Saturday, November 13, 2010

நஞ்சு முறிக்கும் அரிவாள்மனை பூண்டு!

நஞ்சு முறிக்கும் அரிவாள்மனை பூண்டு!

Sida caprinifolia non-toxicates! - Food Habits and Nutrition Guide in Tamil
நுனிப்பற்கள் ஆப்பு வடிவ இலைகளை உடைய குறுஞ்செடி இனம் அரிவாள்மனைப் பூண்டு. இலையே மருத்துவக் குணம் உடையது. இரத்தக் கசிவைத் தடுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. மாரிக்காலத்தில் தமிழகம் எங்கும் சாலை ஓரத்தில் தானே வளரக் கூடியது.
வேறு பெயர்கள்: அரிவாள் மூக்குப் பச்சிலை
ஆங்கிலத்தில்: sida caprinifolia
மருத்துவக் குணங்கள்:
அரிவாள்மனைப் பூண்டின் இலையை கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய ரத்தப்பெருக்கு உடனே நின்றுவிடும். அரிவாள்மனைப் பூண்டின் இலை, அதேயளவு குப்பை மேனி இலை கைப்பிடியளவு, பூண்டுப் பல் 2, மிளகு, 3 சேர்த்து அரைத்த புன்னக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் வைத்துக் கட்ட நஞ்சு முறியும் (உப்பு, புளி நீக்கவும்)
அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை சம அளவு எடுத்து அரைத்து புழுவெட்டின் மீது தடவி வர விரைவில் மாறும். இதன் இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மீது தடவி வர குணமாகும். மேலும், அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை, எலும்பு ஒட்டி இலை வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்துப் பற்றிட காயங்களில் உண்டான வீக்கம் விரைவில் குணமாகும்.
அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வர விரைவில் குணமாகும்.

No comments:

Post a Comment