Sunday, November 7, 2010

கவின்மிகு கம்போடியா

கவின்மிகு கம்போடியாTamil Katturaikal - General Articles
கம்போடியா" கவின்மிகு அழகுடைய ஒரு நாடாக தனித்து விளங்குகிறது. கம்போடியாவின் தலைநகரம் "நாம்பென்" (Phnom Penh). "கெமர்" மொழியை தாய் மொழியாகக் கொண்டு விளங்கும் கம்போடியாவில் பல மொழி, மத இனத்தவரும் வாழ்கின்றனர்.
கெம்பர், ஆங்கிலம், ப்ரெஞ்ச் போன்ற மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன. புத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் போன்ற மதத்தவர்களும் இங்கு வாழ்கின்றனர். கெமர், சினா, வியட்நாம் போன்ற மக்களும் கம்போடியாவில் இருந்து வருகின்றனர்.
சரித்திர ரீதியாகவும், சிற்பக்கலை சம்பந்தமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக பண்டைக்கால இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டின் புராதன தொடர்புகளை அங்கு காணலாம். சியம்ரியப் நகரின் சமீபம் உள்ள அங்கோர்வாட், கபால் ஸ்பியன், நாம் குலேன் (Phnom Kulen) போன்ற உலகம் பிரசித்தி பெற்ற புராதன பாழடைந்த கோயில்களும், சிற்ப பொக்கிஷங்களும் காண வேண்டிய இடமாக உள்ளது.
அங்கோர்வாட் வளாகம் உலகில் இருக்கும் தொல்பொருட்கள் மற்றும் சிற்ப களஞ்சியங்களில் ஒன்றாகும். கெமர் மக்களின் பெருமை வாய்ந்த சின்னமாகவும் அவர்கள் வம்சாவளியின் பொக்கிஷமாகவும் அங்கோர்வாட் திகழ்கின்றது. 400 கதுர மீட்டரில் தன்னிகரற்ற ஒரு அற்புத கட்டடமாக இருக்கிறது. அங்கோர்வாட் அற்புதம். கெமர் சாம்ராஜ்யத்தின் பழைய தலைநகரான அங்கோர், டோன்லே ஸாப் என்ற பிரமாண்ட ஏரிக்கு வடக்கே உள்ள சமவெளியில் கட்டப்பட்டிருக்கிறது.
வாட் என்பது கோயிலைக் குறிக்கும். அக்காலத்தில் கெமர் அரசர் தேவ ராஜனாக கொண்டாடப் பட்டார். கெமர் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி. 801-850) இந்துக்கள் வழிபடும் தெய்வங்கள் மற்றும் ராமாயணம், மகாபாரதம், தேவ அசுரர்கள் பாற்கடல் கடைவது போன்ற புராண சம்பவங்களை உள்ளடக்கிய சிற்பங்களைக் கொண்ட பல கோயில்களைக் கட்டினார்.
அடர்ந்த காடுகளின் நடுவே ரம்மியமான இயற்கை சூழ்நிலையில் நதியின் அடியில் செதுக்ககப்பட்டிருக்கும் 1008 சிவ லிங்கங்களும் (நாம் குலேன், கபால் ஸ்பியன்) விஷ்ணு, லட்சுமி போன்ற சிற்பங்களும் ரசனை மிகுந்த, கண்களுக்கு விருந்து படைக்கும் ஒரு இடமாக உள்ளன.
சியம் ரியப் என்ற நகரம், அதே பெயர் கொண்ட மாநிலத்தின் தலைநகராகும். நாம் பென்னிலிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
கம்போடியாவில் உள்ள ஓட்டல்களில் ஒரு நாள் வாடகையாக நாற்பது அமெரிக்க டாலர் வசூலிக்கப்படுகிறது. காலை உணவு உட்பட! அங்கே கிடைக்கும் சைவ உணவு வகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பிரட் டோஸ்ட், சில வகை பருப்புகள், பழங்கள் இவைதான் அதிகபட்ச சைவ அயிட்டங்கள். அசைவ உணவுகாரர்களுக்கோ கொண்டாட்டம்தான்.
நாம் குலேன், சியம் ரியப்பில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவு. கபால் ஸ்பியனும் அருகில்தான். காரின் வாடகை மட்டும் 60 டாலர். அங்கோர் வாட் வளாகத்தின் எல்லைக்குள் நுழைய தலா ஒரு நாளைக்கு 20 டாலர் கட்டணம். இதை கம்போடிய அரசால் நியமிக்கப் பட்டிருக்கும் அப்ஸரா நிறுவனத்தினர் வசூலிக்கின்றனர்.
