Saturday, November 6, 2010

உளுத்தம்பருப்பு ஸ்வீட் கட்லெட்

உளுத்தம்பருப்பு ஸ்வீட் கட்லெட்

Indian Sweets: Urid Dhal Sweet Cutlet - Cooking Recipe in Tamil
தீபாவளிக்கு ஸ்வீட் செய்ய இப்பவே ப்ளான் பண்ணிட்டீங்களா..? வேலைக்குப் போகணும், வீட்ல இருந்து பொறுமையா ஸ்வீட் செய்ய எங்க நேரம் இருக்குனு.... அலுத்துக்கொள்ளாதீங்க. இதோ உங்க நேரத்தையும் மிச்சமாக்கி உடலையும் வலு பெறச் செய்யும் மேஜிக்தான் இந்த ஸ்வீட் கட்லெட்!
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் - தேவையான அளவு
செய்முறை:
* உளுத்தப்பருப்பை, வெறும் வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
* மிக்ஸியில் போட்டு, ரொம்பவும் நைஸாக இல்லாமல் அரைக்கவும்.
* சர்க்கரை, ஏலக்காய் இரண்டையும் பொடி செய்யவும்.
* அரைத்த உளுத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் கலந்துகொள்ளவும்.
* அந்த மாவை, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் விருப்பமான வடிவத்தில் கட்லெட் போல தட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
* அடுப்பை 'ஸிம்'மில் வைத்து, தோசைக்கல்லை காயவைத்து, தட்டிய கட்லெட்டுகளை போட்டு, சுற்றிலும் நெய்விட்டு, லேசாகப் பொரிந்ததும் உடனே எடுத்துவிட வேண்டும்.
* பொரித்தெடுத்த கட்லெட் மீது விருப்பப்பட்டால் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தா தூவி சுடச்சுட பரிமாறலாம்.
* இந்த கட்லெட்டை 3 முதல் 4 நாட்கள் வரை காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தியும் பயன்படுத்தலாம்.
பயன்கள்:
'உளுத்துப் போன உடம்புக்கு, உளுந்து' எனப் பெரியோர்கள் கூறியிருக்கின்றனர். இடுப்பு வலுப்பெற உளுந்து மிகச் சிறந்த உணவு. உடல் வலிமை பெற்றுத் திகழும்.

No comments:

Post a Comment