Friday, November 12, 2010

காசநோய்

காசநோய்

டாக்டர். ஜெயவேலன், ஐ.ஐ.டியாராவது இருமினால் என்ன செய்வீர்கள்? தும்மினால்? அட பேசினால்? இதென்ன வேடிக்கையான தொடர் கேள்விகள் என்று கேட்க வேண்டாம். இந்தச் செயல்களைச் செய்பவர் காசநோயால் பாதிக்கப்பட்டவர் என்‘றல், தள்ள்ள்ள்ளி நில்லுங்கள். இல்லையேல் நாளை மீதிப்பேர் உங்களிடமிருந்து தள்ள்ள்ள்ளி நிற்பார்கள்.
டிபி எனப்படும் காசநோய் சந்தேகமில்லாமல் ஒரு தொற்றுநோய். முற்றிய நிலையில் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகமாக இந்த நோயைப் பரப்புகிறார்கள் என்றாலும் அந்தக் காரணத்தினாலேயே இதைத் தடுப்பது இயலும் என்பதோடு கட்டாயமும்கூட.
ஒருவித பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், திசுக்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. உடலின் எந்தப் பகுதியையும் இது பாதிக்கலாம், என்றாலும் பெரும்பாலும் நுரையீரல்கள்தான் இந்த பாக்டீரியா கிருமிகளின் இலக்காக இருக்கிறது.
காற்றின் மூலமாகப் பரவக்கூடியவை இந்தக் கிருமிகள் என்பதால் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல், பேச்சு ஆகியவற்றின் மூலமும் கூட இந்த நோய் சுலபமாகப் பரவுகிறது.
இந்தக் கிருமிகள் நமக்குள் சென்றுவிட்டால் வெகுவேகமாக எண்ணிக்கையில் அதிகமாகின்றன. நுரையீரலில் உள்ள காற்றுப் பாதைகளில் சென்றுவிட்டால் ஜம்மென்று அங்கே தங்கி தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றன. மேலும் மேலும் எண்ணிக்கையில் அதிகமாகி அங்குள்ள உயிரணுக்களை சிதிலமடையச் செய்கின்றன. பிறகு ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலின் மீதிப் பகுதிகளையும் பாதிக்கச் செய்கின்றன.
அதனால் தான் காசநோய் கொண்டவர்களோடு சற்றுத் தள்ளியே ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். அதுமட்டுமல்ல, முடியுமானால் மிகவும் கூட்டம் நிறைந்த இடங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.

No comments:

Post a Comment