Sunday, November 14, 2010

மருந்தாகும் மருதாணி

மருந்தாகும் மருதாணி

Country Medicine : Henna - Food Habits and Nutrition Guide in Tamil
  • மருதாணி இந்தியா முழுவதும் வளரக்கூடியது. இது பெருஞ்செடி அல்லது சிறு மரப்பிரிவைச் சேர்ந்த தாவரம். மூட்டு வலி, குடைச்சல், தலைவலி, கை கால்வலி, எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு மருதாணியுடன் எலுமிச்சை சாறை சேர்த்து அரைத்துப் பூசலாம். மருதாணி இலையை மைய அரைத்து உள்ளங்காலில் தேய்த்தால் கால் எரிச்சல் குணமாகும்.
  • புண், நகப்புண், சுளுக்கு இவைகளுக்கு இலையை அரைத்துக் கட்டினால் குணமாகும். அம்மை நோய் ஏற்படும் போது கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க மருதாணி இலையை அரைத்து இரு காலடிகளிலும் வைத்துக்கட்டலாம். நகங்களில் தடவினால் நகம் சிவக்கும்.
  • ஆறு கிராம் எடை கொண்ட இலையை எடுத்து ஒரு பூண்டும், மிளகு ஐந்தும் சேர்த்து அரைத்து காலையில் மட்டும் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை உப்பில்லாமல் சாப்பிட்டு வந்தால் வெண் புள்ளிகள் நீங்கும்.
  • மருதாணி இலையை வெந்நீரில் ஓர் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் இறுத்து இருபது நாட்கள் வரை காலையில் மட்டும் குடித்து வர சொறி, படைகள் நீங்கும்.
  • மருதாணி இலையை அரைத்து ஒரு கரண்டி சாறு எடுத்து 90 மில்லி பாலுடன் கலந்து கொடுக்க கை கால் வலி நீங்கும். இதன் பூவை இரவில் தூங்கும் போது தலையணையின் கீழ் வைத்து தூங்கினால், நல்ல உறக்கம் வரும். வெப்பம் குறையும். விதைகளின் ஊறல் கஷாயத்தை தலைவலிக்கு ஒத்தடம் கொடுக்க குணமாகும்.
  • இலைகளை அரைத்துப் பூசினால் தலைவலி நீங்கும். இதன் விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தேய்த்தால் எரிச்சல் குறைந்து குளிர்ச்சி கிடைக்கும். இதுவாத நோய்களை குணமாக்குகிறது

No comments:

Post a Comment