Saturday, November 13, 2010

நரம்புத் தளர்ச்சி குறைய...

நரம்புத் தளர்ச்சி குறைய...

Advantages and Disadvantages of Vegetables III - Food Habits and Nutrition Guide in Tamil
பப்பாளிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.
யாருக்கு நல்லது : மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க
விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.
யாருக்கு வேண்டாம் : கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
பலன்கள் : சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
களாக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது : மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த
மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : தொண்டைவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து,
பித்தத்தை கட்டுப்படுத்தும்.
நெல்லிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, செல்லுலோஸ், கார்போ ஹைட்ரேட், கால்சியம்,
பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் நிகோடினிக் ஆசிட்
யாருக்கு நல்லது : பிளட் பிரஷர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
எல்லோருக்கும் உகந்த அமிர்தக்கனி.
பலன்கள் : இளமையை நீடிக்கச் செய்யும். தலைமுடி, தோல், கண் பார்வையை
பாதுகாக்கும். இதயம் நுரையீரலை வலுவூட்டும்.

No comments:

Post a Comment