பழைய கெமர் சாம்ராஜ்யத்தின் பிறப்பிடமாக நாம் குலேன் கருதப்படுகிறது. இந்த குன்றின் உச்சியில் கம்போடியாவின் மிகப் பழைய சயனித்திருக்கும் புத்தர் சிலை இருக்கிறது. கி.பி. 802-ம் ஆண்டு ஜாவாவிடமிருந்து சுதந்திரம் அடைந்ததை பிரகடனப்படுத்தும் வகையில் இரண்டாம் ஜெயவர்ம மன்னன் இங்கு சிவலிங்கங்களை ஸ்தாபித்ததாக வரலாறு. இந்த இடம் சமீபகாலத்தில்தான் கெமர்ரூஜ் என்று சொல்லப்படும் தீவிரவாதிகளின் ஆதிக்கத்திலிருந்து கம்போடிய அரசின் கைக்கு வந்து சேர்ந்தது.
நாம் குலேன் சிவ பெருமானின் இருப்பிடமான கைலாச மலையாகக்கூட கருதப்பட்டது. நாம் குலேன் ஒரு பெரிய மலைப்பிரதேசம். மலை அடிவாரத்தை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும். வழி நெடுக இருமருங்கிலும் மரங்களும், கற்பாறைகளும் இருக்கும். மலை அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்லும் சாலை ஒரு கார் செல்லும் அகலத்தில்தான் இருக்கும். நண்பகல் 12 மணிக்கு மேல் மலை மீது கார் ஏறுவதற்கு அனுமதி இல்லை. ஏனென்றால் ஒரு கார் மட்டும் செல்லும் பாதை என்பதால் கீழே இறங்கக் காத்திருக்கிற கார்களை அந்த நேரத்தில்தான் அனுமதிக்கப்படுகிறது.
நாம் குலேன் குன்றின் உச்சியில் கார் செல்ல அனுமதி இல்லை. மோட்டார் சைக்கிளிலோ அல்லது நடந்தோதான் செல்ல வேண்டும். சியம் ரியப் நதி ஒரு உயரத்தில் இருந்து கீழே பாயும் போது ஒரு நீர்வீழ்ச்சி உருவாகிறது. படுத்த நிலையில் உள்ள விஷ்ணுவின் அழகான சிற்பமும், அவர் காலடியில் உள்ள லட்சுமி உட்கார்ந்த நிலையிலும் இருப்பதை இங்கே காணலாம். நாம் குலேன் காட்டில் ஐம்பதுக்கும் மேல் விஷ்ணு, சிவன் உருவங்கொண்ட கோயில்கள் (அவற்றில் சில குகைக்கோயில்கள்) இடிந்த நிலையிலும், புதர்களிலும் புதைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கபால் ஸ்பியன் (நதியின் தலை) எளிதில் சென்று பார்க்கக்கூடிய இடம் இல்லை. வழிகாட்டுபவர் உதவியும், ஊன்றுகோலும் மிகவும் அவசியம். ஏனென்றால் ஒரு மணி நேரம் கரடுமுரடான மலைப்பாறைகளையும், மரங்களின் பலமான வேர்களையும் தாண்டித் தாண்டிச் செல்லக்கூடிய ஒரு இடமாக இது இருகூகிறது. மலையேறியவுடன் அழகான நீர்வீழ்ச்சியும், பட்டாம் பூச்சி கூட்டங்களும் காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். நதியின் நீர் சலசலப்புடன் ஓடிக் கொண்டிருக்க... அதன் நடுவே இயற்கையான ஒரு கற்பாலன் இருக்கிறது- நதியின் படுகையில் 11-ம் நூற்றாண்டின் அற்புதமான சிற்பங்களும் காட்சியளிக்கின்றன.
அனந்த சயனத்தில் மகாவிஷ்ணு மற்றும் ராமர், ஹனுமார் சிற்பங்கள் இங்கு அழகாக செதுக்கப்பட்டுள்ளன. லிங்கங்கள் மற்றும் சில சிற்பங்கள் நீருக்கு அடியிலும், சில வெயிலிலும், மழையிலும் எந்த பாதுகாப்பும் இல்லாத நிலையில் உள்ளன. சிறிது தூரத்தில் சிவ லிங்கங்கள் தண்ணீர் அடியில் நதி ஓட்டத்தில் உள்ளன. இதனால் இதற்கு ஆயிரம் லிங்கங்கள் கொண்ட நதி என்ற பெயரும் உண்டு. கம்போடிய மன்னன் இரண்டாம் ஜெயவர்மன் இந்த லிங்கங்களை தண்ணீருக்கு அடியில் செதுக்கியதன் காரணம் "தண்ணீர் புனிதமடைந்து பயிர்களுக்கு பாய்ந்து நல்ல விளைச்சலை உண்டாக்கும்" என்று கூறப்படுகிறது.
