Friday, November 12, 2010

முதுகுவலி

முதுகுவலி

டாக்டர் எம். சிவசக்தி Dr. Interview : Backpains - Food Habits and Nutrition Guide in Tamil
ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும், குனிந்து குனிந்து வேலை செய்யும் பெண்களுக்கும் கார் ஓட்டுபவர்களுக்கும் அடிக்கடி முதுகுவலி வரும்.
நடு முதுகிலும், இடுப்பின் கீழ்ப்பகுதியிலும்தான் பெரும்பாலும் முதுகுவலி அதிகமாக தொல்லை தருகிறது.
வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி நாடுவதைவிட வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் இதிலிருந்து விடுபடலாம்.
சத்துணவு, உடற்பயிற்சி ஓய்வு இந்த மூன்றிலும் முறையாக கவனம் செலுத்தினால் முதுகுவலி வராது.
உடல் பருமனாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதை தவிர்க்கவேண்டும்.
முதுகுவலி வந்தாலும் உணவை விட்டுவிடக் கூடாது.
காலை இரண்டு மூன்று ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி பழங்கள், ஒரு கப் பால் ஆரோக்கியமான எலும்புத் திசுக்கள் உருவாக வைட்டமின்-சி அதிகம் தேவை. எனவேதான் காலையில் சிட்ரஸ் பழங்களும் பாலும் சாப்பிட வேண்டும்.
முதுகு எலும்புகள் நெகிழ்ந்து வேலை செய்யும் தன்மையை இழந்துவிட்டால்தான் முதுகுவலி வருகிறது. எனவே வைட்டமின் சி அதிகமுள்ள உணவுப் பொருட்களாகப் பார்த்து சாப்பிட்டால் முதுகுவலி முற்றிலும் குணமாகும். இதனால் முதுகுவலிக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சையை தவிர்த்துவிடலாம்.
மதிய உணவு
மதிய உணவாக முட்டைகோஸ், காலிப்ளவராக ஒரு சிறிய ப்ளேட் அளவு சாப்பிடலாம். கூடவே ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். ஒரு சப்பாத்தி மற்றும் விருப்பமுள்ளவர்கள் ஒரு மீன் சாப்பிடலாம்.
மாலை ஒரு பழச்சாறு, திராட்சை அல்லது சாத்துக்குடிச்சாறு. இரவில் காரட், முட்டைக்கோஸ், பசலைக்கீரை, வெள்ளரிக்காய், முள்ளங்கி ஆகிய துண்டுகள் சம அளவு கலந்து தயாரிக்கப்பட்ட காய்கறி சாலட் சத்துணவாகும். முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிடவேண்டும்.
வைட்டமின் - சி, டி அவசியம் தேவை. கால்சியமும், பாஸ்பரசும் இருந்தால்தான் எலும்புகள் உறுதியுடன் இருக்கும்.
முதுகுவலி குணமாகும் வரையிலும் கொழுப்பு, நறுமணப்பொருள் சேர்க்கப்பட்ட பொருட்கள், இனிப்பு வகைகள் வறுக்கப்பட்ட பொருட்கள், தேநீர், காபி, சிகரெட் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
புரதம், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை அதிகமுள்ள உணவு வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
தொடர்ந்து உடற்பயிற்சி, வாக்கிங், நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
வேலையின் போது கழுத்தை இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என மாற்றி மாற்றி திரும்புவதும், கழுத்துவலி அதன் தொடர்பாக வரும் முதுகு வலியும்போகும்.
கடுமையான முதுகுவலி குறைய ஒரு ஐஸ் கட்டியை வலி அதிகம் உள்ள இடத்தில் அரை மணி நேரம் வைக்க வேண்டும். அடுத்த அரை மணி நேரம் சூட்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
முதுகு வலியைக் குறைக்க ஐந்து விதமான யோகாசனங்கள் உள்ளன. வயதுக்கு ஏற்ற யோகாசனங்களைப் பின் பற்றி தொடர்ந்து செய்தால் முதுகுவலி காணாமல் போகும். இவற்றை முறையான மருத்துவ அனுபவம் பெற்றவரிடம் மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment