர்.
* ஒவ்வாமை என்ற அலர்ஜி ஏற்பட வாய்ப்பு குறைவு.
* வளரும்போது அதிக எடை மற்றும் இரத்த திசுக்களில் பாதிப்பு (Arteries) ஏற்பட வாய்ப்பு குறைவு.
* தாய்ப்பால் அளிப்பது பாலூட்டும் தாய்க்கும் நன்மை பயக்கும். பிள்ளை பேற்றுக்குப் பின்னர் கருப்பை பழைய அளவை பெறவும், கருக்குழாய் மற்றும் மார்பகங்களில் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பைத் தடுக்கவும், உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும் தாய்ப்பால் கொடுப்பது உதவும். பாலூட்டுவதே உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நெருக்கமான உறவை வளர்க்க உதவும் முதல் காரணி.
தாய்ப்பால் ஊட்டும் முறைகள்:
* பிறந்து ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை மட்டுமே அளிக்க வேண்டும். அதனுடன் வேறு எந்த உணவையும் கண்டிப்பாகக் கொடுக்கக்கூடாது. தண்­ரும் கொடுக்கக்கூடாது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும், மருந்து அல்லது வைட்டமின் சத்து மருந்து ஆகியவற்றை கொடுக்கலாம்.
* சுகப்பிரசவம் அடைந்தோர் அடுத்த அரைமணி நேரம் கழித்தும், அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடந்தால், நான்கு மணி நேரம் கழித்தும் பாலூட்ட ஆரம்பிக்கலாம். அதற்கு முன் குழந்தைக்கு சர்க்கரை தண்ணீ­ர், கழுதைப்பால் இவற்றை கொடுக்கக்கூடாது. பிரசவத்திற்குப் பின் முதல் இரண்டு முதல் நான்கு நாட்களில் வரும் தாய்ப்பால் அடர்த்தியாக இருக்கும். இது புரதச்சத்தும், நோய்த் தொற்றை தடுக்கும் சத்தும் நிறைந்தது. ஆகவே, அதை குழந்தைக்கு கொடுக்கத் தவறக்கூடாது.
* தேவைப்படும்போதெல்லாம் பாலூட்டலாம். தாய்ப்பாலிலேயே தேவையான சக்தி, ஊட்டச்சத்து மற்றும் நீர் இருப்பதால், வெப்பமான காலநிலைகளிலும் இவ்வாறே செய்யலாம்.
* பாலூட்டும் தாய், வேலைக்குச் செல்பவராக இருந்தால், அலுவலகம் செல்லும் முன்னரும், வந்த பின்னரும், இரவில் தேவைப்படும்போதும் மற்றும் விடுமுறை நாட்களிலும் தவறாது பாலூட்ட வேண்டும். வேலைக்குச் செல்லும்போது சுத்தமான கலன் ஒன்றில் தாய்ப்பாலை சேகரித்து, கிண்ணம், கரண்டி மற்றும் சங்கு (Paladai) மூலம் குழந்தைக்குக் கொடுக்கலாம். புட்டி மூலம் ஊட்டுவதைத் தவிர்க்கவும்.
* குழந்தை நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள்:
ஆறாம் மாதத்திலிருந்து திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதனுடன், குழந்தை விரும்பும்போதெல்லாம் தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும். ரவை, மசித்த சாதம், பாயாசம், தானியங்களின் கஞ்சி இவற்றை சர்க்கரை, வெல்லம் மற்றும் எண்ணெய், நெய் சேர்த்து சமைத்துக் கொடுக்கலாம். காய்கறிகளை சமைத்து கொடுக்கலாம். முதலில் ஒன்று அல்லது இரண்டு மேசை கரண்டிகளில் ஆரம்பித்து, ஒன்று முதல் மூன்று சிறு கிண்ண அளவு வரைக்கும் ஊட்டலாம்.
ஏழு முதல் ஒன்பது மாதங்கள்:
வீட்டில் சாப்பிடும் சாதாரண உணவு வகைகளை சற்று மசித்து கொடுக்கலாம். அவற்றுடன் வகைக்கு ஏற்ப சர்க்கரை, வெல்லம், எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவை ஊட்டலாம். பின்னர் வெள்ளை கருவையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்கள்:
வீட்டில் சமைக்கும் உணவுகளை கொடுக்கலாம்.
ஒன்று முதல் இரண்டு வயது வரை:
குழந்தை விரும்பும் பொழுது தாய், பாலூட்டலாம். மற்றபடி, வீட்டில் சமைக்கும் உணவை ஒன்றரை கிண்ணம் அளவில் ஒரு நாளில் ஐந்து முறை கொடுக்கலாம். குழந்தை சாப்பிட தனி தட்டு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். சாப்பிடும் முன்னர், சோப் உபயோகித்து நன்றாக நீரினால் கழுவ வேண்டும். குழந்தை சாப்பிடும்போது, பக்கத்தில் உட்கார்ந்து, ஊக்குவியுங்கள்.
