Sunday, November 14, 2010

கிருமி தொந்தரவுக்கு சுண்டைக்காய்

கிருமி தொந்தரவுக்கு சுண்டைக்காய்!

Sundakkai(Solanum torvum) for germs! - Food Habits and Nutrition Guide in Tamil
புழுக்களை ஒழிக்கும் வேப்பங்கொழுந்து:
வேப்பங்கொழுந்து பிணி தீர்க்கும் மருந்து. சிறந்த கிருமி நாசினி. வேப்பங்கொழுந்தை சிறிது மஞ்சள் தூளுடன் சேர்த்து அரைத்து நல்ல கெட்டியான விழுதாக்கி விடவும். அரைத்த கொழுந்தை துணிவைத்து மூடிய பாத்திரத்தில் பனி படும்படி ஜன்னல் அல்து வேறு இடத்தில் வைக்கவும். காலையில் எழுந்தவுடன் அருநெல்லி அளவு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். நெல்லிக்கனி அளவு பெரியவர்களும் சாப்பிடலாம். காலையிலேயே அரைத்து உடனேயும் சாப்பிடலாம். எல்லாவித புழுக்களையும் ஒழிக்கும் சிறந்த மருந்து. மாதம் ஒருமுறை சாப்பிடலாம்.
காய்ச்சல் என்று குழந்தைகள் படுத்துவிட்டால், அவசியம் காலையில் அரைத்து வேப்பங்கொழுந்தைக் கொடுங்கள். மந்தக் காய்ச்சல், சளிக்காய்ச்சல், அம்மை வரும் முன்னர் வரும் காய்ச்சல், டைபாயிட் காய்ச்சல் எதுவாக இருப்பினும், காய்ச்சலில் படுத்த குழந்தைகளுக்கு மூன்று நாள் காலை அருநெல்லி அளவு வேப்பங்கொழுந்து கொடுத்தால், அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. "விருந்தும் மருந்தும் மூன்று தினம் மட்டுமே" எனவே மூன்று நாட்கள் சாப்பிட்டால் நலம்.
கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்:
சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும்.
பூண்டு:
வாரம் ஒரு முறை பூண்டை உணவில் சேர்த்துச் சாப்பிடவும்.
தேனினும் இனியது:
1. நெஞ்சுவலி வந்தவுடன் ஒரு கரண்டி சுத்தமான தேன் உட்கொள்ள, வலி வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
2. மிளகுக் கஷாயத்துடன் தேனைக் கலந்து உட்கொள்ள அஜீரணம் குணமாகும்.
3. குழந்தைகள் சளி, ஜலதோஷத்தால் அவதிப்பட்டால் மாதுளம் பழச்சாறுடன் சிறிது தேனைக் கலந்து கொடுக்கவும்.
4. குப்பைமேனி இலையின் சாறுடன் தேனைக் கலந்து கட்டிகளின் மீது தடவினால் கட்டிகள் உடைந்து குணமாகும்.
5. நெருப்பு காயத்திற்கு தேன் உகந்தது.
6. உணவு உண்டவுடன் ஒரு கரண்டித் தேன் அருந்தினால் உடல் சீராக இருக்கும். உடல் பருக்க இரவு படுக்குமுன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
7. விளாம்பழச்சாறும், தேனும் இருமலை நிறுத்தும்.
வாய்ப்புண்ணுக்கு கடுக்காய்:
1. வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வெந்தயத்துடன் அரை கப் தயிர் குடித்தால் உஷ்ணம் தணிந்து மலச்சிக்கல் ஏற்படாது. நீராகாரமும், வெந்தயமும் தினம் காலையில் அருந்துவதும் நல்லது.
2. குளவி கொட்டிய இடத்தில் சுண்ணாம்பு அல்லது வெங்காயத்தை தடவவும்.
3. கடுகு, மஞ்சள், ஓமம் முதலியவற்றை அரைத்து, நகச்சுற்றின் மேல் கட்டினால் வலி குறையும்.
4. வாய்ப்புண்ணுக்கு கடுக்காயை வாயில் ஒதுக்கிவைக்க புண் விரைவில் ஆறும்.
5. கால் வெடிப்பு உள்ளவர்கள், குளிக்கும் போது காலை தேய்த்துக் குளிக்கவும். மஞ்சள் தேய்த்துக் குளித்தால் கால் வழுவழுப்பாக ஆகிவிடும்.

No comments:

Post a Comment