Thursday, November 11, 2010

பருவுக்கும் மருவுக்கும் என்ன வித்தியாசம்?

பருவுக்கும் மருவுக்கும் என்ன வித்தியாசம்?

டாக்டர் டி.பாரி What is pimples and blackheads? - Food Habits and Nutrition Guide in Tamil
நம் உடம்புக்குச் சவால் விடக்கூடிய வெயில் காலம் வந்துருச்சு. சருமப் பாதுகாப்பில் எச்சரிக்கையா இருங்க! என அக்கறையோடு குரல் கொடுக்கிறார் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் டி.பாரி.
வெயில் காலத்திலே வியர்வையால் அரிப்பு, உடல்நாற்றம், படர்தாமரை, கொப்புளங்கள் போன்றவை சகஜம்! அதனால் உடல்சுத்தம் ரொம்ப அவசியம்!
இப்படிப்பட்ட காலத்திலே உடம்பை இறுக்கற ஜீன்ஸ் மாதிரி இல்லாம, காற்றோட்டமான, வியர்வை உறிஞ்சற காட்டன் டிரஸ் போட்டுக்கறது நல்லது! அதிகமான வெப்பத்தால் சருமம் கறுத்தும், சுருங்கியும் போறதுக்கு வாய்ப்பு அதிகமா இருக்கு. சன் ஸ்கிரீன் லோஷன் போடலாம் என்றவர், தோல் சம்பந்தமான சில நோய்கள் குறித்தும் சீரியஸாகப் பேசினார்..

ஆசோரியாசிஸ்ங்கிற தோல் உதிர்வு நோய் வந்தா கை, கால், உள்ளங்கை, முட்டி போன்ற இடங்கள்ல கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தோல் வளர்ச்சி இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஃபோட்டோ தெரஃபி, பயோலாஜிக்கல் போன்ற நவீன சிகிச்சைகள் இருக்கு. ஆனா ரொம்ப காஸ்ட்லி!
வெண் புள்ளி மாதிரியான நோய்களுக்கு இப்போ அல்ட்ரா வயலட் சிகிச்சை இருக்கு. சிக்கன் பாக்ஸூக்குத் தடுப்பூசியும், மாத்திரைகளும் இருக்கு. இதன்மூலமா அம்மைத் தழும்புகளைத் தடுக்கலாம். குழந்தைகளுக்கு வர்ற சொரி, சிரங்குக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கலேன்னா, அவர்கள் வளர்ந்த பின்பும் அந்தத் தழும்புகள் அசிங்கமா தெரியும்.
அலர்ஜி பத்தியும் நாம் கொஞ்சம் அலாட்டா இருக்கணும்! என எச்சரிக்கிறார். அலர்ஜிக்கு சாப்பாடு, சருமத்தில் அழுத்தும் ஆபரணங்கள், ஒத்துவராத சில மாத்திரைகள், பூச்சிக் கடிகள்ன்னு நிறைய காரணங்கள் இருக்கு. பார்த்தீனியம்ங்கிற செடியால பல பேருக்கு அலர்ஜி வருது. சரியான சிகிச்சை எடுத்துக்கிட்டோம்னா இந்த "ஒவ்வாமை"கள் பற்றி ஒரு கவலையும் வேண்டாம். டீன் ஏஜ் பருவத்தில் வர்ற பரு, ஒரு சாதாரண விஷயம்! ஆனா, சரியான கவனிப்பு இல்லேன்னா முகத்தோட அழகைக் கெடுத்திடும். பரு 13 வயசிலேர்ந்து 26 வயசு வரைக்கும் வரலாம். வளர்பருவத்தில் வர்ற ஹார்மோன் மாற்றத்தினாலதான் பரு வருது. முகம் மட்டுமல்லாது மார்பு, முதுகுப் பகுதிகளிலும் பரு வரலாம். இதுக்கு சிம்பிளான சிகிச்சையே போதுமானது.
பல பேருக்குப் பருவுக்கும் மருவுக்கும்-கூட வித்தியாசம் தெரியறதில்லே. மரு, வைரஸ்களால் வருது. இதுக்கு எலக்ட்ரோ மற்றும் சர்ஜரி ஆகிய ரெண்டு வழியிலே சிகிச்சை இருக்கு. மருவை நிரந்தரமா நீக்கிடலாம்! முடி கொட்டுறதும் தோல் சம்பந்தப்பட்டதுதான்! முடிகொட்டுறதுக்கு தோல் டாக்டர்கிட்டே வர்ற மக்களைவிட கண்ட கண்ட எண்ணெயைத் தேடிப் போகிற மக்கள்தான் அதிகமா இருக்கறாங்க. அறிவியல்பூர்வமான உண்மை என்னன்னா, எண்ணெயால முடி வளராது. முடி உதிர்வைத் தடுக்க டாக்டர்கிட்டே போறதுதான் சிறந்த வழி.
தலைமுடி கொட்டுறதுக்கு பொடுகு ஒரு முக்கிய பிரச்சினை. முடி நல்லா வளரணும்னு சிலர் முட்டையை உடைச்சு தலைக்குத் தடவுவாங்க. அதுக்குப் பதிலா அந்த முட்டையைச் சாப்பிட்டாங்கன்னா, முட்டையோட முழு பலனும் கிடைக்கும். அதேபோல சிவப்பழகு கிரீம்கள், தோலுக்கு உண்டான நார்மல் கலர் என்னவோ அதைத்தான் தரமுடியும். கறுப்பா இருக்கறவங்க சிவப்பா மாறலாம்ங்கிறது சுத்தப் பொய்! மேலும் அது மாதிரியான கிரீம்களை நாலஞ்சு மாசத்துக்கு மேலே தொடர்ந்து உபயோகிக்கறது அவ்வளவு நல்லதும் இல்லே!" என்றும் உஷார்படுத்துகிறார்.
மங்கு, தேமல் பத்தியும் நம்மூர்ல சில மூடநம்பிக்கைகள் இருக்கு. குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்வாங்க. அதெல்லாம் அறிவீனம்! நல்ல சன் ஸ்க்ரீன் உபயோகிச்சாலே தேமல், மங்கு எல்லாம் மறைஞ்சிடும்! உடம்பைச் சுத்தமா வெச்சுக்கறதும் வெயிலைத் தவிர்க்கிறதும், பேரீச்சை, கீரை, தக்காளி, கேரட் மற்றும் பழச்சாறுகள் போன்றவை சாப்பிடறதும் சருமப் பாதுகாப்புக்குச் சிறந்த வழிகள்!

No comments:

Post a Comment