Thursday, November 4, 2010

உலகப் பார்வை: இலங்கை மீது ஜப்பானுக்கு என்ன கவலை?

உலகப் பார்வை: இலங்கை மீது ஜப்பானுக்கு என்ன கவலை?
 
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவவேண்டும் என்பதில் கூடுதல் கவனமாய் இருந்துவருகிறது. இந்த கவனமானது நாடு பிடிக்கும் எண்ணமோ மற்றும் பாதுகாப்பு வியூகம் தொடர்பானதுதோ அல்ல, மாறாக பொருளாதாரம் மற்றும் கடற்போக்குவரத்திற்கான அக்கறை! இதுபற்றி மலேசியாவின் “செம்பருத்தி” இதழிலிருந்து வெளியான கட்டுரையிலிருந்து சிலஉ.
ஆசியக் கண்டமாவது இன்று சகல வகைகளிலும் உலகின் கவனத்தை ஈத்த்து வைத்துள்ள ஒரு பகுதியாக மாறியுள்ளது. அதிகளவு ஜனத் தொகையினைக் கொண்ட நாடுகளான சினா, இந்தியா, ஆகியவற்றின் அமைவிடம் என்பதோடு, இரசியப் பேரரசின் 60 சதவீதத்திற்கு அதிகமான பகுதியும் ஆசியக் கண்டத்திலேயே அமைவு பெற்றுள்ளது. அது போன்றே மத்திய கிழக்கு எனக் குறிக்கப்படும் அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் வரையுமான பகுதி ஆசியக் கண்டமே.
இவ்வாறான ஆசியக் கண்டத்தின் ஒரு பகுதியாக கிழக்காசியக் கரையாக அமையப் பெற்றுள்ள தீவுக் கூட்டமே ஜப்பானாகும். 4 பெரிய தீவுகளையும், உள்ளடக்கிய இத்தீவுக்கூட்டத்தில் கொக்கைடோ, கொன்சு, சிகோகூ, கியுசு என்கிற நான்கு பெரிய தீவுகளுமே மக்கள் வசிப்பிடங்களாக அமையப் பெற்றிருக்கின்றன.
தனது எற்றமதி இறக்குமதி வர்த்தகத்தில் 50-க்கும் சற்று மேலான விழுக்காட்டை ஆசிய, ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளுடனே மேற்கொண்டு வரும் ஜப்பான், தனது எரிபொருள் தேவைக்காக ஒட்டு மொத்தமாக மத்திய கிழக்கை நம்பியிருக்கிறது. இவற்றிற்கான போக்குவரத்தாக கடற்பயணமே அமையப் பெற்றிருக்கிறது.
ஜப்பானின் கடற்பயணத் தேவையில் மத்திய கிழக்கு உள்ளிட்ட ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை இந்துமாக்கடல், நேரடியாகத் தொடுகிறது. அத்தோடு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை இந்துமாக்கடல், சூயஸ் கால்வாயினூடான பயணம் இலகு வாக்குகிறது.
பசுபிக் மற்றும் ஆர்டிக் ஊடான வட கடற்பாதை, ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தில் 40 விழுக்காடு தூரத்தை ஜப்பானிற்கு மீதப்படுத்துமெனினும், பனிக் கட்டிகளையுடைய மேற்படி ஆழ்கடலில் சரக்குக் கப்பல்கள் பயணிப்பது சிரமமானது.
அத்தோடு மிகக் குறைந்த பயணவேகம், எரிபொருள் சேதம், கூடுதலான காப்பறுதி மற்றும் பனித்தகர்ப்பின் செலவு போன்றவை வ்ந்து மாக்கடலான கடற்பாதையையே ஜரோப்பாவிற்கும் சாத்தியமாக்கி நிற்கிறது.
எனவே இந்து மாக்கடல் பகுதியில் அமைதி நிலவுவது ஜப்பானிற்கு இன்றியமையாத ஒரு செயற்பாடாகவுள்ளது. அதிலும் குறிப்பாக, கடலையண்டிய நாடுகளில் அமைதி நிலவுவது அதன் வர்த்தகக் கடற்போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்படுவதைக் குறைக்கும்.
அதற்காக தனது பயணப் பாதையில் அமைந்திருக்கம் தென் கிழக்காசியத் தீவுகளான பிலிப்பைன்ஸ், கிழக்குத் தீமோர், இந்தோனேசியா (அசோக் மாகாணம்) ஆகியவற்றிற்கான தீர்வுகளில் பங்காற்றிய ஜப்பான், அடுத்தபடியாக இலங்கைத் தீவு விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ளது.

No comments:

Post a Comment