Saturday, November 13, 2010

புத்துணர்ச்சியுடன் இருக்க....

புத்துணர்ச்சியுடன் இருக்க....

To be Fresh - Food Habits and Nutrition Guide in Tamil
சுக்கை வாங்கி அதை நன்றாக வறுத்து பொடி செய்து பாலில் கருப்பட்டி போட்டு குடித்தால் நன்றாக பசி எடுக்கும். தூக்கமும் வரும், சளி பிடிக்காது. இப்படி ஏகப்பட்ட குணங்கள் சுக்கிற்கு இருக்கிறது.
நாம் வாழை இலையில் சாப்பிடுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது. இரத்தக் கொதிப்பைத் தடுப்பதற்கும், தோலை பள பளப்பாக்கவும், மூளைக் காய்ச்சலைத் தடுக்கவும் செய்கிறது. என்ன வாழையிலையில் சாப்பிட ரெடியாகிட்டீங்களா?
சாப்பிட்ட பிறகு பாக்கு ஏன் போடுகிறார்கள்? பீடா ஏன் போடுகிறார்கள் தெரியுமா? பாக்கில் ஜீரணமாவதற்குத் தேவையான வேதிப்பொருள் இருக்கு. புளிச்ச ஏப்பம் வருவதை சோம்பு தடுக்கிறது. இப்படி, எல்லாவற்றிற்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது.
துளசி, தூதுவளை, கற்பூரவல்லி இவற்றை அலம்பி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்து குடித்தால் உடம்பு வலி, சளி, இருமல் எல்லாம் போயே போய்விடும். உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோல இருக்கும். வாரம் ஒரு முறை இதைக் குடித்தால் இருமல், சளி நம்மை அண்டவே அன்டாது.

No comments:

Post a Comment