Tuesday, November 9, 2010

பட்டுப்போன்ற முகத்திற்கு

பட்டுப்போன்ற முகத்திற்கு ...

முகம் பட்டுப்போல் மென்மையாக இருக்க...
வெள்ளரிச்சாறு இரண்டு ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும். பஞ்சை இந்த சாற்றுக் கலவையில் முக்கி முகம் பூராவும் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். முகம் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.

முகம் புது மெருகோடு இருக்க...
ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் புது மெருகோடு இருக்கும்.

முகம் கவர்ச்சிகரமாக விளங்க...
கசகசாவில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு மை போல் அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் மறைந்துவிடும். முகம் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும் இருக்கும்.

முகம் நல்ல நிறம் பெற...
முள்ளிக்கி சாற்றுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து ஊற வைத்து வந்தால் முகம் நல்ல நிறம் பெறும்.

முகப்பருவைப் போக்க...
முகப்பரு உள்ள இடத்தில் சந்தனம், மிளகு, ஜாதிக்காய் ஆகிய மூன்றையும் நீர்விட்டு இழைத்து போட்டு வந்தால் பரு தானே மறைந்து விடும்.

No comments:

Post a Comment