Friday, November 5, 2010

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்
 
 
மதுரைக்கு அருகே திருவாதவூர்,அந்தணர் குல சம்புபாதாசிரியர் - சிவ ஞானவதியார் தமபதியர்க்கு, இறையருளால் பிறந்தவர் வாதவூரன், என்கிற மாணிக்கவாசகர் கருவிலேயே திரு மிகுந்திருந்த அவர் ஆயகலை அனைத்திலும் திறன் பெற்றிருந்ததால் பாண்டியமன்னன் அரிமர்த்தனன், அவரைத் தனது முதலமைச்சராக நியமித்திருந்தான். ஒரு அமைச்சன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிவபக்தியோடு செயல்பட்டு, அனைத்துக்கும் மேலான சிவஞானத்தை எதிர் நோக்கியிருந்தார் மணிவாசகர்.
பாதுகாப்புக்கான குதிரைப்படைக்கு நல்ல குதிரைகளை வாங்குவதற்காக, ஏராளப் பொன் கொடுத்து முதல்வரை மன்னன் அனுப்பினார். வழியிலே திருப்பெருந்துறை எனும் தலத்திலே ஈஸ்வரனே வீற்றிருந்தார். யோகியைக் கண்ட மணிவாசகர் தன்னை மறந்தார். சிவயோகச் சிவனிடமே சிவதீட்சை பெற்று தெய்வத் தமிழ்பாடும் திறன் பெற்றார்.
வையமெலாம் போற்றி வணங்கி முழங்கும் திருவாசகத்தைப் பாடி முடித்துப் பரமனின் திருப்பணியிலே மூழ்கிவிட்டார் மாணிக்கவாசகர். குதிரை வாங்கச் சென்ற முதலமைச்சர், கோயிலைக் கட்டிப் பொருளையெல்லாம் அழித்து விட்டதை அறிந்த பாண்டிய மன்னன், சேனாபதியை அனுப்பினான். ஈசனைப்பணிந்தார் மணிவாசகர். " குதிரைகள் மதுரைக்குப் போய்ச் சேரும்" என அசரீரி ஒலித்தது.
ஈசனே குதிரைச் சேவகனாகி காட்டு நரிகளையெல்லாம் பரி (குதிரை) களாக்கி மதுரையில் சேர்க்கிறார். பரிகள் மறு நாள் நரிகளாகின்றன! மன்னன் சினந்து, மாணிக்கவாசகரை வைகை நதியில் நிறுத்தித் தண்டிக்கிறான். விடுவானா சிவன். வைகையில் வெள்ளம் ! புட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல். முடிந்து, திருவாசகம் தந்த பெருமானின் பெருமையைப் பாண்டியன் அறிந்து பணிகின்றான்.
மாணிக்கவாசகர் திருத்தல யாத்திரை புரிந்து, தில்லையிலே.. " கடவுள் இல்லை " என்றோரை வென்று " திருவாசகத் தைப்பூர்த்தி செய்து ", " திருச்சிற்றம்பலக் கோவையார்" எனும் ஞான நூ€லுப்பாடி முடித்தார். இரண்டு நூல்களையுமே இறைவனே சரிபார்த்து மகிழ்ந்து கைச்சாத்திட்டதாக வரலாறு. தீட்சிதப் பெருமக்களுக்கு மோட்சம் தருவானின் முழுமைத்வ தாண்டவ மகத்துவத்தைக் கூறிமுடித்து, ஆடல் வல்லானின் திருவடி நிழலானார் ஸ்ரீ மணிவாசகப் பெருமான்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி, நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!
- மணிவாசகர் திருவாசகம்

No comments:

Post a Comment