இரண்டு வயதுக்கு மேல்:
வீட்டில் சமைக்கும் உணவினை மூன்று வேளைக்குக் கொடுங்கள். அதனுடன் இருவேளைகளுக்கு வாழைப்பழம், பிஸ்கட் போன்ற சத்துள்ள சிறுஉணவுகளை கொடுக்கலாம். குழந்தைக்கு உணவு பரிமாறும் முன்னர் உங்கள் கைகளை சோப் உபயோகித்து கழுவுங்கள். உணவு உண்ணும் முன்னர், கைகளை சோப் உபயோகித்து நன்றாக நீரினால் கழுவ வேண்டும் என்பதை குழந்தைக்கு கற்று கொடுங்கள். குழந்தை நோய்வாய்ப்பட்டு குணமானதும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு கூடுதலாக உணவு கொடுங்கள். நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது, திரவ உணவுகளை அதிகமாகக் கொடுங்கள். மருத்துவர் அறிவுறுத்தும் கால அட்டவணைப்படி, தடுப்பு ஊசிகளைப் போடுங்கள்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால்:
தொடர்ந்து பாலூட்ட வேண்டும். வீட்டில் கிடைக்கும் திரவ உணவுகளை கூடுதலாக வழங்கலாம். உடலின் நீர் இழப்பை சரிக்கட்டும் கரைசலை (Oral Rehydration Solution) தயாரித்துக் கொடுக்க வேண்டும்.
கரைசலை (ORS) தயாரிக்கும் முறை:
கைகளை நன்கு கழுவிய பின்னர், இதற்கான பொடி அடங்கிய பொட்டலத்தைப் பிரித்து, அனைத்தையும் சுத்தமான பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ளவும். காய்ச்சி, ஆறிய நீரை 1 லிட்டர் எடுத்து, அதை பாத்திரத்தில் ஊற்றி, அனைத்து பொடியும் கரையும்படி நன்கு கலக்கவும். இப்படி தயாரித்த கரைசலை 24 மணி நேரத்துக்குள் உபயோகித்துக் கொள்ளவும். மறுநாளுக்கு புதிதாகத் தயாரிக்க வேண்டும். 24 மணி நேரத்துக்குப் பின்னர் மீதியாகும் கரைசலை திரும்ப உபயோகிக்கக்கூடாது.
* இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைக்கு, ஒவ்வொரு முறை வயிறு கழிந்த பின்னரும் 50 முதல் 100 மி.லி. அளவு கரைசலை மேசை கரண்டி மூலம் ஊட்டலாம்.
* இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 100 முதல் 200 மி.லி. கரைசலைக் கொடுக்கலாம்.
* பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேவைப்படும் போதெல்லாம் கொடுக்கலாம்.
* வயிற்றோட்டம் நின்றவுடனேயே, இந்தக் கரைசலை கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும்.
வீட்டில் தயாரிக்கக்கூடிய திரவக்கரைசல்கள்:
* ஒரு லிட்டர் நீரில் எட்டு மேசைக் கரண்டி அளவு சர்க்கரை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி அளவு உப்பை கரைத்து கிடைக்கும் கரைசல்.
* சாதம் வடித்த நீரில் உப்பை கரைத்து கிடைக்கும் கரைசல், உப்பு கலந்த லஸ்ஸி, தேங்காய் தண்ணீ­ர், சூப், பருப்பு நீர்.
* வயிற்றோட்டத்தின்போது, உப்பு கலக்காத குளுக்கோஸ் தண்ணீ­ர், சர்க்கரை கலந்த பழச்சாறு, சோடா மற்றும் புட்டிகளில் கிடைக்கும் குளிர்பானங்கள், தேநீர் போன்றவற்றை குழந்தைக்குத் தரக்கூடாது.
* குழந்தை தொடர்ந்து பால் அருந்த மறுத்தால் அல்லது மிகக்குறைவாக அருந்துவதோடு, இரத்தமாக வயிறு கழிதல், காய்ச்சல் இவற்றால் அவதிப்பட்டால், மருத்துவரை அணுகவும்.
தடுப்பூசிகள் போட்ட பின்னர் கவனிக்க வேண்டியவை:
* BCG தடுப்பூசி போடப்பட்ட பின்னர், இரண்டு வார காலத்துக்குள் சிறிய வீக்கமும் புண்ணும் ஏற்படலாம். இதற்குச் சிகிச்சை தேவையில்லை. தானாகவே சரியாகி விடும்.
* DPT ஊசிக்குப் பின்னர், காய்ச்சலும், வலியும் வரலாம். இதற்கு சாதாரண காய்ச்சல் மருந்து (Paracetamol) கொடுத்தால் போதும்.
* சின்னம்மை (Measles) தடுப்பு ஊசிக்குப் பின்னர், காய்ச்சலும், மிகச் சிறிய தடுப்புகளும் உருவாகலாம். இதற்கு சாதாரண காய்ச்சல் மருந்து கொடுத்தால் போதும்
* DT ஊசிக்குப் பின்னர், காய்ச்சல் வரக்கூடும். இதற்கு சாதாரண காய்ச்சல் மருந்து கொடுத்தால் போதும்.

No comments:

Post a Comment