கம்போடியாவை சென்று சுற்றிப்பார்க்க ஏற்ற காலங்களாக மே-யிலிருந்து அக்டோபர் வரை சிறந்ததாக சொல்லப்படுகிறது. கம்போடியாவின் மிகப்பெரிய விழாவாக பொன் ஓம் ட்யூக் (Bon Om Tuk) நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
பிற தகவல்கள் :
நாட்டின் பெயர் : கம்போடியா
மொத்தப் பரப்பளவு : 181,035 சதுர கி.மீ (11,224 சதுர மைல்)
மக்கள் தொகை : 12 மில்லிணுயன் (வளர்ச்சி வீதம் 2.2%)
தலைநகரம் : நாம் பென் (Phnom Penh) (Pop One Million)
மக்கள் : 94% எத்னிக் கெமர்ஸ், 4% சைனீஸ்) 1% வியட்னாமீஸ்
மொழி : கெமர், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச்
மதம் : 95% புத்த மதத்தினர், சாம் முஸ்லீம், ரோமன் கத்தோலிக்
அரசாங்கம் : அரசியல் முடியாட்சி
நாட்டின் தலைவர் : கிங் நொரோடம் ஸிஹானுக் (King Nerodom Sihanouk)
தொழிற்சாலை : மரம், ரப்பர், கப்பல், அரிசி ஆலை, நூற்பு ஆலை மற்றும் மீன் பிடித்தல்
இன்று வரை கம்போடிய மக்கள் பிழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் உணவாக கொண்டிருக்கும் மீன் மற்றும் அரிசி தான் என்று தொல் பொருள் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை பல அரசியல் நிறுவனங்கள் மற்றும் கலாச்சாரம், கலை விரிவுபடுத்தப்பட்டது.
எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அங்கோரியன் ஆட்சி மதசார்பாக மாற்றியமைக்கப்பட்டது.
போர்ச்சுகீரியர் மற்றும் ஸ்பானிஷ் இடையே ஏற்பட்ட போரினால் ஸ்பானிஷ் காவற்படையினர் நாம் பென்னில் 1599 ல் படுகொலை செய்யப்பட்டனர்.
அமைதியான நாடாக மாற்ற ஒப்பந்தத்தின் பேரில் ஸிகானுக் சரியான தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டின் இறுதியிலேயே அவரை தவறாக தேர்ந்தெடுத்து விட்டோம் என்று வியட்நாம் மற்றும் ஃப்ரெஞ்ச் இடையே போர் தொடர்ந்தது.
1953-ம் ஆண்டு கம்போடியா சுதந்திரம் பெற்றது. வியட்நாம் யுனைட்டேடு ஸ்டேட் இடையே ஏற்பட்ட சண்டையினால் ஆயிரம் சிவிலியர்கள் கொல்லப்பட்டனர்.
கெமர் ரூஜ் என்ற தீவிர தாக்குதல் மற்றும் உள்நாட்டு சண்டைகளைக் கடந்து 1993 - ல் கம்போடியா ஒரு ஜனநாயக நாடாக ஆயிற்று.
போல் பாட்ஸ் (Pol Pots) தலைமையின் கீழ் கெமர் ரூஜ் கும்பல் இரண்டு மில்லியன் கம்போடிய மக்களை மிருகத்தனமான முறையில் கொன்றது. பணப் புழக்கம் ஒழிக்கப்பட்டது. தபால் துறை நிறுத்தி வைக்கப் பட்டது. அனைத்து மக்களும் அடிமை தொழிலாளர்களாக நடத்தப்பட்டனர்.
வியட்நாம் கம்போடியா மீது 1978 ல் தாக்குதல் நடத்தியது. தாய்லாந்து எல்லையில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு உள்ள இடத்திற்கு கெமர் ரூஜ் ஓடி விட்டனர். சிறு சிறு தாக்குதல்களை கெமர் ரூஜ் அரசாங்கத்திற்கெதிராக நடத்தினர்.
1994ம் ஆண்டு கம்போடியா அரசு கெமர்ரூஜ் கும்பலை நாடு கடத்தி விட்டனர். கூட்டணியாக முடியாத நிலையில் ரெனாரித், ஹன் சென் இருவரும் ஜூலை 1997ல் வேறாக பிரிந்தனர்.
1998-ல் போல் பாட்ஸ் இதய கோளாரினால் இறந்து விட்டார். அழிந்து கொண்டிருக்கும் நாட்டை காப்பாற்ற மறுபடியும் உறுதியான மனதுடன் சிகானுக் நீண்ட கால அரசராக அங்கோரில் ஆட்சி அமைத்தார்.
சைனீஸ் மற்றும் வியட்நாமிஸ் ஜனவரி இறுதியிலும் அல்லது பிப்ரவரி முதலிலோ புதிய வருடத்தை கொண்டாடுகின்றனர்.
கெமர் மக்கள் புதிய வருடத்தை மூன்று நாட்கள் ஏப்ரல் மாத இடையிலே கொண்டாடுகின்றனர்.
உழவர் நாளை நாம் பென் அருகிலுள்ள ராயல் பேலஸ் அருகில் மே மாத முதலாகவே கொண்டாடுகின்றனர். அனைத்து அரசாங்க விடுமுறை நாட்களும் வங்கிகள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment